வார ராசிபலன் 15.3.2026 முதல் 21.3.2026 வரை

Published on

மேஷம்

வெற்றிமேல் வெற்றி வந்து உங்களைச் சேரும் வாரம். வெற்றி ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பாக்கிய ஸ்தான அதிபதி குரு பகவான் வக்கிர நிவர்த்தி அடைகிறார். அதிர்ஷ்டமும் நிம்மதியும் தேடி வரும். திடீர் அதிர்ஷ்டத்தால் ஏற்றம் உண்டாகும். ஆடம்பரச் செலவை குறைத்து சேமிப்பை அதிகரிக்க திட்டமிடுவீர்கள். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும்.

கணவன் மனைவி ஒற்றுமை பெருகும். கருத்து வேறுபாட்டால் பிரிந்த கணவன்-மனைவி மீண்டும் இணைந்து குடும்பம் நடத்துவார்கள். திருமண வயதில் இருப்பவர்களுக்கு மனதில் நினைத்தது போன்ற சிறப்பான நல்ல வரன்கள் தேடி வரும். நண்பர்கள், தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்கள் வாழ்க்கை துணையால் சகாயமான பலன்கள் உண்டு.

தடைபட்ட அனைத்து முயற்சிகளும் துரிதமாகும். இழந்த அரசுப் பணி மீண்டும் கிடைக்கும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவார்கள். உயர் கல்வியில் நிலவிய மந்த நிலைமாறும். சிலர் மன நிம்மதிக்காக ஆன்மீக சுற்றுப் பயணம் செல்வார்கள். அமாவாசை அன்று தயிர்சாதம் தானம் வழங்கவும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com