அடுத்த மாதம் புதிய சாதனங்களை அறிமுகம் செய்யும் ஆப்பிள்: கசிந்த தகவல்

ஆப்பிள் நிறுவனம் ஆண்டுதோறும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் புதுவகை ஐபோன்-ஐ அறிமுகப்படுத்துவது குறிப்பிடத்தக்கது.
ஐபோன் எஸ்.இ 3 மாடல்கள்
ஐபோன் எஸ்.இ 3 மாடல்கள்
Published on

ஆப்பிள் நிறுவனம் அடுத்த மாதம் புதிய சாதனங்களை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிமுக நிகழ்ச்சி வரும் மார்ச் 8-ம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதன்படி, ஆப்பிள் நிறுவனத்தின் 5-வது தலைமுறை புதிய ஐபேட் ஏர், 13 இன்ச் மேக்புக் ப்ரோ எம்2, 27 இன்ச் ஐமேக் ப்ரோ, மேக் மினி மற்றும் ஐபோன் எஸ்.இ 3 ஆகிய சாதனங்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

ஐபோன் எஸ்.இ 3-ல் ஐபோன் 13 சீரிஸில் இடம்பெற்றுள்ள 5nm A15 பயோனிக் பிராசஸர், 3 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அறிமுகமாகவுள்ள புதிய ஐபோனில் 4.7 இன்ச் எல்.சி.டி டிஸ்பிளே, 12 மெகா பிக்ஸல் கேமரா சென்சார் ஆகியவையும் இடம்பெறும் என கூறப்படுகிறது. இதன் விலை ரூ.45,000 இருக்கலாம் என்று கருதப்படுகிறது. 

இதன்மூலம் இந்த புதிய ஐபோன், ஓன்பிளஸ் 9 ஆர்.டி மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்.இ ஆகிய ஆண்ட்ராய்டு போன்களுக்கு கடும் போட்டியாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com