தரவரிசை (சினிமா)

எப்படி இருக்கிறது 'தி ஒடிஸி..' மகாகாவியத்திற்கு நியாயம் செய்தாரா நோலன்? - திரைவிமர்சனம்
கி.மு. 8 ஆம் நூற்றாண்டில் மகாகவி ஹோமரால் எழுதப்பட்ட மாகாவியம் 'ஒடிஸி'. டிரோஜன் போரில் வென்று டிராய் நகரை கைப்பற்றிய பின்னர் கிரேக்க பேரரசன் ஒடிசியஸ், தனது நாடான இத்தாக்காவுக்கு திரும்பும் பயணத்தை பேசுவதே இக்காவியம். 24 புத்தகங்களாக மொத்தம் 600 பக்கங்களை கொண்டது இது.

டிரோஜன் போரில் வென்ற பின்னர் ஒடிசியஸ் அவன் செல்லும் வழியில் சந்தித்த ஆபத்துகளை கடந்து அவனுக்காக காத்திருக்கும் மனைவி பெனிலோப், மகன் டெலிமாச்சோஸ் இடம் எப்படி சென்றடைந்தான் என்பதுவே இதன் கதைக் கரு. போரின் கோரங்கள் துரத்த, வழியில் அவன் சந்திக்கும் அசாதரண தடைகளே கதையின் அச்சாணி.

நோலனின் மேதைமை

ஒடிஸி கதையை தழுவி இதன் முன்னரும் பல திரைப்படங்கள் வந்துள்ளன. ஆனால் இப்படி ஒரு உயிர்ப்பான கதையுடன் கிறிஸ்டோபர் நோலனின் திரை மேதைமை இணைந்தால் எப்படி இருக்கும்?.. அதுவே 'தி ஒடிஸி' திரைப்படம்.

இன்செப்ஷன், இன்டர்ஸ்டெல்லார், டெனெட் உள்ளிட்ட சைன்ஸ் பிக்ஷன் படங்கள் மூலம் அதிகம் அறியப்படும் கிறிஸ்டோபன் நோலனுக்கு புராண கதைக்களம் புதிது. ஆனால் போர்ப் பின்னணி புதிதல்ல.

இரண்டாம் உலகப்போரை 'டன்கிரிக்' படம் மூலம் கண்முன் காட்டிய நோலன், 'ஓபன்ஹைமர்' மூலம் வெடிகுண்டு கண்டிடுபிடித்த ஓபன்ஹைமரின் மனசாட்சியத்தை முன்வைத்து போரின் கொடூரங்களை பேசியிருந்தார்.

அந்த வகையில் போர் பின்னணியில் நோலன் எடுக்கும் மூன்றாம் படம் 'தி ஒடிசியஸ்'. எனவே இதை கிறிஸ்டோபர் நோலனின் 'வார் ட்ரையாலஜி' எனலாம்.

கதை - நடிப்பு

கதையின் நாயகன் ஒடிசியஸ் ஆக நடிகர் மேட் டாமன் மிரட்டியுள்ளார். அவரின் வழி, போர், போரின் கொடூரங்களால் உண்டான குற்றவுணர்வு, வீடு திரும்பதுலக்கான பேரவா, வழியில் எதிர்ப்படும் சாகசங்கள் என கதையை நகர்த்துகிறார் நோலன்.

பல உயிர்களை பலி கொண்டு போரில் பெறும் வெற்றியை வீரம் எனக் கூறும் வரையறை கேள்விக்கு உள்ளாகிறது.

படத்தில் கையாளப்பட்டுள்ள களம், டிரோஜன் போருக்கு பின் ஒடிஸியஸ் மேற்கொள்ளும் பயணத்துடன் விரிய, அவன் வென்று வந்த போரின் வலிகள் அவனை அழுத்துகிறது. இதை தன் அழுத்தமான நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார் மேட் டாமன். மறுப்புரம் குடும்பத்திடம் சென்றடையும் குறிக்கோள் ஒடிசியஸை முன்னேறிச் செல்ல வைக்கிறது.

மனைவி பெனிலோப் உடன் ஒடிசியஸ்க்கு இருக்கும் உறவுப் பிணைப்பு படத்தில் பேசப்பட்டுள்ளது. பெனிலோப் ஆக திரையில் தோன்றும் நடிகை அன்னா ஹாத்வே அந்த பிணைப்பை நம்பும்படியாக கடத்தும் பணியை திறம்பட செய்திருக்கிறார். படத்தில் வரும் மற்றொரு பாசப் பிணைப்பு பெனிலோப் தனது மகன் டெலிமாச்சோஸ் உடன் கொண்டது. டெலிமாச்சோஸ் ஆக வரும் டாம் ஹாலண்ட், ஒரு பேரரசனின் மகனாக, தந்தையின் வருகைக்கு காத்திப்பதன் அலைபாய்வை தேர்ந்த முறையில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஆன்டினஸ் இக்கதையின் வில்லன் என ஒரு வகையில் கூறலாம். ஒடிஸியஸ் வருவதற்கு முன், அவன் மகன் டெலிமாச்சோஸை கொன்றுவிட்டு, மனைவி பெனிலோபை தன்வசப்படுத்தி இத்தக்காவை கைப்பற்ற நினைக்கும் கேரக்ட்டர். இதில் நடித்துள்ள ராபர்ட் பேட்டின்சனும் வழக்கம்போல தன் கதாபாத்திரத்தோடு ஒன்றும்படிக்கான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இயக்கம்

பிரமாண்டத்திற்கு பெயர் போனவர் என்பதை நோலன் மீளுமொருமுறை நிரூபித்துள்ளார்.

ஒடிஸியஸின் பயணத்தை அதலபாதாளம் முதல் நெடிதுயர்ந்த மலைகள் வரை, குகைகள், கடல்கள், சுழல்கள் என ஒடிஸியஸின் சாகச பயணத்தை செதுக்கியிருக்கிறார் நோலன்.

மறுபுறம் இந்த பிரமாண்ட வெளிகளுக்கு நேரெதிராக குறுகிய அறைகள், மாளிகையின் இருள் மூலைகள் என பெனிலோப், டெலிமாச்சோஸ், ஆன்டினஸ் போர்ஷனை பண்ணியிருக்கிறார். இந்த மாறுபட்ட புறச்சூழல்களை அவரவர் பாத்திரங்களின் மனோவிகற்பங்களை வெளிப்படுத்தும் கருவியாக கையாண்டிருக்கிறார் அவர்.

நூற்றுக்கணக்கான பக்கங்கள் கொண்ட ஒரு கதையில் எதை பிரதானப்படுத்த வேண்டும், எந்த உணர்வுகளை பார்வையாளர்களுக்கு கடத்த வேண்டும் என்ற நோலனின் தெளிவு படம் முழுக்க வெளிப்பட்டு உள்ளது. உறவுச் சிக்கல், எடுக்கப்படும் முடிவுகள், அதன் விளைவுகள், தர்க்கம், வலி, துரோகம், குற்றவுணர்வு, மனவலிமை, மனமுடைவு என 'படம் பேசுகிறது'.

ஒளிப்பதிவு - படத்தொகுப்பு

நோலனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் ஹொயிட் வேன் ஹொய்டெமா ஐந்தாவது முறையாக அவருடன் இணைந்து இப்படத்தில் பணியாற்றியுள்ளார்.

ஒரு மகா காவியத்தை எப்படி காட்சி அமைப்புகளில் கொண்டு வர வேண்டும் என்பதில் ஹொய்டெமாவும் நோலனும் பெருமதியான அக்கறை எடுத்துக்கொண்டதை படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் உணர முடியும்.

முழுக்க முழுக்க ஐமேக்ஸ் கேமராக்களால் எடுக்கப்பட்ட காட்சிகளை நேர்த்தியாக எடிட் செய்து படத்தின் சமநிலைக்கு படத்தொகுப்பாளர் ஜெனிபர் லேம் நியாயம் செய்திருக்கிறார்.

நவீன உலகின் மனிதர்கள் என்ற பிரஞயை உடைத்து ஒரு தொன்ம வாழ்வியலுக்கு படம் நம்மை இட்டுச் செல்கிறது என்றே சொல்லலாம்.

இசை

இசையமைப்பாளர் லூட்விக் கோரன்சன் படத்தின் பிரமாண்டத்திற்கும், உணர்வுக்கும் கடத்தியதாக தனது பின்னணி இசையை கோர்த்துள்ளார். எங்கு இசையும், எங்கு அமைதியும் வேண்டும் என்பதை உணர்ந்து செயல்பட்டிருக்கிறார்.

ஹார்ட்டின் - திரைவிமர்சனம்
கதை

ஜெய்ப்பூரில் நண்பரின் உணவகத்தில் வேலை செய்யும் சனத், ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் இமயாவுடன் நட்பாக பழகுகிறார். அந்த நட்பு காதலாக மாறினாலும், முதல் காதல் தோல்வியின் வலியால் சனத் அதை ஏற்க மறுக்கிறார்.

பிறகு இமயாவின் அன்பால் மனம் மாறி காதலிக்க தொடங்கும் சனத், ஒரு விபத்தில் சிக்கி கடந்த 6 ஆண்டுகால நினைவுகளை இழக்கிறார்.

அதனால் இமயாவையே மறந்துவிட்டு, தனது முதல் காதலியான மடோனா செபாஸ்டியனை தேடி செல்கிறார்.

இறுதியில் சனத் யாருடன் இணைந்தார்? மடோனா செபாஸ்டியன் ஏன் சனத்தை விட்டு சென்றார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிப்பு

படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் சனத், காதல் தோல்வியால் உடைந்த இளைஞனாகவும், நினைவுகளை இழந்த பிறகு வேறு மனநிலையிலும் இயல்பாக நடித்திருக்கிறார்.

புதுமுகமான இமயா முதல் படத்திலேயே கவனம் ஈர்க்கிறார். மடோனா செபாஸ்டியனும் தனது கதாபாத்திரத்தை அளவாக கையாண்டிருக்கிறார்.

மற்ற கதாபாத்திரங்களில் நடித்து இருப்பவர்கள் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.

இயக்கம்

காதல், நினைவிழப்பு ஆகியவற்றை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் கிஷோர் குமார். சுவாரஸ்யமான கருவை தேர்வு  செய்து அனைவருக்கும் பிடிக்கும் விதமாக படத்தை கொடுத்து இருக்கிறார்.

குறிப்பாக இறுதியில் நாயகன் யாரை தேர்வு செய்கிறார் என்ற எதிர்பார்ப்பு படத்தை  சுவாரஸ்யமாக நகர்த்துகிறது.

ஒளிப்பதிவு & இசை

ஒளிப்பதிவாளர் முகேஷ்வரன்.வி, ஜெய்ப்பூர், ஊட்டி பகுதிகளை அழகாக காட்டியிருக்கிறார். ராஜேஷ் முருகேசனின் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்க்கிறது.

பாலன்: தி பாய் - திரைவிமர்சனம்
கதை

கர்ப்பிணியாக சிறை தண்டனை அனுபவித்து வரும் ஃபர்சானா பலதிங்கல், சிறையிலேயே ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுக்கிறார். சில ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலையாகும் அவர், கடந்த காலத்தில் சந்தித்த வலிகளாலும், துரோகங்களாலும் யார் மீதும் நம்பிக்கை வைக்க முடியாமல், தனது மகனுடன் இடம் இடமாக அலைந்து வாழ்கிறார்.

ஒரு கட்டத்தில் தனியாக வசிக்கும் வயதான பெண்ணை கவனித்துக் கொள்ளும் வேலை கிடைக்க, அங்கேயே நிரந்தரமாக தங்க முடிவு செய்கிறார். மகனையும் பள்ளியில் சேர்த்து அமைதியான வாழ்க்கையை தொடங்குகிறார். ஆனால், கடந்த காலத்தின் நிழல்கள் அவரை தொடர்ந்து துரத்திக்கொண்டே இருக்கின்றன. அதனால் தினமும் பள்ளியில் இருந்து வரும் மகனை ஒரு குறிப்பிட்ட இடத்தில் காத்திருக்க சொல்லி, “அம்மா கண்டிப்பாக வருவேன்” என உறுதியளிக்கிறார்.

ஆனால் ஒரு நாள் அவர் வரவில்லை. நீண்ட நேரம் காத்திருந்த சிறுவனை பொதுமக்கள் காவல்துறையிடம் ஒப்படைக்கிறார்கள். இறுதியில் அம்மாவுக்கு என்ன ஆனது? மகன் மீண்டும் தன் அம்மாவை சந்தித்தானா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிப்பு

படத்தின் மிகப்பெரிய பலமே ஃபர்சானா பலதிங்கலின் நடிப்பு. எப்போதும் ஒரு பயத்துடனும், குற்ற உணர்வுடனும் வாழும் பெண்ணின் மனநிலையை மிகவும் இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக மகனை பார்த்துக் கொள்ளும் தாயின் பாசத்தையும், உள்ளுக்குள் இருக்கும் பதற்றத்தையும் கண்களிலேயே கடத்தி விடுகிறார்.

சிறுவன் பாலனாக நடித்திருக்கும் ஆதிசேஷன் கே.ஆர்., பல காட்சிகளில் வசனங்களை விட தனது முகபாவனைகளால் கவனம் ஈர்க்கிறார். அம்மாவை தேடும் ஏக்கமும், தனிமையின் வலியும் அவரது நடிப்பில் நன்றாக வெளிப்படுகிறது. வளர்ந்த பாலனாக வரும் ஜினனும் உணர்வுப்பூர்வமான நடிப்பால் கதைக்கு வலு சேர்த்திருக்கிறார்.

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ஜீன் பவுல் லால், தனது கதாபாத்திரத்தின் கோபம் மற்றும் பழிவாங்கும் மனநிலையை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். சிறப்பு தோற்றத்தில் வரும் டொவினோ தாமஸின்  நடிப்பு படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

இயக்கம்

எளிமையான கதையை பரபரப்பும் உணர்வும் கலந்த திரைக்கதையாக மாற்றியிருக்கும் ஜித்து மாதவனின் எழுத்து பாராட்டுக்குரியது. அதை இயக்குநர் சிதம்பரம் மிகவும் நேர்த்தியாக கையாள்ந்து, ஆரம்பம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை கதையுடன் பயணிக்க வைத்திருக்கிறார்.

பெரிய ஆக்‌ஷன், மாஸ் காட்சிகள் எதுவும் இல்லாமல், ஒரு தாய் - மகன் உறவின் வலியையும் பாசத்தையும் மையமாக வைத்து நகரும் இந்த படம், பல இடங்களில் மனதை நெகிழ வைக்கிறது. சில இடங்களில் கதை மெதுவாக நகர்ந்தாலும், அதனை மீறி உணர்வுகள் வேலை செய்கின்றன.

