மீனம்- 2026 தமிழ்ப்புத்தாண்டு ராசிபலன்

வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்.
மீனம்- 2026 தமிழ்ப்புத்தாண்டு ராசிபலன்
Published on

மீனம்

இறை நம்பிக்கை நிறைந்த மீன ராசியினருக்கு பிறக்கப் போகும் பராபவ ஆண்டு எண்ணியது ஈடேறும் வருடமாக அமைய நல்வாழ்த்துக்கள்.

ஆண்டு முழுவதும் ராசியில் சனி பகவான் என்று ஜென்ம சனியாக பலன் வழங்குவார். ஆண்டின் துவக்கத்தில் கேந்திரத்தில் நிற்கும் ராசி அதிபதி குரு பகவான் 2.6.2026 பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு செல்வார். வருட ஆரம்பத்தில் ராகு பகவான் 12ம்மிடமான அயன சயன விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பார்.

கேது பகவான் ஆறாம் இடமான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிப்பார். 5.12.2026 முதல் ராகு பகவான் லாப ஸ்தானத்திற்கு செல்கிறார் கேது பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானம் செல்வார்.

பராபவ ஆண்டு பொது பலன்கள்

தைரியமும் தன்நம்பிக்கையும் அதிகரிக்கும்.உங்களை சாதாரணமாக நினைத்தவர்கள் கூட உங்களது திறமைகளை உணர்வார்கள். வாழ்க்கையை நகர்த்துவதில் இருந்த சிரமங்கள் சீராகும். நிம்மதியாக இருப்பீர்கள்.

உயர்குலத்தவராலும் , உறவினர்களாலும் பெரிய உதவிகள் கிடைக்கும். மதப்பற்று மிகும். குழந்தைகளின் நலனில் ஆர்வம் உருவாகும். நல்ல துணிச்சலும் , குரு பக்தியும் ஏற்படும். பிள்ளைகளுக்கு திருமணம் நடத்துவீர்கள். பேரன், பேத்தி, கொள்ளு பேரன் பேத்தி என பாக்கியம் தொடர்பான அனைத்து பலன்களும் நடக்கும். பிள்ளைகளின் கல்வி ஆர்வம், முன்னேற்றம் மன நிம்மதி தரும்.

உடன் பிறந்தவர்களிடம் நிலவி வந்த கருத்துவேறுபாடுகள் மறையும். சிலர் வெளியூர், வெளிநாட்டில் செட்டிலாகலாம். புனித யாத்திரைகள் செல்வீர்கள். முன்னோர்களின் நல்லாசிகள் உங்களை வழி நடத்தும்.ஒரு சிலருக்கு தந்தையின் பதவியை ஏற்று செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்படும்.உங்களின் குலம் தொடர்பான கோவில் பூஜைகள், திருவிழாக்கள்,குடும்ப சுப நிகழ்வுகளில் முதல் மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்கும்.

பலருக்கு புதிய மொழியை கற்பதில் ஆர்வம் அதிகரிக்கும். ஒரு சில காரியங்கள் ஆரம்பத்தில் தடைபட்டாலும் முடிவில் நல்லவிதமாக உங்களுக்கு சாதகமாக முடியும்.மருமகனால் ஏற்பட்ட சங்கடங்கள் அகலும். வம்பு, வழக்குகள் சாதகமாகும்.

கவுரவப் பதவிகள், குல தெய்வ அனுகிரகம் கிடைக்கும்.பிறரின் பொறாமை குணத்தால் கண் திருஷ்டி உருவாகலாம்.தாய்மாமன் மூலம் அனுகூலம் கிடைக்கும். வீடு மனை சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும்.அரசு வகை ஆதாயம் நிச்சயம் உண்டு.

வியாபாரத்தில் நிலவிய மந்த நிலை நீங்கி நல்ல முன்னேற்ற மான பலன்கள் ஏற்படும்.தொழிலில் லாபம் அதிகரிக்கும்.ஜென்ம சனியால் மெமோ வாங்கி வேலைக்கு செல்லாமல் இருந்தவர்களுக்கு வேலையில் சேர உத்தரவு வந்து விடும்.

