

கன்னி
அதிபுத்திசாலியான கன்னி ராசியினரே! பிறக்கப் போகும் பராபவ ஆண்டு அனுகூலமான ஆண்டாக அமைய நல்வாழ்த்துக்கள். ஆண்டின் துவக்கத்தில் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் 2.6.2026 முதல் பதினொன்றாம் இடமான லாப ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.
ஆண்டு முழுவதும் சனிபகவான் கண்டகச் சனியாக பலன் தருவார். 5.12.2026 முதல் பன்னிரெண்டாம் மிடமான விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது பகவான் 11ம் இடமான லாப ஸ்தானத்திற்கு செல்கிறார். ஆறாம் இடத்தில் சஞ்சரித்த ராகு பகவான் ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானம் செல்கிறார்.
பராபவ ஆண்டின் பொது பலன்கள்
எந்த ஒரு செயலையும் தொலைநோக்குப் பார்வையுடன் சிந்தித்து செயல்படும் கன்னி ராசியினருக்கு கோட்ச்சார கிரகங்களில் குரு பகவான், ராகு, கேதுக்கள் மிகச் சாதகமாக உள்ளார். சனிபகவான் சற்று சுமாரான நிலையில் பலன் தருவார். குருபகவான் லாப ஸ்தானமான 11ம்மிடம் செல்லுவது சிறப்பு. கண்டகச் சனியால் ஏற்பட்ட இன்னல்களை லாப ஸ்தானத்திற்கு வரும் குரு பகவான் ஈடு செய்யப்போகிறார்.
நல்லது, கெட்டது நன்மை தீமைகளை சீர்தூக்கி பார்த்துச் செயல்பட வேண்டும். தைரியம், தெம்பு கூடும்.உங்களின் தோற்றம் பொலிவு பெறும். மனதில் அமைதி குடிகொள்ளும். தடை, தாமதங்கள் விலகி அனைத்து முயற்சிகளும் வெற்றி தரும்.எதற்கும் அஞ்சாமல் கம்பீரமாக சிந்தித்து செயல்படுவீர்கள்.சாஸ்த்திர ஞானம் மிகும். அழகாக ஆடம்பரமாக உங்களை அலங்கரிக்க தனி கவனம் செலுத்துவீர்கள்.
இந்த தமிழ் புத்தாண்டு கன்னி ராசிக்காரர்களின் நிலையை சீர் செய்யவே வருகிறதோ? என்று வியக்கும் வகையில் நற்பலன்கள் உங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும். இந்த பாக்கியம் மறுபடியும் உங்களுக்கு கிடைக்க 12 வருடம் காத்திருக்க வேண்டும். ராகு/கேதுவால் வெளிநாட்டு வியாபாரத் தொடர்பு ஏற்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக இருக்கும்.
உணவுப் பொருள் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்டு தேவைப்படும் பொருளை விற்கும் தொழிலில் இருப்பவர்களுக்கு இது ஒரு பொற்காலம். உணவு, ஆடை ஆபரணங்கள் ஏற்றுமதி தொழிலில் அபாரமான வளர்ச்சி ஏற்படும். குறுக்கு வழியில் பொருள் ஈட்டும் எண்ணம் தோன்றும்.
மறைமுக எதிரிகளால் ஏற்பட்ட தொழில் முடக்கம் இடையூறுகள் சீராகும். தொழிலில் புதிய கிளைகளை துவக்கி நல்ல லாபங்கள் பார்க்கலாம். சம்பளத்திற்கு சென்றவர்கள் கூட புதிய தொழில் முயற்சியில் ஈடுபடுவார்கள். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்பு கூடி வரும். மூத்த சகோதரம், சித்தப்பா, இளைய மனைவி மூலம் ஆதாயம் உண்டு. குல இஷ்ட தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.
உத்திரம் 2, 3, 4
தன வரவில் தன் நிறைவு உண்டாகும் வருடம்.இது ராஜயோக அமைப்பாகும். அதிர்ஷ்டம் அரவணைக்கும்.தொட்டது துலங்கும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பல்வேறு சுப பலன்கள் உண்டாகும்.
தொழிலில் உன்னத நிலையை அடைய முடியும். செல்வாக்கு, திறமை மற்றும் கவுரவத்தோடு செயல்பட்டு சிறப்பும் பெருமையும் அடைய முடியும். திறமைகளின் மூலம் பணியில் பொறுப்புகள் உயரும்.அசையும், அசையாச் சொத்து வாங்கத் தேவையான கடன் தொகை கிடைக்கும்.
கண்டகச் சனியின் காலம் என்பதால் வரனை தேர்வு செய்வதில் சற்று நெருடல் இருக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.வீடு, வாகன முயற்சி ஜெயமாகும். திருமணம் கை கூடும். மாமியார் நாத்தனாரால் ஏற்பட்ட மன உளைச்சல் குறையும்.