ஒளிப்பதிவு - இசை

ஒளிப்பதிவாளர் ஷைஜு காலித், கதையின் அமைதியையும் தனிமையையும் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.  சுஷின் ஷாமின் பின்னணி இசை உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கு மேலும் ஆழம் சேர்க்கிறது.

காட்டாளன் - திரைவிமர்சனம்
கதை

கேரளாவின் வனப்பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சுனில், யானைகளை வேட்டையாடி அதன் தந்தங்களை கடத்தி பெரும் லாபம் பார்க்கிறார். அவரது தொழிலுக்கு போட்டியாக வரும் கபீர் துகான் சிங், காவல்துறையின் உதவியுடன் அந்த தந்தங்களை கைப்பற்ற முயற்சிக்கிறார். இந்த மோதலுக்கு நடுவே நாயகன் ஆண்டனி வர்கீஸ் களமிறங்குகிறார்.

ஆரம்பத்தில் சுனிலின் தரப்பில் செயல்படும் ஆண்டனி வர்கீஸ், பின்னர் பழங்குடியின மக்களின் பக்கம் நின்று கடத்தல் கும்பல்களுக்கு எதிராக போராட தொடங்குகிறார். இதனால் ஒன்றுக்கொன்று எதிராக இருந்த சுனிலும், கபீர் துகான் சிங்கும் கைகோர்க்க, அவர்களை எதிர்த்து ஒரு பெரிய போராட்டத்திற்கு தயாராகிறார் ஆண்டனி வர்கீஸ். இந்த மோதலில் வெற்றி பெற்றது யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிப்பு

படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் ஆண்டனி வர்கீஸ் திரையில் தோன்றும் விதம், அவரது உடல்மொழி, தோற்றம் என பல இடங்களில் மோகன்லாலை நினைவுபடுத்துகிறது. அதிக வசனங்கள் இல்லாமல், பார்வை மற்றும் உடல்மொழி மூலமாக கதாபாத்திரத்திற்கு வலு சேர்க்க முயற்சித்திருக்கிறார். குறிப்பாக சண்டைக் காட்சிகளில் அவரது அர்ப்பணிப்பு தெரிகிறது.

சுனில் வழக்கம்போல கொடூரமான வில்லனாக மிரட்டுகிறார். கபீர் துகான் சிங்கும் ஸ்டைலான வில்லனாக தனக்கான இடத்தை பிடிக்கிறார். துஷாரா விஜயன் குறுகிய நேரமே வந்தாலும், ஆக்‌ஷன் காட்சிகளில் தனது உழைப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பார்த் திவாரி, ஜெகதீஷ், சித்திக், ஹனன் ஷா, ஹிப்ஸ்டர் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

திரைக்கதை

காடு, பழங்குடியின மக்கள், யானை தந்த கடத்தல், கொடூரமான வில்லன்கள், மாஸான ஹீரோ, இடைவிடாத சண்டைக் காட்சிகள் என ஒரு பெரிய ஆக்‌ஷன் உலகத்தை உருவாக்க முயற்சி செய்து இருக்கிறார் இயக்குனர் பால் ஜார்ஜ். ஆனால் அந்த உலகத்திற்குள் நம்மை முழுமையாக இழுத்துச் செல்ல வேண்டிய திரைக்கதை பலவீனமாக இருப்பதால், படம் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்த தவறுகிறது.

யானை தந்த கடத்தல் போன்ற முக்கியமான விஷயத்தை மையமாக வைத்திருந்தாலும், அதைப் பற்றிய ஆழமான விவாதங்கள் படத்தில் இல்லாதது வருத்தம். பழங்குடியின மக்களின் வாழ்க்கை, அவர்களின் பிரச்சனைகள், சுற்றுச்சூழல் பாதிப்புகள் போன்ற விஷயங்களை பேசுவதற்கான வாய்ப்பு இருந்தும், இயக்குநர் அதில் கவனம் செலுத்தவில்லை. கே.ஜி.எப், புஷ்பா, விக்ரம் போன்ற படங்களின் தாக்கம் படம் முழுவதும் தெரிகிறது.

ஒளிப்பதிவு

ஒளிப்பதிவாளர் ரெனாடைவின் வேலை படத்தின் மிகப்பெரிய பலம். காடு சார்ந்த காட்சிகள், சண்டைக் காட்சிகள், கதாபாத்திர அறிமுகங்கள் அனைத்தையும் பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

இசை

ரவி பஸ்ரூரின் பின்னணி இசை ஆக்‌ஷன் காட்சிகளுக்கு தேவையான மாஸ் உணர்வை கொடுத்தாலும், பல இடங்களில் அது அளவுக்கு அதிகமாக சத்தமாக மாறுகிறது.

த்ரிஷ்யம் 3 – திரைவிமர்சனம்
வருண் பிரபாகரன் காணாமல் போன வழக்கில் இருந்து தனது குடும்பத்தை காப்பாற்றி அமைதியாக வாழ்ந்து வரும் ஜார்ஜ்குட்டி, இந்த முறை மீண்டும் கடந்த காலத்தின் நிழல்களால் சிக்கிக்கொள்கிறார். மூத்த மகள் அஞ்சுவின் திருமண ஏற்பாடுகளில் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும் நேரத்தில், பழைய வழக்குடன் தொடர்புடைய பலரும் மீண்டும் களமிறங்குகிறார்கள்.

வருண் பிரபாகரன் வழக்கை மீண்டும் திறக்க முயற்சிகள் நடக்க, ஜார்ஜ்குட்டி குடும்பத்தை சுற்றி சந்தேகங்களும், பிரச்சனைகளும் அதிகரிக்கிறது. மறுபக்கம் பழைய பகைகள் ஒவ்வொன்றாக உயிர்ப்பெடுத்து அஞ்சுவை நெருங்க, இந்த முறை ஜார்ஜ்குட்டி தனது குடும்பத்தை எப்படி காப்பாற்றுகிறார், வருண் பிரபாகரன் வழக்கின் இறுதி என்ன ஆனது என்பதே ‘த்ரிஷ்யம் 3’ படத்தின் மீதிக்கதை.

ஜார்ஜ்குட்டியாக நடித்திருக்கும் மோகன்லால், இந்த முறையும் முழுக்க முழுக்க தனது நடிப்பால் படத்தை தாங்கி நிற்கிறார். அமைதியாக பேசும் காட்சிகளிலும், குடும்பத்திற்காக உடைந்து போகும் தருணங்களிலும் அவரது நடிப்பு மிரட்டல். குறிப்பாக கண்களில் தெரியும் பதட்டம் மற்றும் குற்ற உணர்வுகளை மிக நுட்பமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஜார்ஜ்குட்டியின் மனைவியாக நடித்திருக்கும் மீனா, வழக்கம்போல் இயல்பான நடிப்பின் மூலம் எமோஷனல் காட்சிக்கு பலம் சேர்த்திருக்கிறார். குடும்ப உறுப்பினர்களாக வரும் நடிகர்களும் கதையின் பதட்டத்தை நன்றாக கடத்தியிருக்கிறார்கள்.

முதல் இரண்டு பாகங்களை விட இந்த முறை உணர்வுகளுக்கும், மன அழுத்தத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஜீத்து ஜோசப். வழக்கமான திரில்லர் பாணியில் மட்டும் இல்லாமல், குடும்ப உறவுகள், குற்ற உணர்வு மற்றும் மனநிலைகளை மையமாக வைத்து கதையை நகர்த்தியிருப்பது படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. குறிப்பாக இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் காட்சி மீண்டும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.

முதல் பாதி மெதுவாக நகர்ந்தாலும், அதற்குள் பல சஸ்பென்ஸ்களை அமைதியாக விதைத்திருக்கிறார் இயக்குநர். இரண்டாம் பாதியில் ஒவ்வொரு திருப்பமும் எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது. சில இடங்களில் திரைக்கதை நீளமாக தோன்றினாலும், கிளைமாக்ஸ்க்கு பிறகு அது பெரிய குறையாக தெரியவில்லை.

சதீஷ் குருப் ஒளிப்பதிவு, மலைப்பகுதி மற்றும் இரவு நேர காட்சிகளை அழகாக பதிவு செய்திருக்கிறது. அனில் ஜான்சனின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம். பல காட்சிகளுக்கு இவரது இசை உயிர் கொடுத்து இருக்கிறது.

தீயோர் கூடம்– விமர்சனம்
ஒரே ஒரு நாள், ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை என்பதைக் கொண்டு நகரும் கதைகளில், கதாபாத்திரங்கள் பற்றி அதிக தகவல் தெரியாது. யாராக இருந்தாலும் எதையும் செய்யக்கூடிய வாய்ப்பு இருக்கும். அதுபோன்ற ஒரு கதைக்களத்தில் உருவான படம் தான் தியோர் கூடம்.

உணவு டெலிவரி வேலை செய்யும் டேனி, ஒரு வீட்டிற்குள் சிக்கிக்கொள்கிறார். அங்கே சில மர்மமான நபர்களுடன் சேர்ந்து, “ராபின் ஹூட்” போல பணத்தை திருடி, அதை தனது அனாதை இல்லத்திற்காக பயன்படுத்த நினைக்கும் நாயகி சாக்ஷி அகர்வால் இருக்கிறார். சில சூழ்நிலைகளால் டேனி மற்றும் சாக்ஷி இணைந்து பணத்தை பகிர்ந்து கொள்ள முடிவு செய்கிறார்கள். ஆனால் அதன் பின்னர் நிகழும் திருப்பங்களே கதையை முன்னேடுக்கிறது.

டேனி மற்றும் சாக்ஷி அகர்வால் தங்களுக்கான கதாபாத்திரங்களை சரியாக செய்துள்ளனர். சாக்ஷி கதாபாத்திரம் ஆரம்பத்தில் ஒரு நல்ல நோக்கத்துடன் இருப்பது போல இருந்தாலும், சில இடங்களில் அந்த நிலைத்தன்மை குறைவாக தெரிகிறது. வையாபுரி மற்றும் ஜாவா சுந்தரேசன் காட்சிகள், சீரியஸாக இருந்தாலும், சில இடங்களில் தவறுதலாக நகைச்சுவையாக மாறுகிறது.

இயக்குனர் சக்திவேல், ஒரு சாதாரண மனிதன் ஆபத்தான சூழ்நிலையில் சிக்கிக்கொள்வதை மையமாக கொண்டு கதை சொல்ல முயற்சி செய்துள்ளார். முதல் பாதியில் திருப்பங்கள் நன்றாக இருந்தாலும், இரண்டாம் பாதியில் அவை குறைந்து, முன்னரே எதிர்பார்க்கக்கூடிய நிலைக்கு கதை செல்கிறது. பல திருப்பங்கள் தற்செயலாக நடப்பது போல உணர்வு வருகிறது.

படம் ஆரம்பத்திலேயே கதைக்குள் இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் சில திருப்பங்கள் சுவாரஸ்யமாக வேலை செய்கிறது. கதாபாத்திரங்களின் உண்மை முகம் மற்றும் அவர்களின் நோக்கம் மெதுவாக வெளிப்படுகிறது. ஆனால் அவர்களின் தனிப்பட்ட ஆழம் குறைவாக இருப்பது தெரிகிறது.

படத்தின் நேரம் குறைவாகவும், காட்சிகள் வேகமாக நகர்வதும் ஒரு பிளஸ். சில நல்ல டுவிஸ்ட் மற்றும் சில இடங்களில் வரக்கூடிய லேசான நகைச்சுவை படத்தை சலிப்பில்லாமல் நகர்த்துகிறது.

பிரசாத் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது. அதுபோல், இசை பேட்டை வசந்தின் பின்னணி இசையும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

லெஜண்ட் சரவணனின் 'லீடர்' – திரைவிமர்சனம்
கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் மகளுடன் வாழ்ந்து வருகிறார். இவர் ஹார்பரில் வரும் கார்களுக்கு சர்வீஸ் செய்து வருகிறார். ஹார்பரில் சட்டவிரோதமாக கண்டெய்னர் ஒன்று இருப்பதாகவும் அதில் ஏதோ ஒரு மர்மம் இருப்பதாகவும் போலீஸ் அதிகாரியான ஆண்ட்ரியா சந்தேகப்படுகிறார். இதை லெஜண்ட் சரவணன் மூலம் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். ஆனால் அதற்கு லெஜண்ட் சரவணன் மறுப்பு தெரிவிக்கிறார்.

ஆனால் ஆண்ட்ரியா, லெஜண்ட் சரவணன் சரவணனை பகடைக்காயாக வைத்து கண்டெய்னரில் இருக்கும் மர்மத்தையும் அதற்கு பின்னாடி இருக்கும் பாகுபலி பிரபாகரனையும் பிடிக்கிறார். மேலும் கண்டெய்னரில் இருக்கும் பொருட்களை அழித்து  பாகுபலி பிரபாகரனை லெஜெண்ட் சரவணன் கொலை செய்கிறார். கண்டெய்னரில் இருக்கும் பொருளின் சொந்தக்காரரான சந்தோஷ் பிரதாப் லெஜண்ட் சரவணனை பழி தீர்க்க வருகிறார்.

இறுதியில் சந்தோஷ் பிரதாப் லெஜண்ட்  சரவணனை பழி தீர்த்தாரா? லெஜண்ட் சரவணன் யார்? கண்டெய்னரில் இருக்கும் பொருட்களை லெஜண்ட் சரவணன்  அழிக்க காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக வரும் லெஜண்ட் சரவணன், தனது முதல் படத்தை விட இந்த படத்தில் முன்னேற்றம் காண்பித்து இருக்கிறார். மாஸ் சீன்கள், ஆக்‌ஷன் காட்சிகள், ஸ்டைலிஷ் ஆகியவற்றில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். குறிப்பாக ஆக்‌ஷன் பகுதிகளில் கவனிக்க வைத்து இருக்கிறார். எமோஷனல் காட்சிகளில் கண்கலங்க வைத்து இருக்கிறார்.

போலீஸ் அதிகாரியாக வரும் ஆண்ட்ரியா மற்றும் ஷாம் இருவரும் சிறப்பாக நடித்து திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள். நாயகியாக நடித்திருக்கும் பயல் ராஜ்புத் அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வில்லனாக நடித்திருக்கும் சந்தோஷ் பிரதாப், மிரட்டி இருக்கிறார்.

இயக்குநர் துரை செந்தில்குமார், முழுக்க கமர்ஷியல் பாணியில் கதையை நகர்த்தியிருக்கிறார். ஆக்‌ஷன், சென்டிமெண்ட், மாஸ் டயலாக் ஆகியவற்றை சரியான அளவில் கொடுத்து இருக்கிறார். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக திரைக்கதையே நகர்த்தி இருக்கிறார்.

படத்தின் மிகப்பெரிய பலம் அதன் ஆக்‌ஷன் மற்றும் ஜிப்ரானின் பின்னணி இசை. பெரிய அளவில் எடுத்திருக்கும் காட்சிகள், மாஸ் பில்ட்அப் எல்லாம் திரையில் பார்க்கும் போது ரசிக்க முடிகிறது. வெங்கடேஷின் ஒளிப்பதிவு சிறப்பு.