வேலையில் சிரமம் இருப்பவர்கள் சுய ஜாதக பரிசீலனைக்கு பிறகு வேலை மாற்றம் செய்வது நல்லது. வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். காது, மூக்கு தொடர்பான நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு அறுவை சிகிச்சையில் தீர்வு கிடைக்கும்.

தொழிலில் போட்டிகள் இருப்பினும் சமாளித்து வெற்றி காண்பீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக இருக்கும். மாணவர்கள் உயர் கல்விக்காக வெளிநாடு செல்லலாம்.பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் மும்முரமாக ஈடுபடுவீர்கள். எதிரிகளின் கை தாழ்ந்து உங்கள் கை ஓங்கும்.வீடு கட்டும் பணிகள் நிறைவடையும். எந்த செயலையும் இடம் பொருள் ஏவல் பார்த்து நடத்த வேண்டும் யாரையும் பகைக்க கூடாது. காலத்தின் அருமை அறிந்து செயல்பட வேண்டும்.

பூரட்டாதி 4

நீண்ட நாள் முயற்சிகள் வெற்றியைத் தரும் வருடம். உங்களின் கற்பனைகள் கனவுகள் நனவாகும். இளமையாக பரபரப்பாகவும், சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். முன்னேற்றமான மாற்றங்கள் ஏற்படும்.இழந்த அனைத்து இன்பங்களையும் மீட்டுப் பெறப் போகிறீர்கள்.

பங்குச் சந்தை ஆதாயம் இரட்டிப்பாகும்.அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும்.எல்ல விஷயத்தையும் பொறுப்புடன் பொறுமையாக கையாள வேண்டும்.பணம் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம்.தொழிலில் சீரான முன்னேற்றம் இருக்கும்.

ஊர் மாற்றம், நாடு மாற்றம் வரலாம்.குல தெய்வம் மற்றும் முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். சொத்துக்கள், அழகு ஆடம்பர பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். சுப விசேஷங்கள் நடக்கும்.

தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வதால் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம். அரசியல் பிரமுகர்களின் பொறுப்புகள் கூடும்.மாணவர்கள் அக்கறையாக படிப்பார்கள்.

உத்திரட்டாதி

எதையும் வெல்லக்கூடிய ஆற்றல் உண்டாகும் வருடம். எந்த சூழ்நிலையும் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ஆற்றல் கூடும். நீண்ட நாள் ஆசைகள், கனவுகள் நிறைவேறும்.எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும்.செல்வச் செழிப்பில் மிதப்பீர்கள்.

காது, மூக்கு, தொண்டை தொடர்பான ஆரோக்கிய கேடுகளை அறுவை சிகிச்சையால் சரி செய்ய உகந்த நேரம். வெளிநாட்டு முயற்சிகள் பலன் தரும்.பொருளாதார நிலையில் நல்ல நிரந்தரமான உயர்வு ஏற்படும்.தாய் வழிச் சொத்தை பிரிப்பதில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.விவகாரத்து வரை சென்ற வழக்குகள் திரும்பப் பெறப்படும்.

திருமண விசயத்தில் வேண்டாம் என்று ஒதுக்கிய வரனே சாதகமாக முடியும்.அதிக வேலைப் பளுவால் உரிய நேரத்தில் சாப்பிட முடியாமல் அல்சர் போன்ற உடல் உபாதைகள் வரலாம் என்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

பணிச் சுமை அதிகரிக்கும்.உத்தியோகஸ்தர்கள் வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்து மேல் அதிகாரிகளின் சொல்படி நடப்பது முன்னேற்றத்துக்கு உதவும்.