முக்கிய குடும்பத் தேவைகளை நிறைவு செய்வீர்கள்.கூட்டுத் தொழிலில் மாற்றம் ஏற்படலாம். நண்பர்களை நம்பி புதிய பொறுப்புகளை ஒப்படைப்பதை தவிர்க்கவும்.பொதுக் காரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவான சூழல் உண்டாகும்.
அஸ்தம்
எதிர்பாராத நல்ல திருப்பங்கள் உண்டாகும் வருடம். கோட்ச்சார கிரக சம்பந்தம் தன வரவை அதிகரிக்கும். சிரமமான செயல்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள்.மனதில் இருந்த கவலைகள் சஞ்சலங்கள் குறைய துவங்கும்.சாமர்த்தியமாக செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும்.
அரசு வழியில் எதிர்பார்த்த அனுகூலமான சகாயங்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.தம்பதிகள் ஒற்றுமையாக இருப்பார்கள்.சுப விரயங்கள் அதிகமாகும்.வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள் பிறரின் பெயரில் சொத்து வாங்குவதை தவிர்க்கவும்.
வேலை பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட சச்சரவுகள் சீராகும்.ஞாபக மறதி பிரச்சனை குறையும். வதந்திகளை பொருட்படுத்தாமல் செயல்படவும். முக்கிய முடிவுகளில் பொறுமை வேண்டும்.கண் திருஷ்டி, போட்டி,பொறாமை போன்றவற்றால் வைத்தியச் செலவு உருவாகும். பிறவிக் கடன், பொருள் கடன் தீர்க்க உகந்த காலம்.
சித்திரை 1, 2
மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டிய வருடம். வீடு மாற்றம், தொழில் மாற்றம், ஊர் மாற்றம் என பல்வேறு மாற்றத்தை சந்திப்பீர்கள். சிலருக்கு இடமாற்றம் கவலையைத் தரும். வரவும், செலவும் சீராக இருக்கும். உடன் பிறந்த சகோதர, சகோதரிகள் ஒன்றுகூடி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த ஊதிய உயர்வு மற்றும் போனஸ் மனதை மகிழ்விக்கும்.
பதவி உயர்வும் நல்ல சம்பளமும் கிடைக்கும். புத்திர பிராப்த்தம் சித்திக்கும்.மன வேதனையைத் தந்த பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொள்வார்.சொந்தங்கள் பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். வயோதிகர்களுக்கு முழங்கால் வலி, மூட்டு வலி போன்ற உடல் உபாதைகள் கட்டுக்குள் இருக்கும்.
வங்கிக் கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. காதல் விவகாரங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. ஆன்மீக வழிபாட்டில் ஈடுபட மலைபோல் வந்த துன்பம் பனி போல விலகும்.கண்டகச் சனியின் காலம் என்பதால் மனம் மற்றும் உடலை கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பது நல்லது. குலதெய்வம், முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும்.
திருமணம்
லாப குருவின் பார்வை 3,5,7ம்மிடத்தில் பதிகிறது. ஆனால் கண்டாச் சனியின் காலம் என்பதால் சுய ஜாதக வலிமை மற்றும் தசா புக்திக்கு ஏற்ப திருமணத்தை முடிவு செய்வது நல்லது. சிலருக்கு பெற்றோர்களை மீறி காதல் திருமணம் நடைபெறும்.
பெண்கள்
சுப பலன்களால் மனம் மகிழும் வருடம்.குரு பலத்தால் மன வலிமை அதிகரிக்கும். பெண்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். இது வரை தடைபட்ட விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக நடந்து உங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும்.
உத்தி யோகத்தில் இரு க்கும் பெண்கள் திறமையாக செயல்பட்டு சாதகமான பலன் காண்பார்கள்..கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகளின் செயல்பாடுகள் மனதிருப்தியைத் தரும். கருப்பை தொடர்பான பிரச்சனைகள் சீராகும். முக்கிய முடிவுகளை எடுப்பதில் மன தடுமாற்றம் ஏற்படலாம்.
பொருளாதாரம்
எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி பெறுவீர்கள். கடந்த காலங்களில் பட்ட கஷ்டத்திற்கு தற்போது பலன் கிடைக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும்.
ஐந்திற்கும், பத்திற்கும் அல்லாடிய நிலை மாறும். இது வரை கண்டிராத வகையில் நல்ல பொருளாதார முன்னேற்றம் கூடும்.பணவரவு அதிகரிக்கும். நன்றாக சிந்தித்து பேசி காரியம் சாதிப்பீர்கள்.வீண் செலவுகளை குறைத்து வருமானத்திற்கு ஏற்ப திட்டமிட்டு நிதானமாக செயல்பட்டால் கடன் சுமை குறையும்.
பரிகாரம் லாப குருவால் சாதகமான பலனை அடைய புதன்கிழமை சக்கரத்தாழ்வாரை துளசி அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.