சாத்தான் தீ டார்க் விமர்சனம்
பல வருடங்களுக்கு பிறகு ஒரு கிராமத்தில் மர்மமான மரணங்கள் தொடர, அதற்கான காரணத்தை கண்டுபிடிக்க முயலும் காவல்துறை அதிகாரி, பல அதிர்ச்சிகரமான உண்மைகளை சந்திக்கிறார். இதே நேரத்தில், நாயகி ஐராவின் அம்மா விசித்திரமாக நடந்து கொள்வதும், நாயகனுக்கும் அமானுஷ்ய அனுபவங்கள் ஏற்படுவதும் கதையை திகில் பாதையில் நகர்த்துகிறது. இவை அனைத்திற்கும் பின்னால் இருக்கும் மர்மம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

நாயகனாக நடித்துள்ள எஃப்.ஜெ, தனது கதாபாத்திரத்திற்கு தேவையான அளவில் நடித்து இருக்கிறார். நாயகியாக ஐரா, பயமும் பதட்டமும் கலந்த காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார்.

படத்தின் மிகப்பெரிய பலம் மோன பத்ரே. ஆவி பிடித்த பெண்ணாக அவரது நடிப்பு சில காட்சிகளில் உண்மையிலேயே பயத்தை ஏற்படுத்துகிறது. கிளைமாக்ஸ் பகுதியில் வரும் சாந்தினி தமிழரசன், குறைந்த காட்சிகளில் இருந்தாலும் கதைக்கு முக்கியத்துவம் சேர்க்கிறார்.

இயக்கம்

சாத்தான் வழிபாடு, நரபலி, அமானுஷ்ய சம்பவங்கள் ஆகியவற்றை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் மணிகண்டன் ராமலிங்கம். ஆரம்பம் முதல் பல விஷயங்கள் தெளிவில்லாமல் நகர, பார்வையாளர்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது. கிளைமாக்ஸ் பகுதியில் சில பதில்கள் கிடைத்தாலும், முழு விளக்கம் இல்லாமல் இரண்டாம் பாகத்துக்கான முன்னோட்டமாக முடிவடைகிறது. பயமுறுத்தும் காட்சிகள் மற்றும் கருத்தில் கவனம் செலுத்தியிருந்தாலும், அதை தெளிவாக சொல்ல தவறியிருக்கிறார்.

ஒளிப்பதிவு

பாலா ஜி ராமசாமி ஒளிப்பதிவு, ஒரு வீடு மற்றும் குறைந்த இடங்களை வைத்து அச்சத்தை உருவாக்க முயற்சித்திருக்கிறது.

இசை

அஸ்வின் கிருஷ்ணாவின் பின்னணி இசை திகில் உணர்வை அதிகரிக்கிறது. ஆனால் சில இடங்களில் அதிக சத்தம் குறையாக தெரிகிறது.

Movie Review | திவ்யா - திரை விமர்சனம்
மதுரை அருகே உள்ள கிராமத்தில் தாத்தா, தம்பி உடன் வாழ்ந்து வரும் நாயகன் ஆர்.ஜே.பி, கல்லூரியில் படித்து கொண்டு பறை அடித்து வருகிறார். இவர் படிக்கும் கல்லூரியில் புதியதாக சேரும் நாயகி கேத்தியை ராக்கிங் செய்யும் போது பிரச்சனை ஏற்படுகிறது. இந்த பிரச்சனைக்கு பிறகு இருவருக்கும் பழக்கம் ஏற்படுகிறது. பழக்கம் நாளடைவில் காதலாக மாறுகிறது.

இருவரும் காதலித்து வரும் நிலையில் கேத்தியின் அப்பாவிற்கு தெரிய வருகிறது. உடனே கேத்தியை கல்லூரியில் இருந்து நிறுத்திவிட்டு, வேறு ஒருவருடன் திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார்கள். நாயகன் ஆர்.ஜே.பி, கேத்தியை அழைத்துக் கொண்டு ஊரைவிட்டு ஓட திட்டம் போடுகிறார்.

இறுதியில் நாயகன் ஆர்.ஜே.பி, நாயகி கேத்தி இருவரும் காதலில் ஜெயித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் ஆர்.ஜே.பி, எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சில இடங்களில் சாதாரண நடிப்பை கொடுத்து இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் கேத்தி, அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகன் ஆர்.ஜே.பி, நண்பர்களாக நடித்திருக்கும் சபி, ஜிவி இருவரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

நாயகன் தாத்தா பவுன்ராஜ், நாயகி அப்பா அனந்த் ராம், நாயகி அம்மா கலாவதி ஆகியோர் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.

இயக்கம்

நாயகனாக நடித்து இருக்கும் ஆர்.ஜே.பி, இப்படத்தை இயக்கி இருக்கிறார். ஆணவ கொலையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார். பல படங்கள் இந்த சாயலில் வந்தாலும், கிளைமாக்சில் மட்டும் கொஞ்சம் வித்தியாசம் காண்பித்து இருக்கிறார். மெதுவாக செல்லும் திரைக்கதை படத்திற்கு பலவீனம். இன்னும் வலுவான காட்சிகள் வைத்திருந்தால் கூடுதலாக ரசித்து இருக்கலாம்.

இசை

சங்கர் ராம் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கவனிக்க வைத்து இருக்கிறார்.

ஒளிப்பதிவு

செல்வகுமார் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

அந்தோனி – திரைவிமர்சனம்
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போருக்குப் பிறகான மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் தான் ‘அந்தோனி’. போரின் வலி, இழப்பு, புலம்பெயர்வு, மீண்டும் வாழ வேண்டும் என்ற மனிதர்களின் போராட்டம் ஆகியவற்றை அமைதியான கதையாக்கத்தில் சொல்ல முயற்சித்திருக்கிறார்கள் இயக்குநர்கள் சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஷ்வர்.

ஆழ்கடலில் மீன் பிடித்து வாழும் அந்தோனி, கடலை தாயைப் போல நேசிக்கும் மனிதன். ஒருநாள் கடலில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நளினியை காப்பாற்றுகிறார். அவர்களுக்குள் உருவாகும் உறவு குடும்பமாக மாறுகிறது. மகள் நிலா பிறந்த பிறகு வாழ்க்கை அமைதியாக சென்று கொண்டிருக்கும்போது, மனைவிக்கும் மகளுக்கும் உயிருக்கு ஆபத்தான நோய் இருப்பது தெரிய வருகிறது. அந்த உண்மையை உள்ளத்தில் புதைத்து வைத்து, குடும்பத்தை காப்பாற்ற போராடும் ஒருவனின் மன வேதனையே படத்தின் மையமாகிறது.

நடிகர்கள்

அந்தோனி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கயல் வின்சென்ட், அதிகமான வசனங்களின்றி உணர்ச்சிகளை முகபாவனைகளில் வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார். மனைவி மீது அன்பு, மகள் மீது பாசம், உள்ளுக்குள் உடைந்து போகும் மனிதன் என்ற பல நிலைகளை அமைதியான நடிப்பில் காட்டியிருக்கிறார்.

நளினியாக நடித்திருக்கும் டிஜே பானு, மிக இயல்பான நடிப்பில் கதைக்கு உயிர் கொடுக்கிறார். மகளாக வரும் சிறுமி ஆஷனா, சின்ன சின்ன காட்சிகளிலேயே மனதில் நிற்கும் அளவுக்கு நடித்திருக்கிறார்.

நிழல்கள் ரவி, அருள்தாஸ், சுதர்சன் உள்ளிட்டவர்கள் கதைக்கு தேவையான அளவில் வந்து இயல்பாக நடித்திருக்கிறார்கள். படத்தில் பெரும்பாலும் உள்ளூர் மனிதர்களையே பயன்படுத்தியிருப்பது காட்சிகளுக்கு நம்பகத்தன்மை கொடுக்கிறது.

இயக்கம்

முதல் பாதி மெதுவாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதியில் உணர்ச்சி அதிகரித்து கதையை பிடிப்பாக கொண்டு செல்கிறது. சில இடங்களில் காட்சிகள் நீளமாக இருப்பதும், வட்டார மொழி புரிய சிரமம் இருப்பதும் சிறிய குறையாக தெரிகிறது.

மொத்தத்தில், போருக்குப் பிறகு வாழ முயலும் மனிதர்களின் மனநிலையை அமைதியான உணர்ச்சி கதையாக சொல்லியிருக்கும் படமாக ‘அந்தோனி’ கவனம் ஈர்க்கிறது. பெரிய சம்பவங்கள் இல்லாமல், மனித உணர்வுகளை மட்டும் நம்பி நகரும் படமாக இது அமைந்துள்ளது.

ஒளிப்பதிவு

ரிஷி செல்வத்தின் ஒளிப்பதிவு படத்தின் பெரிய பலமாக உள்ளது. இலங்கை கடற்கரை, கிராமங்கள், தெருக்கள், இயற்கை காட்சிகள் அனைத்தும் அழகாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

இசை

இசைஞானி இளையராஜாவின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். பாடல்களும் பின்னணி இசையும் காட்சிகளின் உணர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது.

Kolaiseval
நாயகன் கலையரசனும்- நாயகி தீபா பாலுவும் காதலித்து பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துக் கொள்கின்றனர். வெளியூரில் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள்.

நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் தீபா பாலுவும், கலையரசனும் நிறைசூலி தெய்வதற்த்திற்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்தால் குழந்தை நல்லபடியாக பிறக்கும் என்பதால் இருவரும் தங்களது ஊருக்கு திரும்புகிறார்கள்.

குலதெய்வத்தை வணங்க சென்றாலும், மனதுக்குள் ஒருவித பயத்துடனும், பதற்றத்துடனும் செல்லும் தீபா பாலு, எதிர்பாக்காத பிரச்சனை ஒன்றை எதிர்கொள்கிறார்.

சாமி கும்பிட்டு வீடு திரும்ப நினைக்கும் கலையரசன் தீபாவை சுற்றி திடுக்கிடும் சம்பவங்கள் அரங்கேறுகிறது. அந்த அபாயத்தில் இருந்து அவர்கள் மீண்டார்களா, இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.

நடிகர்கள்

தனது எதார்த்தமான நடிப்பு மற்றுரும் கடுமையான உழைப்பாலும் கதைக்கு பெரும் வலிமை சேர்த்திருக்கிறார் நாயகன் கலையரசன். கதாநாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை தீபா பாலு, குடும்ப பாங்கான முகத்தோடு வலம் வருகிறார்.  அவர், இதயம் கனக்க செய்யும் நடிப்பை வெளிப்படுத்தி பார்வையாளர்களை கண்கலங்க வைக்கிறார்.

கடினமான காட்சிகளில் அதிகமாக மெனக்கெட்டு நடித்திருக்கும் அவருக்கு தனி பாராட்டுகள். பால சரவணன் குணச்சித்திர நடிகராக நடிப்பில் முத்திரை பதித்திருக்கிறார்.

இயக்கம்

சமூகத்தில் நடந்துக் கொண்டிருக்கும் கொடூரமான செயலை மையக்கருவாகக் கொண்டு, அதை எதார்த்தமான முறையில் திரைப்படமாக்கியிருக்கிறார் இயக்குநர் வி.ஆர்.துதிவாணன்.

காதல் ஜோடி அனுபவிக்கும் வலியும், வேதனையும் மிக்கதாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

உணர்வுப்பூர்வமான காதல் தம்பதிக்கு இறுதியில் நடக்கும் விபரீதம் வன்முறையின் உச்சமாக இருக்கிறது. கிளைமேக்ஸ் காட்சிகள் சற்று முகம் சுழிக்க வைக்கிறது.

ஒளிப்பதிவு

பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு கிராமத்து அழகையும், மக்களின் கொடூரமான மனங்களையும் எதார்த்தமாக காட்சிப்படுத்தியிருக்கிறது.

இசை

சாந்தன் இசையமைப்பில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை உயிரூட்டும் வகையில் உள்ளது.

வீடியோக்கள்

கொலைச்சேவல்

Vengeance
தன்னைப் பற்றி அனைவரும் எப்போதும் பாராட்டியும், பெருமையாக பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர் அபர்ணதி.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவியாக வருகிறார். ஆனால், அந்த பாராட்டு சில நாட்களிலேயே அடங்கிப்போக, புகழ் ஆசையில் சில காரியங்களை செய்கிறார். தொடர்ந்து, 12ம் வகுப்பு, கல்லூரி என ஒருகட்டத்தில் மாவட்ட கலெக்ட்ராக பதவியில் அமர்கிளார் அபர்ணதி,

இப்படி இருக்கையில், முதலமைச்சரான இளவரசு மூலம் அபர்ணதிக்கு சில தடைகள் வருகிறது. ஆனால் தடைகளை முறியடிக்கும் அபர்ணதி, ஒருகட்டத்தில் இளவரசுவே தன் பேச்சை கேட்கும் நிலையை உருவாக்குகிறார்.

தனது பப்ளிசிட்டியை தக்கவைக்க பல்வேறு யுக்திகளை கையாலும் அபர்ணதி அசுர வளர்ச்சி அடைகிறார். ஆனால், அபர்ணதியை ஒடுக்க ஒரு கூட்டம் முயற்சிகிறது. பல தடைகளையும் உருவாக்குகிறது. அபர்ணதி அந்த தடைகளை முறியடித்து, தான் நினைத்ததை செய்து முடித்தாரா? என்பதே விறுவிறுப்பான மீதி கதை.

நடிகர்கள்

கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் அசத்தலாக நடித்துள்ளார் அபர்ணதி. துணிச்சலான பெண்ணாக நடித்துள்ள அபர்ணதி படத்திற்கு பலம். கதாபாத்திரம் படத்தை தாங்கி பிடித்துள்ளது. அபர்ணதிக்கு பாராட்டுகள்.

அரசியல் களத்தில் நடக்கும் காட்சிகள் இன்றைய அரசியல் சூழலை நினைவுப்படுத்துகிறது. படத்தில் விறுவிறுப்பை கூட்டுகிறது. சில காட்சிகளில் இன்னும் தெளிவு இருந்திருக்கலாம். இளவரசு, ஜான் விஜய், காளி வெங்கட், லிவிங்ஸ்டன், ஒய்.ஜி.மகேந்திரன், சரவண சுப்பையா என அனைவரது கதாபாத்திரங்களும் சிறப்பு.

டி.எம்.கார்த்தி, சுரேஷ் சக்கரவர்த்தி, நோபல் கே.ஜேம்ஸ், சச்சு, மங்கல், சாய் தன்யா, ரேகா நாயர், சிறுமி சம்யுக்தா அனைவரது நடிப்பும் பேசவைத்துள்ளது.