ரேவதி

எதிர்பார்த்த முன்னேற்றங்களால் மகிழும் வருடம். வருமானம், பெயர், புகழ் அந்தஸ்து உயரும். ஒரு முக்கிய கோரிக்கைக்காக குல தெய்வத்திற்கு வேண்டுதல் வைப்பீர்கள். ஒழுக்கமே உயர்த்தும் என்பதை உணர்ந்து செயல்படுவீர்கள்.வேற்று மொழி கற்பதில் ஆர்வம் அதிகரிக்கும். வேற்று மொழி பேசும் நண்பர்கள் கிடைப்பார்கள்.

பெரிய தொகையை கடனாக கொடுக்கும் முன்பு பலமுறை யோசிக்க வேண்டும்.பங்கு வர்த்தகர்கள் புத்திசாலித்தனத்துடன் செயல்படுவது அவசியம்.பெரிய முதலீடுகளை குடும்ப உறுப்பினர்களின் பெயரில் முதலீடு செய்வது நல்லது. வெளிநாட்டு வேலை வாய்ப்பு கைகூடும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளிகளை அனுசரித்துச் சென்றால் நெருக்கடி நிலையை சமாளிக்க முடியும்.

வாழ்க்கைத் துணையுடன் இருந்த பனிப் போர் மறையும். அரசியல்வாதிகள் மெளனமாக இருந்தால் மன நிம்மதி நிலைக்கும்.விண்ணப்பித்த வீடு, தொழில் முன்னேற்ற கடன் கிடைக்கும்.வீடு மாற்றம் அல்லது வேலை மாற்றம் ஏற்படும்.

திருமணம்

ராசி பூர்வ புண்ணிய ஸ்தானம் பாக்கிய ஸ்தானம் பலம் பெறுவதால் திருமண வாய்ப்பு கூடி வரும். சிலருக்கு மறு விவாகம் நடக்கும்.

பொருளாதாரம்

பொருளாதார ஏற்றத் தாழ்வு அகலும். வட்டிக்கு வட்டி கட்டிய நிலைமாறும். செல்வாக்கால் மற்றவர்களால் மதித்திடக்கூடிய நிலையை அடைவீர்கள்.நிறைந்த வருமானம் இருக்கும்.அடமானத்தில் இருந்த நகைகள் மீட்கப்படும்.புதிய அணிகலன்கள் ,அழகு, ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

தன வரவில் தன்னிறைவு உண்டாகும்.பொருளாதர முன்னேற்றம் மகிழ்சிச்யை தரும்.பல்வேறு விதமான யோக பலன்கள் வீடு தேடி வரும்.வாழ்க்கைத் தேவைகள் படிப்படியாக பூர்த்தியாகும். நெருக்கடிகள் விலகும் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும்.

பெண்கள்

முயற்சிகள், எண்ணங்கள் பலிதமாகும் வருடம். தடைபட்ட நல்ல முயற்சிகள் துரிதமாகும்.தனத்தை பெருக்குவது பற்றியும், தன் குடும்பத்தை காப்பது பற்றியும் சிந்தனை அதிகமாக இருக்கும். மகிழ்சியான குடும்ப வாழ்க்கை அமையும்.மனதில் திடமான சிந்தனைகள் தோன்றும்.வெற்றி புகழ் மதிப்பு, மரியாதை கிடைக்கும். எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி செயல்பட்டு வெற்றி பெறும் தைரியம் உருவாகும்.

ஆன்ம பலம் பெருகும். உங்களை துரத்திய அசிங்கம், அவமானம் , அதிர்ஷ்டக்குறைபாடு இருந்த இடம் தெரியாது. தந்தையின் பூர்வீகச் சொத்துக்கள் உங்கள் பெயரில் மாற்றி எழுதப்படும். கணவன், மனைவி உறவில் அன்பு மிளிரும். பெண்களுக்கு பிறந்த வீட்டுச் சொத்தில் கிடைத்த பங்கு புகுந்த வீட்டில் கவுரவப்படுத்தும்.

பரிகாரம் பராமரிப்பு இல்லாத சிவாலயங்களின் பராமரிப்பு பணிக்கு உதவவும். தீபமேற்ற எண்ணெய் வாங்கித்தரவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com