இயக்கம்

ஒரு பெண்ணின் பழிவாங்கும் குணம், தன்னைப் பற்றி மற்றவர்கள் பேச வேண்டும், பாராட்ட வேண்டும் என்ற ஆசையை கதைக்கருவாக வைத்துக் படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் ராகுல் அசோக்.

தமிழக அரசியல் சம்பவங்களை திரைக்கதையாக்கி படத்தை வேகாமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்தியிருக்கிறார். அரசியல் கள நகர்வுகளையும் அட்டகாசமாக கையாண்டு ரசிக்க வைத்துள்ளார்.

படத்தின் முதல் பாதி எந்தவித தொய்வின்றி வேகமாக நகர்ந்த அளவுக்கு இரண்டாம் பாதி நகரவில்லை. அதில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

இசை

கார்த்திக் ராஜாவின் இசை படத்திற்கு கூடுதல் பலம்.

ஒளிப்பதிவு

எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு அருமை.

வீடியோக்கள்

வெஞ்சென்ஸ்

Police Family
போலீஸ் பேமிலி திரைப்படத்தின் விமர்சனம் விரைவில்.

வீடியோக்கள்

போலீஸ் பேமிலி

Chellamada Nee Enakku
சிறுவயதில் இருந்தே நாயகன் வசீகரன் தனது தாய் செந்தியை வெறுத்து அவமானப்படுத்தி வருகிறார். ஆனால் அந்த தாய், மகன்தான் தனது உலகம் என்ற எண்ணத்தில், அவனுக்காக எண்ணற்ற தியாகங்களை செய்து அமைதியாக வாழ்ந்து வருகிறார். மகன் காட்டும் வெறுப்பையும் அவமதிப்பையும் மனதில் புதைத்து கொண்டு, ஒரு நாள் அவன் தனது அன்பை புரிந்துகொள்வான் என்ற நம்பிக்கையோடு வாழ்க்கையை தாங்கி நிற்கிறார் அந்த தாய்.

இறுதியில் வசீகரன் ஏன் தாயை இவ்வளவு வெறுக்கிறார்? அவரது தந்தை யார்? அந்த தாயின் கடந்த காலத்தில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

சிறுவயதில் இருந்து தாயை ஒதுக்கி விட்டு வாழும் வசீகரன், இறுதியில் தனது தாயின் வாழ்க்கை பின்னணி மற்றும் அவர் செய்துள்ள தியாகங்களை அறியும் தருணத்தில் மனம் உடைந்து கதறி அழும் காட்சிகள் பார்வையாளர்களையும் கண்கலங்க வைக்கிறது. மகனின் அன்புக்காக ஏங்கி தவிக்கும் தாயாக பசங்க செந்தி நடிப்பு படத்தின் முதுகெலும்பாக அமைந்துள்ளது.

காதலியாக வரும் நேகாவுக்கு காட்சிகள் குறைவாக இருந்தாலும், வசீகரனிடம் அவரது தாயின் உண்மையான பாசத்தை எடுத்துரைக்கும் காட்சிகளில் அமைதியான மற்றும் இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார். நண்பனாக வரும் அமுதவாணன் தனது கலகலப்பான வசனங்களால் படத்தின் இடையிலான சோகத்தை சற்றே குறைத்து சிரிப்பை ஏற்படுத்துகிறார். திருடன் கதாபாத்திரத்தில் வரும் போஸ் வெங்கட் மற்றும் மீரா கிருஷ்ணன் ஆகியோரின் நடிப்பு கதைக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. சில துணை கதாபாத்திரங்களுக்கு நடிப்பில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.

இயக்கம்

தாய்மகன் உறவில் இருக்கும் பாசம், வேதனை மற்றும் தியாகங்களை உணர்ச்சியோடு சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஆனந்த் சிவம். சில இடங்களில் காட்சிகள் இன்னும் அழுத்தமாக அமைந்திருந்தால் படத்தின் தாக்கம் அதிகரித்திருக்கும்.

இசை

தாஜ்நூர் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

ஒளிப்பதிவு

செல்வா.ஆர் ஒளிப்பதிவு கிராமத்து சூழலையும் கதையின் உணர்ச்சிகளையும் அழகாக பதிவு செய்துள்ளது.

வீடியோக்கள்

செல்லமடா நீ எனக்கு

Yaarra Antha Paiyan Nanthan Antha Paiyan
கார் மெக்கானிக்காக வேலை செய்யும் பால்ராஜ், தனது மனைவி காயத்ரி ரேமாவுடன் வாழ்ந்தாலும் அவர்களது இல்லற வாழ்க்கையில் சிக்கல்கள் உருவாகிறது. இந்த நிலையில், குடிகார கணவனை இழந்த சுவேதா ஸ்ரீயுடன் பால்ராஜ்க்கு ரகசிய காதல் உருவாகிறது.

ஒருபுறம் இந்த காதல் வளர்ந்துக் கொண்டிருக்க, மறுபுறம் சுவேதா மீது சப்-இன்ஸ்பெக்டர் ரவி மரியாவுக்கும் மோகம் ஏற்படுகிறது. இதனால் மூன்று பேருக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது.

இறுதியில் இவர்களின் காதல் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

கார் மெக்கானிக்காகவும், குடும்ப வாழ்க்கையில் குழப்பத்துடன் இருக்கும் மனிதராகவும் நாயகன் பால்ராஜ் இயல்பான நடிப்பில் கவனம் ஈர்க்கிறார். மனைவியுடன் ஏற்பட்ட விரிசல், அதனால் ஏற்பட்ட மன வேதனை, மறுபக்கம் புதிய காதலால் கிடைக்கும் ஆறுதல் ஆகிய உணர்வுகளை அவர் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

காயத்ரி ரேமா, கணவன் மீது கோபம் கொண்ட மனைவியாக தனது எதிர்ப்பை கண்களின் மூலம் வெளிப்படுத்தும் நடிப்பில் கவனம் ஈர்க்கிறார். சுவேதா ஸ்ரீ, வாழ்க்கையில் ஏமாற்றங்களை சந்தித்த பெண்ணாகவும், புதிய வாழ்க்கையை தொடங்க விரும்பும் மனிதராகவும் கதைக்கு தேவையான உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார். சப்-இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரவி மரியா தனது அனுபவமிக்க வில்லன் நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

இயக்கம்

குடும்ப உறவுகள், காதல் மற்றும் மனித உணர்வுகளை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பால்ராஜ். முக்கோண உறவுகளை மையமாக கொண்டு நகரும் இந்த கதையில், திரைக்கதையில் இன்னும் வலுவான தருணங்கள் இருந்திருந்தால் படம் மேலும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.

ஒளிப்பதிவு இசை

உதயன் ஒளிப்பதிவு மற்றும் விஜய் பிரபு இசை கதைக்கு தேவையான அளவில் மட்டுமே அமைந்துள்ளது.

வீடியோக்கள்

யார்ரா அந்த பையன் நான் தா அந்த பையன்

Vasool Mannan
பொறியியல் பட்டதாரியான நாயகன் ஸ்ரீதேவா, பலரிடமிருந்து பல லட்சங்கள் கடன் வாங்கி அதை திருப்பிக் கொடுக்காமல் தப்பித்து வருகிறார். எங்கு சென்றாலும் கடன்காரர்கள் துரத்த, அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காகவே வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.

இதற்கிடையே, சிறு வயதிலிருந்தே போலீஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் நாயகி நிவேதா, அதற்காக எவ்வளவு பணம் செலவாகினாலும் தயாராக இருக்கிறார்.

இந்த ஆசையை தெரிந்து கொண்ட ஸ்ரீதேவா, அதையே வாய்ப்பாக பயன்படுத்தி அவரிடம் பொய் சொல்லி பணம் வாங்க திட்டமிடுகிறார். நட்பாக தொடங்கும் அவர்களின் பழக்கம், நம்பிக்கையாக மாறும் தருணத்தில், நாயகனின் உண்மை முகம் நிவேதாவுக்கு தெரிய வருகிறது.

இதனால் கோபமடையும் அவர், போலீஸ் ஆன பிறகு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறார். இறுதியில் நிவேதா நினைத்தது நடந்ததா? ஸ்ரீதேவா எதற்காக இத்தனை கடன் வாங்கினார்? கடனை அடைத்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

நடிகர்கள்

சின்னத்திரை மற்றும் துணை வேடங்களில் நடித்துப் பழகிய ஸ்ரீதேவா, நாயகனாக இந்த படத்தில் அறிமுகமாகிறார். அப்பாவியான முகம், நம்ப வைக்கும் பொய் பேச்சு, இயல்பான உடல்மொழி என கதாபாத்திரத்திற்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் நிவேதா, புதுமுகம் என்றாலும், கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார். அளவான நடிப்பின் மூலம் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கிறார்.

நாயகியின் தந்தையாகவும், வில்லன் வேடத்திலும் வரும் வேல ராமமூர்த்தி, வழக்கமான தனது நடிப்பை வெளிப்படுத்துகிறார். நாயகனின் மாமாவாக நடித்திருக்கும் சரவண சக்தி, சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். காவல்துறை அதிகாரியாக வரும் சரவண சுப்பையா உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்கள், கதையை நகர்த்த உதவுவதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன.

இயக்கம்

காதல் மற்றும் நகைச்சுவையை மையமாக  வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் வேல் குமரேசன். பழைய பாணியிலான கமர்ஷியல் கதையை அதே பழைய பாணியிலேயே சொல்லியிருக்கிறார். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும், அதற்கேற்ற வலுவான துணை நட்சத்திரங்கள் இல்லாதது வருத்தம்.

ஔிப்பதிவு

ஒளிப்பதிவாளர் ஆர். எண். சிவகுமார், குறைந்த முதலீட்டுக்குள் தரமான காட்சிகளை பதிவு செய்திருக்கிறார்.

இசை

பரணி இசையில் பாடல்கள் கமர்ஷியல் ரகத்தில் உள்ளன. பின்னணி இசை காட்சிகளோடு சேர்ந்து பயணிக்கிறது.

வீடியோக்கள்

வசூல் மன்னன்

99/66
ரச்சிதா மகாலட்சுமி மற்றும் அவரது கணவர் சபரி, அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 66-வது எண் வீட்டை வாங்கி குடியேறுகிறார்கள். அதே குடியிருப்பில் 99-வது எண் வீட்டில் வசிக்கும் ஸ்வேதாவுடன் ரச்சிதாவுக்கு நட்பு உருவாகிறது. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வருகிறார்கள்.

இந்நிலையில், பணத்திற்காக ரச்சிதாவை கொலை செய்ய அவரது கணவர் பல்வேறு திட்டங்கள் போடுகிறார். ஆனால் ஒவ்வொரு முறையும் ரச்சிதா அதிலிருந்து தப்பித்து விடுகிறார். இதற்கிடையே ஒரு இரவு, ஸ்வேதாவை அவரது கணவர் கொலை செய்ய முயற்சிப்பதை ரச்சிதா பார்க்கிறார். அவரை காப்பாற்ற குடியிருப்புவாசிகளுடன் செல்லும் போது, ஸ்வேதா ஏற்கனவே இறந்துவிட்டார் என்பதும், 99-வது எண் வீட்டில் யாரும் வசிக்கவில்லை என்பதும் தெரிய வருகிறது.

இறுதியில் ரச்சிதாவுக்கு மட்டும் தெரியும் ஸ்வேதா யார்? அவர் ஏன் ரச்சிதாவை சந்தித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

நாயகியாக நடித்திருக்கும் ரச்சிதா மகாலட்சுமி, காதல் காட்சிகளிலும், ஆவி புகுந்த பிறகு வரும் ஆக்ரோஷமான நடிப்பிலும் கவனம் ஈர்க்கிறார். இருந்தாலும், அவரிடத்தில் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு வலுவான காட்சிகள் அதிகமாக இல்லாதது சற்று ஏமாற்றம் தருகிறது. மற்றொரு முக்கிய கதாபாத்திரமாக வரும் ஸ்வேதா, அனைத்து உயிர்களிடமும் அன்பு செலுத்தும் நல்ல மனம் கொண்ட பெண்ணாக நன்றாக நடித்திருக்கிறார்.

நாயகர்களாக நடித்திருக்கும் சபரி மற்றும் ரோகிந்த் இருவரும் புதுமுகங்களாக இருந்தாலும், தங்களது கதாபாத்திரத்தை சரியாக கையாள்கிறார்கள்.

சாம்ஸ், முல்லை, கோதண்டம், சிங்கம்புலி ஆகியோரின் காமெடி பெரிதாக தாக்கம் ஏற்படுத்தவில்லை. ஆனால் பவன் கிருஷ்ணா, கே.ஆர்.விஜயா, பி.எல்.தேனப்பன் உள்ளிட்டவர்களின் கதாபாத்திரங்கள் திரைக்கதைக்கு ஓரளவு பலம் சேர்க்கின்றன.

இயக்கம்

கதை, திரைக்கதை, வசனம், இசை என அனைத்தையும் கவனித்துள்ள இயக்குநர் எம்.எஸ்.மூர்த்தி, வழக்கமான திகில் பாணியில் கதையை சொல்லியிருந்தாலும், பல திருப்பங்களின் மூலம் படத்தை விறுவிறுப்பாக நகர்த்த முயற்சி செய்து இருக்கிறார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்ற கருத்தையும் படத்தின் மூலம் சொல்ல முயற்சித்திருக்கிறார். அதோடு, மனிதர்கள் சாதி போன்ற தேவையற்ற பிரிவுகளை விட்டு மனிதநேயத்தோடு வாழ வேண்டும் என்ற கருத்தையும் சுருக்கமாக பதிவு செய்கிறார்.

ஒளிப்பதிவு

ஒளிப்பதிவாளர் சேவிலோ ராஜா, ஒரே அடுக்குமாடி குடியிருப்பை பல்வேறு கோணங்களில் காட்சிப்படுத்தி ஒரே இடத்தில் நடக்கும் கதை என்ற உணர்வை குறைத்திருக்கிறார்.

வீடியோக்கள்

99/66

Couple Friendly
உட்புற வடிவமைப்பு துறையில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் சென்னைக்கு வரும் சந்தோஷ் சோபன், எதிர்பார்த்த வாய்ப்பு இல்லாமல் வாழ்க்கையுடன் போராடுகிறார். வாழ்வாதாரத்திற்காக பகுதி நேரமாக இருசக்கர டாக்ஸி ஓட்டி வருகிறார்.

அதே சமயம், ஐடி துறையில் முன்னேற வேண்டும் என்ற நோக்கில் வேலை தேடும் மானசா வாரணாசியை சந்திக்கிறார். இந்த இருவரும், ஒரு கட்டத்தில் ஒரே வீட்டில் தங்கி வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

இறுதியில் இவர்கள் இருவரும் ஒன்றாக இணைய காரணம் என்ன? இருவரும் வாழ்க்கையில் சாதித்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் சந்தோஷ் சோபன் தமிழுக்கு புதிய முகம் என்றாலும், நடிப்பில் புதுமை தெரியாத அளவுக்கு இயல்பை வெளிப்படுத்துகிறார். போராட்டம், நம்பிக்கை, காதல் என நடிப்பில் பளிச்சிடுகிறார்.

மானசா வாரணாசி, முதல் பாதியில் லேசான நடிப்பு மற்றும் அழகால் ஈர்க்க, இரண்டாம் பாதியில் உணர்ச்சி காட்சிகளில் கவனம் பெறுகிறார். இவர்களின் கெமிஸ்ட்ரி அதிகளவில் ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது.

யோகி பாபுவின் காட்சிகள் குறைவாக இருந்தாலும், வழக்கமான வசன டைமிங் சிரிப்பைத் தருகிறது. சுனில் ரெட்டி, லிவிங்ஸ்டன் உள்ளிட்ட துணை நடிகர்கள் கதையின் ஓட்டத்துக்கு ஏற்ற வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

இயக்கம்

காதல் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் அஸ்வின் சந்திரசேகர். ஒருவருக்கொருவர் துணையாக நிற்பதை அழகாக காண்பித்து இருக்கிறார். வழக்கமான காதல் கதையாக இருந்தாலும், படம் பார்க்கும்போது புது அனுபவத்தை அளிக்கிறது.

திரைக்கதை எளிமையான நகர்வுடன் அமைந்துள்ளது. காதல், கனவு, முயற்சி என்ற மூன்று கோட்டுகளை மையமாக வைத்து கதையை நகர்த்தி இருக்கிறார்.

ஒளிப்பதிவு

தினேஷ் புருசோத்தமனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். சென்னையில் மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் சிறப்பாக படமாக்கி இருக்கிறார்.

இசை

ஆதித்யா ரவீந்திரனின் இசை, படத்தின் உணர்ச்சி ஓட்டத்துக்கு பொருத்தமாக உள்ளது. பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் சிறப்பு.

வீடியோக்கள்

Kadhal Reset Repeat
ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவாகி உள்ள 'காதல் ரீசெட் ரிப்பீட்' படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது.

கதை:

தூரத்தில் இருந்து பார்ப்பதையே தனது காதலின் மகிழ்ச்சியாகக் கருதும் இளைஞராக நாயகன் மதும்கேஷ் வாழ்கிறார். இவர் ஒருதலையாக நாயகி ஜியா சங்கரை காதலித்து வருகிறார். ஆனால் ஜியா சங்கர், தனது நண்பரான அர்ஜுன் அசோகனை காதலிக்கிறார். இந்த நிலையில் ஜியா சங்கர் ஒரு விபத்துக்குப் பிறகு மறதியால் பாதிக்கப்படுகிறார். தூங்கி எழுந்தவுடன் முந்தைய நாளில் நடந்த  அனைத்தையும் மறந்து விடும் நிலை ஏற்படுகிறது.

தினமும் தனது வாழ்க்கையை புதிதாக தொடங்க வேண்டிய சூழ்நிலையில் தவிக்கும் அவரிடம், மதும்கேஷ் தன்னை அவரது காதலனாக அறிமுகப்படுத்தி நெருக்கமாக பழகத் தொடங்குகிறார்.

இறுதியில் மதும்கேஷ், ஜியா வாழ்க்கை என்ன ஆனது? மதும்கேஷ் பொய் சொல்லி பழகுவது ஜியாவிற்கு தெரிந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்:

ஒருதலையாக காதலித்து அதை வெளிப்படுத்த முடியாமல் மனதில் வைத்துக் கொண்டு வாழும் இளைஞராக மதும்கேஷ் இயல்பான  நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

நாயகியாக அறிமுகமாகும் ஜியா சங்கர், அழகு மற்றும் நடிப்பு இரண்டிலும் கவனம் ஈர்க்கிறார். கதையின் மையமாக இருக்கும் கதாபாத்திரம் என்பதால் அவருக்கு அதிகமான காட்சிகள் கிடைத்திருக்கிறது.

குழப்பம், காதலை உணரும் தருணங்களில்  இயல்பான நடிப்பை கொடுத்து இருக்கிறார். அர்ஜுன் அசோகன் தனது வேலையை சரியாக செய்திருக்கிறார்.

விஜி சந்திரசேகர், ஜெயப்பிரகாஷ், எம்.எஸ்.பாஸ்கர் போன்ற அனுபவம் வாய்ந்த நடிகர்களின் சிறிய காட்சிகளும் படத்திற்கு ஒரு அளவு பலம் சேர்க்கின்றன.

இயக்கம்:

முக்கோண காதல் கதையை சற்று வித்தியாசமான கோணத்தில் சொல்ல முயற்சித்துள்ள இயக்குநர் விஜய், எளிமையான காட்சிகளின் மூலம் கதையை நகர்த்தியிருக்கிறார். அழகான இடங்கள், காதல் உணர்வுகள் மற்றும் கதாநாயகியின் நடிப்பு ஆகியவை படத்திற்கு பலமாக இருந்தாலும், திரைக்கதையில் எதிர்பார்த்த அளவுக்கு வலுவான தருணங்கள் இல்லாதது ஒரு குறையாகவே தெரிகிறது.

ஒளிப்பதிவு:

ஒளிப்பதிவாளர் அரவிந்த்கிருஷ்ணா வெளிநாட்டு அழகை அழகாக பதிவு செய்து காட்சிகளை கண்களுக்கு விருந்தாக மாற்றியிருக்கிறார்.

இசை:

ஹரிஷ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை காதல் உணர்வுகளை வெளிப்படுத்த உதவுகிறது.

வீடியோக்கள்

காதல் ரீசெட் ரிப்பீட்

Mustafa Mustafa
கதை:

தனியார் தொலைக்காட்சி சேனலில் பணியாற்றும் சதீஷ், டாக்டராக இருக்கும் மோனிகா சின்னகொட்லாவை காதலிக்கிறார். இரு குடும்பங்களும் இந்த காதலை ஏற்றுக்கொண்டு திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. திருமணத்திற்கு சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், சதீஷ் வேறு ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகிறது.

இந்த விஷயம் காதலிக்கு தெரிந்தால் திருமணம் நின்றுவிடும் என்ற பயத்தில், அந்த வீடியோவை எப்படியாவது இணையத்தில் இருந்து நீக்க முயற்சி செய்கிறார் சதீஷ். இறுதியில் சதீஷின் முயற்சி வெற்றி பெற்றதா? அந்த வீடியோவை யார் வெளியிட்டார்கள்? அதன் பின்னணி என்ன?  என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்:

படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் சதீஷ் தனது வழக்கமான இயல்பான நடிப்பில் கதையை தாங்கிச் செல்கிறார். காதல், பொய், அதனால் வரும் பிரச்சனை, அதை சரி செய்யும் முயற்சி என பல நிலைகளில் அவர் தனது கதாபாத்திரத்தை சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

சதீஷின் நண்பராக நடித்துள்ள சுரேஷ் ரவி, படம் முழுவதும் அவருடன் பயணிக்கும் முக்கியமான கதாபாத்திரமாக இருக்கிறார். காமெடி காட்சிகளில் சதீஷுடன் சேர்ந்து பல இடங்களில் சிரிக்க வைக்கிறார். கருணாகரன் தனது டைமிங் வசனங்களால் சிரிப்பை ஏற்படுத்துவதோடு, கதையின் முக்கியமான திருப்புமுனை கதாபாத்திரமாகவும் கவனம் ஈர்க்கிறார்.

நாயகியாக நடித்துள்ள மோனிகா சின்னகொட்லா கதையின் தொடக்கமும் இறுதியிலும் மட்டும் வந்து சென்று இருக்கிறார். சுரேஷ் ரவியின் ஜோடியாக நடித்துள்ள மானசா செளத்ரிக்கும் பெரிய இடம் இல்லை. சாம்ஸ், லிவிங்ஸ்டன், உமா, புகழ், சூப்பர் குட் சுப்பிரமணி உள்ளிட்டவர்கள் சில காட்சிகளில் வந்து சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார்கள்.

இயக்கம்:

நாயகன் ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொண்டு, நண்பர்களின் உதவியுடன் அதிலிருந்து தப்பிக்க முயற்சிக்கும் கதையை கலகலப்பாக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் பிரவீன் சரவணன். முதல் பாதியில் வரும் நகைச்சுவை காட்சிகள் படத்தை சுறுசுறுப்பாக நகர்த்தினாலும், இரண்டாம் பாதியில் அதே பாணி தொடர்வதால் சற்று சலிப்பை ஏற்படுத்துகிறது.

ஒளிப்பதிவு:

ஒளிப்பதிவாளர் கே.எஸ்.விஷ்ணு ஸ்ரீ படம் முழுவதையும் கலர்புல்லாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

இசை:

எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட்டின் இசையில் பாடல்கள் கமர்ஷியல் பாணியில் இருக்கிறது. பின்னணி இசையும் காட்சிகளுக்கு ஏற்ப பயணிக்கிறது.

வீடியோக்கள்

முஸ்தபா முஸ்தபா

Oh Butterfly
திருமணமாகி சில மாதங்களிலேயே கணவரை இழந்த நிவேதிதா சதீஷ், அதிர்ச்சியாலும் குற்ற உணர்ச்சியாலும் மனதளவில் பாதிக்கப்படுகிறார். தன்னை சுற்றியிருப்பவர்கள் பாதிக்கப்படுவதற்கும் தானே காரணம் என்று எண்ணும் அவர், தற்கொலை முயற்சிக்கும் நிலைக்கும் தள்ளப்படுகிறார்.

அந்த நேரத்தில், துறவறம் பூண்ட அவரது சகோதரி லட்சுமி பிரியா அவரை ஆறுதல் கூறி உண்மையை புரிய வைக்க முயற்சிக்கிறார். அப்போது தனது திருமண வாழ்க்கை மற்றும் முதல் காதல் குறித்து பேசும் நிவேதிதா, தன் கணவரை தானே கொன்றதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறார்.

நிவேதிதா சதீஷ் கணவரை கொன்றதாக சொல்ல காரணம் என்ன? அவரது கணவர் இறப்பின் உண்மை என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

படத்தில் நாயகியாக நடித்திருக்கும் நிவேதிதா சதீஷ், பலமான கதாபாத்திரம் இருந்தும் தனது நடிப்பில் எதிர்பார்த்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. காதலன் மற்றும் கணவர் இடையே சிக்கிக்கொள்ளும் ஒரு பெண்ணின் மனஅழுத்தத்தை வெளிப்படுத்த வேண்டிய இடங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஆனால், உண்மை வெளிவரும் முக்கியமான தருணங்களில் அவர் வெளிப்படுத்த வேண்டிய பதற்றம், பயம் போன்ற உணர்வுகள் குறைவாக இருப்பதால் அந்த காட்சிகளின் தாக்கம் குறைந்து விடுகிறது.

நிவேதிதாவின் முன்னாள் காதலனாக சிபி சந்திரன் மற்றும் கணவராக அதுல் நடித்துள்ளனர். இருவரும் தங்களது கதாபாத்திரங்களுக்கு தேவையான அளவில் நடித்துள்ளனர். குறிப்பாக அதுல், அதிகமாக நடிக்கக்கூடிய வாய்ப்பை சரியாக பயன்படுத்தவில்லை.

சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் தனது அனுபவம் வாய்ந்த நடிப்பால் நாசர் படத்தில் கவனம் ஈர்க்கிறார். துறவறம் பூண்ட சகோதரியாக லட்சுமி பிரியா சந்திரமெளலி அமைதியான நடிப்பால் கதைக்கு தேவையான சமநிலையை தருகிறார்.

இயக்கம்

மனித வாழ்க்கையில் பல சம்பவங்கள் தற்செயலாகவே நடக்கின்றன என்பதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் விஜய் ரங்கநாதன். ஆனால், அனைத்து தரப்பு பார்வையாளர்களுக்கும் எளிதாக புரியும் வகையில் சொல்லாமல், மிகவும் மெதுவாக  திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார்.

இசை

வைசாக் சோமநாத் இசையில் பாடல்கள் பெரிதாக நினைவில் நிற்கவில்லை. பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்றவாறு அமைந்துள்ளது.

ஒளிப்பதிவு

ஒளிப்பதிவாளர் வேதராமன் சங்கரன், கதையில் இடம்பெறும் சிறு சிறு சம்பவங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து காட்சிகளை அமைத்திருக்கிறார்.

வீடியோக்கள்

ஓ பட்டர்பிளை

Vadam
ஊரில் மாடுகளை காப்பாற்றி அவற்றை பராமரிக்கும் மனிதராக நரேன் வாழ்கிறார். அவரைப் போலவே மாடுகள் மீது பாசம் கொண்டவராக அவரது மகன் விமலும் இருக்கிறார். அடிமாட்டுக்கு அனுப்பப்பட்ட ஒரு கன்றைக் காப்பாற்றி வளர்க்கும் விமல், அதற்கு பயிற்சி அளித்து மஞ்சுவிரட்டு போட்டிக்கான காளையாக உருவாக்குகிறார். பல ஆண்டுகளாக யாராலும் அடக்க முடியாத காளையின் உரிமையாளராக அவர் பெருமையுடன் வாழ்ந்து வருகிறார்.

இதற்கிடையே, விமல் ஒரு கொலை வழக்கில் சிக்கி ஜாமீனில் வெளி வருகிறார். அவரை கொலை செய்ய பலர் முயற்சிப்பதும், வாழ்க்கையில் பல பகைகள் உருவாகுவதும் கதைக்கு திருப்பங்களை ஏற்படுத்துகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாயகி சனஷ்கா ஸ்ரீயின் காதல் விமலின் வாழ்க்கையில் புதிய நம்பிக்கையை தருகிறது. ஆனால் எதிர்பாராத சம்பவங்கள் அவரின் வாழ்க்கையை மீண்டும் சிக்கலாக்குகிறது. இந்த பிரச்சனைகளில் இருந்து விமல் எப்படி மீள்கிறார்? அவரது காளை மீண்டும் மஞ்சுவிரட்டு களத்தில் சாதிக்கிறதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

மாடுகள் மீது பாசம் கொண்ட இளைஞராக விமல் வழக்கமான இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மாஸ் ஹீரோ போல காளையை அடக்கும் வீரராக இல்லாமல், காளையின் உரிமையாளராக கெத்து காட்டும் கதாபாத்திரம் அவருக்கு வேறுபட்டதாக அமைந்துள்ளது. நாயகியாக நடித்துள்ள சனஷ்கா ஸ்ரீ அழகாக தோன்றுவதோடு, சில முக்கியமான காட்சிகளில் தனது கதாபாத்திரத்தை நன்றாக வெளிப்படுத்தியுள்ளார்.

முனீஷ்காந்த் நடித்திருக்கும் குணச்சித்திர வேடம் படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. நட்டி நட்ராஜ் தனது வலுவான நடிப்பால் கதாபாத்திரத்தை சிறப்பாக எடுத்துச் செல்கிறார். நரேன், தீபா சங்கர், பால சரவணன் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

இயக்குநர்

வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை பின்னணியாக கொண்டு கமர்ஷியல் அம்சங்களுடன் கதையை சொல்ல முயற்சி செய்துள்ளார் இயக்குநர் கேந்திரன். நாயகனை சுற்றி நடக்கும் பகைமை மற்றும் உறவுகளை மையமாக வைத்து திரைக்கதையை நகர்த்தியுள்ளார். சில இடங்களில் பழைய படங்களின் சாயல் இருந்தாலும், அனைத்து தரப்பினரும் பார்க்கக்கூடிய பொழுதுபோக்கு படமாக இயக்கி இருக்கிறார்.

ஒளிப்பதிவு மற்றும் இசை

ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ்.குமார் மஞ்சுவிரட்டு காட்சிகளை இயல்பாக பதிவு செய்திருக்கிறார். டி.இமான் இசையில் பாடல்கள் பெரிதாக தாக்கம் ஏற்படுத்தவில்லை என்றாலும் பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணிக்கிறது.

வீடியோக்கள்

வடம்

With Love
குடும்ப சூழ்நிலை காரணமாக திருச்சியில் இருந்து சென்னைக்கு வந்த நாயகன் அபிஷன் ஜீவிந்த் மேட்ரிமோனி மூலம் ஒரு பெண்ணை ரெஸ்டாரண்டில் பார்க்க செல்கிறார். அங்கு சென்று பார்க்கும் போது தேடி வந்த பெண் தனது பள்ளி தோழி அனஸ்வரா ராஜன் என தெரிய வருகிறது. தொடர்ந்து திருமணம் குறித்து அபிஷனும், அனஸ்வரா ராஜனும் பேசிக் கொண்டிருக்கும் போது அனஸ்வரா ராஜன் திருமணத்துக்கு அபிஷனிடம் ஒரு நிபந்தனை விதிக்கிறார்.

திருச்சியில் இருவரும் ஒரே பள்ளியில் படித்த போது அபிஷனுக்கு- காவ்யா அனிலுடனும், அனஸ்வராவுக்கு வேறு ஒரு மாணவருடனும் ஒருதலைக் காதலாக மலர்ந்து காதல் கைகூடாமலேயே பள்ளி வாழ்க்கை முடிந்து விடுகிறது. தங்களது பழைய காதலனையும், காதலியையும் தேடி சென்று சந்திப்போம். அப்புறம் நம் திருமணத்தை பற்றி பேசலாம் என்று சொல்லி, இருவரும் முதல் காதலை தேடி செல்கிறார்கள்.

இறுதியில் அபிஷன், அனஸ்வரா ராஜன் இருவரும் முதல் காதலர்களை சந்தித்தார்களா? இருவருக்கும் திருமணம் நடைபெற்றதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் அபிஷன் ஜீவிந்த் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரு இளம் இளைஞனின் குழப்பம், கோபம், பொறாமை, தவிப்பு ஆகியவற்றை மிக எளிமையாக வெளிப்படுத்துகிறார். முன்னாள் காதலி காவ்யா குழந்தையுடன் அபிஷனை சந்திக்கும் போது அபிஷன் அவரிடம் காதலை சொல்லும் போது ரசிக்க வைக்கிறது.

நாயகியாக நடித்து இருக்கும் அனஸ்வரா ராஜன் அழகான முகபாவனைகளை வெளிப்படுத்தி இருக்கிறார். சின்ன சின்ன குறும்பு, சேட்டைகள், கோபம் என கண்களாலேயே அதிகம் பேசி ரசிக்க வைத்து இருக்கிறார்.

பள்ளி வாழ்க்கையில் நடந்த முதல் காதலை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் மதன். உணர்வோடு மட்டுமின்றி கலகலப்போடும், ரசனையோடும் சொல்லி இருக்கிறார். பள்ளிப்பருவ காதலை இளம் தலைமுறையினரை மட்டுமின்றி அனைவரையும் பள்ளி பருவத்திற்கு அழைத்து செல்லும் விதமாக படத்தை கொடுத்து இருக்கிறார்.

சான்ரோல்டன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். 'அவள் வருவாளா' பாடல் மீண்டும் திரையில் ஒலித்தது இனிமை. ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது.

மாலைமலர் ரேட்டிங்: 3.5 / 5

வீடியோக்கள்

வித் லவ்

Anthony
அந்தோனி திரைப்படத்தின் விமர்சனம் விரைவில்.

வீடியோக்கள்

அந்தோனி

Vowels
வௌவல்ஸ் திரைப்படத்தின் விமர்சனம் விரைவில்.

வீடியோக்கள்

வௌவல்ஸ்

Kenatha Kanom
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கோவில் பூசாரியாக இருக்கிறார் யோகிபாபு. ஊரில் மழை இல்லாததால் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. இதனால், மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள்.

தண்ணீர் பிரச்சனையை தீர்க்க பல்வேறு வழிகளை யோசிக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் ஊர் தலைவர் மக்களுடன் சென்று கலெக்டரிடம் தண்ணீர் வேண்டி மனு கொடுக்கிறார். ஆனாலும், நடவடிக்கை இல்லை.

இதனால், ஊர் மக்கள் சேர்ந்து நிலத்தில் தண்ணீர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க ஒருவரை அழைத்து வருகிறார்கள். அவர் கண்டுபிடித்த இடம் யோகி பாபுவின் நிலத்திற்குட்பட்டுட்டது. முதலில் மறுக்கும் யோகிபாபு பின்னர், மக்களின் நலத்திற்காக ஒப்புக்கொள்கிறார். ஆனால், அந்த இடத்தை தோண்டி பார்க்கும்போது அங்கு பெரிய டைனோசர் எலும்புக்கூடு கிடைக்கிறது.

இது வௌியே தெரியவர அந்த ஊரே அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் வருகிறது. இதற்கிடையே, யோகி பாபுவின் காதல். தண்ணீர் இல்லாத ஊருக்கு மகள் லவ்லின் சந்திரசேகரை கட்டிக்கொடுக்க மறுக்கிறார் தந்தை. பின்னர், பள்ளம் தோண்டுவதால், ஊருக்கு தண்ணீர் பிரச்சனை தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கையில் மகளை கட்டிக்கொடுக்க ஒப்புக்கொள்கிறார்.

ஆனால், டைனோசர் எலும்புக்கூடு கிடைத்த இந்த சூழலில், அந்த ஊருக்கு தண்ணீர் கிடைத்ததா? யோகி பாபு காதல் கைக்கூடியதா என்பது படத்தின் மீதிக்கதை..

நடிகர்கள்

கதாநாயகனாக நடித்திருக்ம் யோகிபாபு சிறப்பாக நடித்திருக்கிறார். யோகிபாபுவின் காதலியாக வரும் லவ்லின் சந்திரசேகர் கதாப்பாத்திரத்திற்கு பொறுத்தமாக நடித்திருக்கிறார்.

ரேச்சல் ரேபேக்கா, ராமகிருஷ்ணன், ஜார்ஜ் மரியான் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் ஊணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.

இயக்கம்

மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கைய்யா ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஊரில் ஏற்படும் தண்ணீர் பிரச்சினையை கதை கருவாக கொண்டு அனைவரும் ரசிக்கும்படியாகவும், உணர்வுப்பூர்வமாகவும் நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார்.

இசை

நிவாஸ் பிரசன்னாவின் இசை படத்திற்கு பலம்.

ஒளிப்பதிவு

படத்தின் காட்சிகள் கதைக்கு பொருத்தம்.

வீடியோக்கள்

கெணத்த காணோம்

Thaai Kizhavi
பவனுதாயி என்கிற பெயரில் தாய் கிழவியாக ஊரில் வலம் வருபவர் ராதிகா. அங்குள்ளவர்களுக்கு வட்டிக்கு விட்டு மிரட்டி வட்டி வசூலில் ஈடுபட்டு வருகிறார். ஒரு கட்டத்தில் கிழவி எப்போது இறக்கும் என ஊரே காத்திருக்கிறது.

ராதிகாவிற்கு அருள்தாஸ், பால சரவணன், சிங்கம்புலி என 3 மகன்கள், ஒரு மகளும் இருக்கிறார்கள். ஒற்றை பெண்மணியாக பிள்ளைகளை வளர்த்து வந்த ராதிகாவிற்கு திடீரென உடல்நலம் மோசமாகிறது. இன்னும் சில நாட்களில் ராதிகா இறந்து விடுவார் என்று ஊரே காத்திருக்கிறது.

அப்போது, ராதிகா 160 சவரன் சேர்த்து வைத்துள்ளது மகன்களுக்கு தெரியவருகிறது. பாசத்தால் இல்லாவிட்டாலும், நகை சொத்துக்காகவாவது தாய் ராதிகாவை காப்பாற்ற வேண்டும் என மெனக்கிடுகிறார்கள்.

இறுதியில் தாய் கிழவி உயிர் பிழைத்தாரா? அந்த 160 சவரன் நகை என்னவாயிற்று? என்பது படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

ராதிகா படத்தில் தாய் கிழவியாகவே வாழ்ந்திருக்கிறார். ஊரில் கடன் வாங்கியவர்களிடம் வட்டியை மிரட்டி வசூல் செய்யும் காட்சிகளிலும், அவருக்கான கதாப்பாத்திர காட்சிகளிலும் மிரள வைத்திருக்கிறார்.

ராதிகா மட்டுமில்லை பால சரவணன், அருள் தாஸ், சிங்கம்புலி இவர்களுடைய மகள்கள் என படத்தில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் அசர வைத்துள்ளனர். கமல் ரசிகராக வரும் சிங்கம்புலி, அவர் போடும் பாடல்கள், இடைவேளை, கிளைமேக்ஸ் எல்லாம் சரவெடி.

இயக்கம்

தாய் கிழவி மூலம் பெண்ணியம், சம உரிமை என்று நமக்கு மிரட்டலான பாடம் எடுத்துள்ளார் அறிமுக இயக்குனர் சிவக்குமார் முருகேசன் கதைக்கரு முதல் கதாப்பாத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் வரை சரியான தேர்வு. படத்திற்கு கூடுதல் பலம்.

பெண்கள் சும்மா இல்லாமல் எதாவது வேலை செய்ய வேண்டும்.. அது தான் உண்மையான சுதந்திரன் போன்ற வசனங்கள் அதிரவைத்துள்ளது. படம் முழுவதும் நகைச்சுவை, எமோஷ்னல் என அறிமுக படத்திலேயே சிக்ஸர் அடித்துள்ளார் இயக்குனர்.

மொத்தத்தில், குடும்பங்கள் கொண்டாடும் படம் இந்த தாய் கிழவி.

ஒளிப்பதிவு

ஒளிப்பதிவாளர் விவேக் விஜயகுமார் அப்படியே அந்த ஊர் மக்கள், இடம் , கலாச்சரம் என அனைத்தையும் கண்முன் கொண்டு வந்துள்ளார்.

இசை

நிவாஸ் கே பிரச்சன்னாவின் இசை படத்திற்கு கச்சிதம்.

வீடியோக்கள்

தாய் கிழவி

Movie Review | காதல் ரீசெட் ரிப்பீட் - திரை விமர்சனம்
ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவாகி உள்ள 'காதல் ரீசெட் ரிப்பீட்' படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது.

கதை:

தூரத்தில் இருந்து பார்ப்பதையே தனது காதலின் மகிழ்ச்சியாகக் கருதும் இளைஞராக நாயகன் மதும்கேஷ் வாழ்கிறார். இவர் ஒருதலையாக நாயகி ஜியா சங்கரை காதலித்து வருகிறார். ஆனால் ஜியா சங்கர், தனது நண்பரான அர்ஜுன் அசோகனை காதலிக்கிறார். இந்த நிலையில் ஜியா சங்கர் ஒரு விபத்துக்குப் பிறகு மறதியால் பாதிக்கப்படுகிறார். தூங்கி எழுந்தவுடன் முந்தைய நாளில் நடந்த  அனைத்தையும் மறந்து விடும் நிலை ஏற்படுகிறது.

தினமும் தனது வாழ்க்கையை புதிதாக தொடங்க வேண்டிய சூழ்நிலையில் தவிக்கும் அவரிடம், மதும்கேஷ் தன்னை அவரது காதலனாக அறிமுகப்படுத்தி நெருக்கமாக பழகத் தொடங்குகிறார்.

இறுதியில் மதும்கேஷ், ஜியா வாழ்க்கை என்ன ஆனது? மதும்கேஷ் பொய் சொல்லி பழகுவது ஜியாவிற்கு தெரிந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்:

ஒருதலையாக காதலித்து அதை வெளிப்படுத்த முடியாமல் மனதில் வைத்துக் கொண்டு வாழும் இளைஞராக மதும்கேஷ் இயல்பான  நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

நாயகியாக அறிமுகமாகும் ஜியா சங்கர், அழகு மற்றும் நடிப்பு இரண்டிலும் கவனம் ஈர்க்கிறார். கதையின் மையமாக இருக்கும் கதாபாத்திரம் என்பதால் அவருக்கு அதிகமான காட்சிகள் கிடைத்திருக்கிறது.

குழப்பம், காதலை உணரும் தருணங்களில்  இயல்பான நடிப்பை கொடுத்து இருக்கிறார். அர்ஜுன் அசோகன் தனது வேலையை சரியாக செய்திருக்கிறார்.

விஜி சந்திரசேகர், ஜெயப்பிரகாஷ், எம்.எஸ்.பாஸ்கர் போன்ற அனுபவம் வாய்ந்த நடிகர்களின் சிறிய காட்சிகளும் படத்திற்கு ஒரு அளவு பலம் சேர்க்கின்றன.

இயக்கம்:

முக்கோண காதல் கதையை சற்று வித்தியாசமான கோணத்தில் சொல்ல முயற்சித்துள்ள இயக்குநர் விஜய், எளிமையான காட்சிகளின் மூலம் கதையை நகர்த்தியிருக்கிறார். அழகான இடங்கள், காதல் உணர்வுகள் மற்றும் கதாநாயகியின் நடிப்பு ஆகியவை படத்திற்கு பலமாக இருந்தாலும், திரைக்கதையில் எதிர்பார்த்த அளவுக்கு வலுவான தருணங்கள் இல்லாதது ஒரு குறையாகவே தெரிகிறது.

ஒளிப்பதிவு:

ஒளிப்பதிவாளர் அரவிந்த்கிருஷ்ணா வெளிநாட்டு அழகை அழகாக பதிவு செய்து காட்சிகளை கண்களுக்கு விருந்தாக மாற்றியிருக்கிறார்.

இசை:

ஹரிஷ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை காதல் உணர்வுகளை வெளிப்படுத்த உதவுகிறது.

மாலைமலர் ரேட்டிங் : 2.5 / 5

#Review செல்லமடா நீ எனக்கு விமர்சனம்
சிறுவயதில் இருந்தே நாயகன் வசீகரன் தனது தாய் செந்தியை வெறுத்து அவமானப்படுத்தி வருகிறார். ஆனால் அந்த தாய், மகன்தான் தனது உலகம் என்ற எண்ணத்தில், அவனுக்காக எண்ணற்ற தியாகங்களை செய்து அமைதியாக வாழ்ந்து வருகிறார். மகன் காட்டும் வெறுப்பையும் அவமதிப்பையும் மனதில் புதைத்து கொண்டு, ஒரு நாள் அவன் தனது அன்பை புரிந்துகொள்வான் என்ற நம்பிக்கையோடு வாழ்க்கையை தாங்கி நிற்கிறார் அந்த தாய்.

இறுதியில் வசீகரன் ஏன் தாயை இவ்வளவு வெறுக்கிறார்? அவரது தந்தை யார்? அந்த தாயின் கடந்த காலத்தில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

சிறுவயதில் இருந்து தாயை ஒதுக்கி விட்டு வாழும் வசீகரன், இறுதியில் தனது தாயின் வாழ்க்கை பின்னணி மற்றும் அவர் செய்துள்ள தியாகங்களை அறியும் தருணத்தில் மனம் உடைந்து கதறி அழும் காட்சிகள் பார்வையாளர்களையும் கண்கலங்க வைக்கிறது. மகனின் அன்புக்காக ஏங்கி தவிக்கும் தாயாக பசங்க செந்தி நடிப்பு படத்தின் முதுகெலும்பாக அமைந்துள்ளது.

காதலியாக வரும் நேகாவுக்கு காட்சிகள் குறைவாக இருந்தாலும், வசீகரனிடம் அவரது தாயின் உண்மையான பாசத்தை எடுத்துரைக்கும் காட்சிகளில் அமைதியான மற்றும் இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார். நண்பனாக வரும் அமுதவாணன் தனது கலகலப்பான வசனங்களால் படத்தின் இடையிலான சோகத்தை சற்றே குறைத்து சிரிப்பை ஏற்படுத்துகிறார். திருடன் கதாபாத்திரத்தில் வரும் போஸ் வெங்கட் மற்றும் மீரா கிருஷ்ணன் ஆகியோரின் நடிப்பு கதைக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. சில துணை கதாபாத்திரங்களுக்கு நடிப்பில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.

தாய்மகன் உறவில் இருக்கும் பாசம், வேதனை மற்றும் தியாகங்களை உணர்ச்சியோடு சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஆனந்த் சிவம். சில இடங்களில் காட்சிகள் இன்னும் அழுத்தமாக அமைந்திருந்தால் படத்தின் தாக்கம் அதிகரித்திருக்கும்.

தாஜ்நூர் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. செல்வா.ஆர் ஒளிப்பதிவு கிராமத்து சூழலையும் கதையின் உணர்ச்சிகளையும் அழகாக பதிவு செய்துள்ளது.

முஸ்தபா முஸ்தபா படத்தின் திரைவிமர்சனம் #MustafaMustafa
நடிகர் சதீஸ் நடிப்பில் பிரவீன் சரவணன் இயக்கத்தில் உருவான முஸ்தபா முஸ்தபா படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

கதை:

தனியார் தொலைக்காட்சி சேனலில் பணியாற்றும் சதீஷ், டாக்டராக இருக்கும் மோனிகா சின்னகொட்லாவை காதலிக்கிறார். இரு குடும்பங்களும் இந்த காதலை ஏற்றுக்கொண்டு திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. திருமணத்திற்கு சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், சதீஷ் வேறு ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகிறது.

இந்த விஷயம் காதலிக்கு தெரிந்தால் திருமணம் நின்றுவிடும் என்ற பயத்தில், அந்த வீடியோவை எப்படியாவது இணையத்தில் இருந்து நீக்க முயற்சி செய்கிறார் சதீஷ். இறுதியில் சதீஷின் முயற்சி வெற்றி பெற்றதா? அந்த வீடியோவை யார் வெளியிட்டார்கள்? அதன் பின்னணி என்ன?  என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்:

படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் சதீஷ் தனது வழக்கமான இயல்பான நடிப்பில் கதையை தாங்கிச் செல்கிறார். காதல், பொய், அதனால் வரும் பிரச்சனை, அதை சரி செய்யும் முயற்சி என பல நிலைகளில் அவர் தனது கதாபாத்திரத்தை சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

சதீஷின் நண்பராக நடித்துள்ள சுரேஷ் ரவி, படம் முழுவதும் அவருடன் பயணிக்கும் முக்கியமான கதாபாத்திரமாக இருக்கிறார். காமெடி காட்சிகளில் சதீஷுடன் சேர்ந்து பல இடங்களில் சிரிக்க வைக்கிறார். கருணாகரன் தனது டைமிங் வசனங்களால் சிரிப்பை ஏற்படுத்துவதோடு, கதையின் முக்கியமான திருப்புமுனை கதாபாத்திரமாகவும் கவனம் ஈர்க்கிறார்.

நாயகியாக நடித்துள்ள மோனிகா சின்னகொட்லா கதையின் தொடக்கமும் இறுதியிலும் மட்டும் வந்து சென்று இருக்கிறார். சுரேஷ் ரவியின் ஜோடியாக நடித்துள்ள மானசா செளத்ரிக்கும் பெரிய இடம் இல்லை. சாம்ஸ், லிவிங்ஸ்டன், உமா, புகழ், சூப்பர் குட் சுப்பிரமணி உள்ளிட்டவர்கள் சில காட்சிகளில் வந்து சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார்கள்.

இயக்கம்:

நாயகன் ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொண்டு, நண்பர்களின் உதவியுடன் அதிலிருந்து தப்பிக்க முயற்சிக்கும் கதையை கலகலப்பாக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் பிரவீன் சரவணன். முதல் பாதியில் வரும் நகைச்சுவை காட்சிகள் படத்தை சுறுசுறுப்பாக நகர்த்தினாலும், இரண்டாம் பாதியில் அதே பாணி தொடர்வதால் சற்று சலிப்பை ஏற்படுத்துகிறது.

ஒளிப்பதிவு:

ஒளிப்பதிவாளர் கே.எஸ்.விஷ்ணு ஸ்ரீ படம் முழுவதையும் கலர்புல்லாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

இசை:

எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட்டின் இசையில் பாடல்கள் கமர்ஷியல் பாணியில் இருக்கிறது. பின்னணி இசையும் காட்சிகளுக்கு ஏற்ப பயணிக்கிறது.

மாலைமலர் ரேட்டிங் : 2.5 / 5

My Lord
நாயகன் சசிகுமார் தனது மனைவியுடன் கோவில்பட்டியில் வாழ்ந்து வருகிறார். மத்திய மந்திரியாக இருக்கும் ஆஷா சரத் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து அவருக்கு உடனடியாக மாற்று சிறுநீரக சிகிச்சை தேவைப்படுகிறது. அவருடைய ரத்தவகை மிகவும் அரிய வகை என்பதால் நீண்ட தேடலுக்கு பிறகு சிறுநீரக தானத்திற்கு 2 பேரை தேர்வு செய்கிறார்கள். அதில் ஒருவர் சசிகுமார்.

ஆஷா சரத்தின் உடல்நிலை வெளியுலகிற்கு தெரியாமல் இருக்க வேண்டும் என அறுவை சிகிச்சையை ரகசியமாக நடத்த திட்டமிட்டு சசிகுமாரை அழைத்து வர முயற்சியில் ஆஷா சரத் குழு முயற்சி செய்கிறது. அதே சமயம் கோவில்பட்டியில் பல பிரச்சனைகளுடன் போராடி வரும் சசிகுமார் சிறுநீரகம் கொடுக்க மறுப்பு தெரிவிக்கிறார்.

இறுதியில் சசிகுமார் சிறுநீரகம் கொடுத்தாரா? சசிகுமாருக்கு இருக்கும் பிரச்சனை என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் சசிகுமார் அறிமுக காட்சியிலேயே கைத்தட்டல் வாங்கி இருக்கிறார். கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்ட நிலையில் பிணவறையில் இருந்து உயிருடன் வெளியே வந்து நடனம் ஆடும் காட்சி சிறப்பு.

மனைவி சைத்ராவுடன் பாசம், அரசாங்கம் மீது கோபம், மற்றவர்கள் மீது இருக்கும் மனிதநேயம் என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். மனைவியாக வரும் சைத்ரா, பீடி பிடிப்பது, சாமியாடுவது சசிகுமாருடன் மருத்துவமனைக்கு அலைவது என நடிப்பில் கவனிக்க வைத்து இருக்கிறார்.

ஆஷா சரத்தின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம். இறக்க போகிறோம் என்ற பயத்தையும், அரசியல்வாதி என்ற திமிரையும், அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். பத்திரிகையாளராக குரு சோமசுந்தரம், நீதிபதியாக ஜெயபிரகாஷ், வழக்கறிஞராக கோபி நயினார் ஆகியோர் நடிப்பு கூடுதல் பலம்.

இயக்கம்

ஆட்சியும் அதிகாரமும் இருந்தால் எதுவென்றாலும் செய்ய முடியும். சாதாரண மனிதனின் வாழ்க்கையை எப்படி வேண்டும் என்றாலும் மாற்ற முடியும் என்பதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் ராஜு முருகன்.

சாதாரண மக்களின் ஏழ்மையை பயன்படுத்தி, செல்வந்தர்கள் மற்றும் அரசியல்வாதிகள் எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பதை அழுத்தமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர். சாதாரண மனிதனின் வாழ்க்கை, அரசியல் அதிகாரம் இரண்டையும் இணைத்து திரைக்கதையை அமைத்து இருக்கிறார். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். முதல்பாதியில் மெதுவாக செல்லும் திரைக்கதை பலவீனம்.

இசை

ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையை ரசிக்கும் படி கொடுத்து இருக்கிறார்.

ஒளிப்பதிவு

நீரவ்ஷா ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது.

வீடியோக்கள்

Pookie
படத்தின் நாயகன் அஜயும்- நாயகி தனுஷாவும் சில வருடங்களாக காதலித்து வருகிறார்கள். இருவரும் திருமணத்திற்கு தயாராகும்போது இருவருக்கும் சண்டை வருகிறது.

இந்த சண்டை எல்லை மீறி போக ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ள, அதை வீடியோ எடுத்து சிலர் நெட்டில் தட்டிவிட பிறகு என்ன இவர்கள் வைரக் ஆகின்றனர். இருவரும் பிரேக் அப் செய்து விடுகின்றனர்,

ஆனால், பிரேக் அப்பில் இருந்து அஜய், தனுஷா இருவருமே  வெளிவர முடியாமல் தவிக்கின்றனர். இருவரும் தங்களின் நினைவுகளை மறக்க சாப்பாடு, பைக் ட்ரிப், ஷாப்பிங், ஆன்மிகம், ஜிம் என பல விஷயங்களில் கவனத்தை செலுத்துகின்றனர்,

இருவருக்கும் இன்னொரு காதலும் மலர்கிறது. ஆனால், பழைய காதலின் நினைவுகள் அவர்களை எதிலும் ஈடுப்படவிடாமல் தடுக்கிறது.

ஒரு கட்டத்தில் இருவம் திருமணமே இதற்கு பதில் என வேறு ஒருவரை திருமணம் செய்ய முடிவு செய்கின்றனர். இறுதியில், அஜயும்- தனுஷாவும் இணைந்தார்களா? அல்லது வேறு ஒருவரை திருமணம் செய்தார்களா? என்பது படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

துறுதுறு இளைஞராக வரும் அஜய், முதுமுகமாக இருந்தாலும் நன்றாகவே நடித்திருக்கிறார். காதலிகளிடம் சிக்கித்தவிக்கும்போதும், முடிவெடுக்க முடியாமல் திணறும்போதும் அவரது இன்னொசன்ஸ் நடிப்பு வெளிப்படுகிறது. ஹீரோயினாக நடித்து இருக்கும் தனுஷா கதைக்கு பலம். அழகு.

ஷியாரா காதல் சீன்களில் விறுவிறுப்பாக நடித்துள்ளார்.

இயக்கம்

இன்றைய இளம் தலைமுறையினர் மனநிலை, அவர்கள் காதலையும், வாழ்க்கையையும் பார்க்கும் விதத்தை படமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் கணேஷ் சந்திரா.

கதையும், படத்தில் இடம்பெற்றுள்ள காதல் காட்சிகளிலும் புதிதாக ஒன்றுமில்லை. திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

இசை

விஜய் ஆண்டனியின் இசை படத்திற்கு பலம் சேர்க்கவில்லை.

ஒளிப்பதிவு

ஒளிப்பதிவாளரான கணேஷ் சந்திரா, இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்து இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

வீடியோக்கள்

Second Case of Seetharam
நேர்மையான போலீஸ் அதிகாரி விஜய ராகவேந்திரா. இவரது கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதி ஒன்றில் இரட்டை கொலைகள் நடக்கிறது. பிரேத பரிசோதனை அறிக்கையில் இந்த கொலைகளை செய்வது மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவராக இருக்கலாம் என தெரியவருகிறது. இந்த கொடூர கொலைகள் நகர மக்களை உறைய செய்கிறது.

இதையடுத்து விசாரணையும் தீவிரமடைகிறது. இதற்கிடையில் கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டேவை போலீசார் சந்தேகிக்கிறார்கள். அப்போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்துக்கு வர போலீசார் உறைந்து போகிறார்கள். அது என்ன? கொலைகளை செய்தது யார்? கொலைக்கான பின்னணி என்ன? என்பதே பரபரப்பான மீதி கதை.

நடிகர்கள்

போலீஸ் அதிகாரியாக வரும் விஜய ராகவேந்திரா பொறுப்பாக நடித்திருக்கிறார். படத்தில் பல்வேறு காட்சிகளில் பாராட்டும்படி உள்ளது. கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டேவின் நடிப்பு ரசிக்க வைக்கிறது. உஷா பந்தாரி உள்பட நடிகர் -நடிகைகள் அனைவருமே கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர்.

இயக்கம்

கிரைம் - திரில்லர் பாணியில் யாருமே யூகிக்க முடியாதபடி வலுவான திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் தேவிபிரசாத் ஷெட்டி. புதுமையான கதையும், காட்சி பின்னணியும் படத்துக்கு பலம்.

உளவியல் ரீதியான, மனநிலை பாதிக்கப்பட்ட மனிதரின் உள்ளார்ந்த குழப்பத்தை வெளிப்படுத்தும் காட்சிகள் பாராட்டக்கூடியது. சில காட்சிகளின் நீளத்தை குறைத்திருக்கலாம்.

ஒளிப்பதிவு

ஹேமந்த் ஒளிப்பதிவில் காட்சிகளில் பரபரப்பு.

இசை

நவநீத் ஷாமின் இசை படத்தின் விறுவிறுப்புக்கு பலம்.

வீடியோக்கள்

Aazhi
கதை:

மீன்பிடி படகு மெக்கானிக்காக வேலை பார்க்கும் சரத்குமார், வெளிப்படையாக சாதாரண வாழ்க்கை வாழும் மனிதராக இருந்தாலும், மறுபக்கம் போதைப் பொருள் விற்பனை மற்றும் ஆயுத கடத்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அவரது ஒரே மகளான தேவிகா சதீஷ், கல்லூரியில் உடன் படிக்கும் இந்திரஜித் ஜெகஜித்தை காதலிக்கிறார்.

சமூக மற்றும் பொருளாதார வித்தியாசம் காரணமாக இந்த காதலை ஏற்க மறுக்கும் சரத்குமார், இளைஞனை கடத்தி ஆழ்கடலுக்கு அழைத்துச் சென்று கொலை செய்ய திட்டமிடுகிறார். உயிர் தப்பிக்க போராடும் நாயகன் தப்பித்தாரா? அல்லது கடலே அவரது முடிவை தீர்மானித்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்:

அப்பா கதாபாத்திரம் சரத்குமாருக்கு புதியது அல்ல. பாசமும் கொடூரமும் கலந்த மனிதராக வேறுபாடு காட்ட முயற்சித்திருந்தாலும், அவர் ஏற்கனவே நடித்த பல வேடங்களின் சாயல் இதில் தென்படுகிறது. தோற்ற மாற்றம் இருந்தாலும் கதாபாத்திரத்தின் தீவிரம் முழுமையாக வெளிப்படவில்லை. இருந்தாலும் அனுபவ நடிகராக தனது பங்கை நம்பகமாக செய்து முடித்திருக்கிறார்.

இளம் நாயகனாக நடித்திருக்கும் இந்திரஜித் ஜெகஜித், உயிர் அச்சத்தில் இருக்கும் மனிதனின் பதட்டத்தை முழுமையாக வெளிப்படுத்த முடியாமல் சற்றே ஒரே மாதிரியான நடிப்பில் பயணிக்கிறார். சரத்குமாரின் மகளாக வரும் தேவிகா சதீஷ் குறைந்த காட்சிகளிலேயே கவனம் ஈர்த்து தனது வேலையை நிறைவு செய்திருக்கிறார்.

இயக்கம்:

ஆழ்கடலில் பயணிக்கும் ஒரு மீன்பிடி படகை மையமாக வைத்து, இரண்டு கதாபாத்திரங்களின் மன மற்றும் உடல் ரீதியான மோதலை கொண்டு முழு படத்தையும் நகர்த்த முயற்சித்திருக்கிறார் இயக்குநர் மாதவ் ராமதாசன். குறைந்த கதாபாத்திரங்களுடன் தீவிரமான திரில்லர் அனுபவம் கொடுக்க முயற்சி இருந்தாலும், அதற்கான அழுத்தம் திரைக்கதையில் முழுமையாக உருவாகவில்லை.

போதைப் பொருள் கடத்தல் போன்ற பெரிய குற்றங்களில் ஈடுபடும் மனிதன் அனைத்தையும் தனியாக செய்வது போன்ற காட்சிகள் லாஜிக் குறைகளை ஏற்படுத்துகிறது. முதல் பாதியில் உயிர் காக்க போராடும் நாயகன், பின்னர் வில்லனை காப்பாற்ற முயல்வது போன்ற திரைக்கதை மாற்றங்களும் உணர்ச்சி தாக்கத்தை குறைக்கிறது. திடீர் காதலை விட தந்தை-மகள் பாசம் பெரியது என்பதை உணர்த்தும்  காட்சி படத்திற்கு பலம்.

ஒளிப்பதிவு:

ஆனந்த் ஒளிப்பதிவில் படகின் உட்புறத்தில் குறுகிய இடங்களில் படமாக்கப்பட்ட சில காட்சிகள் கவனம் ஈர்க்கின்றன. ஜாஸி கிப்ட் இசையில் பாடல்கள் சாதாரணமாக இருந்தாலும், வில்லியம் பிரான்சிஸின் பின்னணி இசை ஓரளவிற்கு கைகொடுத்து இருக்கிறது.

மாலைமலர் ரேட்டிங் :  2.5 / 5

வீடியோக்கள்

ஆழி

Fourth floor
கணினி துறையில் பணியாற்றும் ஆரி அர்ஜுனன், பணி மாறுதலால் மும்பையிலிருந்து சென்னைக்கு வந்து, புறநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியில் யாரும் வசிக்காத வீட்டில் தங்குகிறார். வேலை வாழ்க்கையுடன், தன்னை காப்பாற்றுமாறு உதவி கேட்ட முன்னாள் காதலியை தேடும் முயற்சியிலும் ஈடுபடுகிறார்.

அந்த வீட்டில் காதலியின் புகைப்படத்தை காணும் அதிர்ச்சியுடன், இரவு நேரங்களில் தொடரும் அமானுஷ்ய கனவுகள் அவரை குழப்பத்தில் ஆழ்த்துகிறது. கனவா, நிஜமா என்ற சந்தேகத்துடன் தொடங்கும் இந்த மர்ம பயணம், பல அதிர்ச்சியான உண்மைகளை வெளிப்படுத்துகிறது.

இறுதியில் காணாமல் போன காதலி கிடைத்தாரா? கனவுகளுக்கும் அவளுக்கும் என்ன தொடர்பு? என்பது படத்தின் மீதிக்கதை..

நடிகர்கள்

நாயகனாக நடித்திருக்கும் ஆரி, சாதாரண ஐடி இளைஞராக தொடங்கி, மர்மங்களை அவிழ்க்கும் மனிதராக மாறும் பயணத்தை நம்பகமாக வெளிப்படுத்தியிருக்கிறார். காதல் இழப்பு, குற்ற உணர்வு, மன அழுத்தம், அமானுஷ்ய அச்சம் என பல்வேறு உணர்வுகளை அளவாக வெளிப்படுத்தி கதையை தாங்கிச் செல்கிறார்.

நாயகிகளாக நடித்திருக்கும் பவித்ரா மற்றும் தீப்ஷிகா இருவரும் கதைக்கு தேவையான அளவில் நடிப்பை வழங்கி இருக்கிறார்கள். வில்லனாக வரும் சுப்பிரமணிய சிவா, முதல் பாதியில் முகபாவனைகளால் கவனம் ஈர்த்தாலும், அமானுஷ்ய அம்சங்கள் அதிகமாக இருப்பதால் அவரது வில்லத்தனம் முழுமையாக வெளிப்படவில்லை. தலைவாசல் விஜய் உள்ளிட்ட துணை கதாபாத்திரங்கள் திரைக்கதை நகர்வுக்கு உதவியாக இருக்கின்றன.

இயக்கம்

திகில், கிரைம் திரில்லர், குடும்ப உணர்வு, சமூக கருத்து என பல அடுக்குகளுடன் கதையை வடிவமைத்துள்ள இயக்குநர் எல்.ஆர்.சுந்தரபாண்டியன், ஆரம்பத்தில் பரபரப்பாக நகரும் திரைக்கதையை இடைப்பட்ட பகுதிகளில் சற்று மெதுவாக்கினாலும், தொடர்ச்சியான திருப்பங்கள் மூலம் மீண்டும் சுவாரஸ்யத்தை கூட்டுகிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் நோக்கி செல்லும் போது மர்மங்கள் அவிழும் விதம் படத்தை கவனத்துடன் பார்க்க வைக்கிறது.

இசை

தரண்குமார் இசையில் பாடல்கள் சாதாரணமாக இருந்தாலும், பின்னணி இசை திகில் காட்சிகளில் தேவையான பதட்டத்தை உருவாக்குகிறது.

ஒளிப்பதிவு

ஒளிப்பதிவாளர் ஜெ.லக்‌ஷ்மண், அடுக்குமாடி குடியிருப்பின் தனிமையும் நான்காவது தளத்தின் மர்மமான சூழலையும் சரியாக பதிவு செய்து இருக்கிறார்.

வீடியோக்கள்

ஃபோர்த் ஃப்ளோர்

Theri
தெறி திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

L.S.S: Love Subscribe Share
தன்னுடன் படிக்கும் கல்லூரி தோழியான வடமாநில பெண் சிம்ரன் அத்வானியை ஆதவ் கிருஷ்ணா காதலிக்கிறார். இருவரும் திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்கின்றனர். சிம்ரனின் பெற்றோர் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். காசியில் இருக்கும் தனது அம்மாவிடம் ஆதவை அறிமுகம் செய்ய அங்கு அழைத்துச் செல்கிறார்.

ஆனால், செல்லும் வழியிலேயே சிம்ரன் காணாமல்போய் விடுகிறார். இது வீட்டிற்கு தெரியவர சிம்ரனின் தந்தை ஆதவை சந்தேகப்படுகிறார். மிரட்டுகிறார். இறுதியில், ஹீரோயினுக்கு என்ன ஆனது? காதலர்கள் இணைந்தார்களா ? என்பது படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

ஹீரோவின் கதாப்பாத்திரம் பெரிதாக ஈர்க்கவில்லை. ஹீரோயினை காதல் செய்கிறார். போலீசிடம் அடி வாங்குகிறார். ஹீரோயிசம் இல்லை. அழகாக வந்து செல்லும் ஹீரோயினின் கதாப்பாத்திரம் முற்பகுதியில் காட்சிகள் இருந்தாலும் பிற்பகுதியில் பெரிதாக வேலை இல்லை. ஹீரோயின் அம்மாக வரும் வினோதினி சில சீன்கள் ஓரளவு ரசிக்க முடிகிறது.

இயக்கம்

காதல்- கடத்தல்- அடிதடி- முடிவு என்கிற அடிப்படையில் படத்தை எடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் மகாலட்சுமி முருகன். படத்தின் முதல் பாதி நல்ல காதல் கதை உள்ள படத்திற்கு வந்து விட்டோம் என்ற உணர்வை தருகிறது. ஒரு நல்ல காதல் கதையை கையில் எடுத்து கொண்டு, முடிக்க தெரியாமல் முடித்திருக்கிறார். திரைக்கதையில் கூடுதல்

ஒளிப்பதிவு

ஒளிப்பதிவாளர் என்.எஸ்.சதீஷ்குமார் காசியை வண்ணமயமாக காண்பித்திருக்கிறார்.

இசை

படத்தின் பாடல்கள் எதுவும் ரசிக்கும்படி இல்லை.

வீடியோக்கள்

My Dear Dolly
தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் நாயகன் வி.ஜே.பப்பு. அதே அலுவலகத்தில் பணிபுரியும் நாயகி அனுபமா மீது ஒருதலையாக வி.ஜே.பப்பு காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் அனுபமா வேறு நிறுவனத்திற்கு மாற்றம் ஆகிவிடுகிறார். காதலை வெளிப்படுத்த முடியாமல் தவித்த பப்புவின் வாழ்க்கை அப்படியே நின்று போகிறது.

இந்நிலையில் திருமணத்திற்காக பெண் பார்க்க பெற்றோருடன் செல்லும் வி.ஜே. பப்பு, மணமகளாக அனுபமா நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறார். பப்புவை பார்த்தவுடன் அனுபமா திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கிறார். ஒரு கட்டத்தில் அனுபமா திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து, 6 மாதம் சேர்ந்து வாழலாம், ஒத்துவரவில்லை என்றால் பிரிந்துவிடலாம் என்று முடிவுக்கு வருகிறார்கள்.

இறுதியில் பப்புவும், அனுபமாவும் சேர்ந்து வாழ்ந்தார்களா? திருமண வாழ்க்கை என்ன ஆனது? 6 மாதம் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் வி.ஜே.பப்பு, முதல் படத்திலேயே ஒரு கனமான கதாபாத்திரத்தை தைரியமாக ஏற்று நடித்து இருக்கிறார். விரும்பிய பெண்ணுக்காக தன்னை முழுவதும் அர்ப்பணித்து, உள்ளுக்குள் உருகும் காட்சிகளில் கவனிக்க வைத்து இருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் அனுபமா மாறுபட்ட மனநிலையுடன் இருக்கும் பெண்ணாக சிறப்பாக நடித்து இருக்கிறார். குறிப்பாக இரண்டாம் பாதியில் 'பொம்மையாக' மாறும் அவரது மென்மையான வெளிப்பாடு, கதைக்கு புதிய உயிர் ஊட்டுகிறது. மற்ற நடிகர்கள் சிறப்பான பங்களிப்பை அளித்து இருக்கிறார்கள்.

இயக்கம்

காதல் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் அரவிந்த்ராஜ். காதல் என்பது வெறும் 'ஐ லவ் யூ' அல்ல... பொறுமை, புரிதல், தியாகம் என்பதையும் அழுத்தமாக சொல்லி இருக்கிறார். திரைக்கதையில் சுவாரசியம் கூட்டியிருந்தால் கூடுதலாக ரசித்து இருக்கலாம்.

ஒளிப்பதிவு

பாலாஜி சேகர் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

இசை

பாசில் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.

வீடியோக்கள்

Siva Sambo
கதாநாயகனுக்கு நாயகி மீது காதல் ஏற்படுகிறது. ஆனால், கதாநாயகியோ கடந்த கால சச்சரவான சில சம்பவங்களால்  தனது காதலை அவனிடம் சொல்லத் தயங்குகிறாள்.  சில நாட்களில்  இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள்.

இது கடந்தகால கதையாக இருக்க, நிகழ்காலத்தில் நாயகன் தன் மனைவி இறந்துவிட்டதாக கருதி அதற்கு காரணமானவர்களை பழி வாங்கப்பட்டதாக  திரைக்கதை பரபரக்கிறது.

கதாநாயகிக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் என்ன? அவள் இறப்புக்கு காரணம் என்ன? என்பது படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

ஹீரோ தில் நட்ராஜ் கதையில் போலீஸ் ஆஃபீஸர் என்றாலும் அதற்கேற்றபடி மிடுக்கான தோற்றத்தை ஓரளவுக்கு கொடுக்கிறார். காதல் மனைவியை சீரழித்தவர்களை பழி வாங்க களமிறங்கும்போது கோபத்தின் உச்சத்தை  காட்டுகிறார். இன்னும் கொஞ்சம் இயல்பாக நடித்திருக்கலாம்.

கிராமத்து லட்சணம் கொண்ட ஹீரோயின் ஷிவானி  காதலும் காதல் சார்ந்த காட்சிகளில் நடித்திருப்பது பரவசமாக இருக்கிறது.

இப்படத்தை இயக்கியிருக்கிற பகவதி பாலா அப்பாவி பெண்களைக் குறிவைத்து, விதவிதமான தோற்றங்களில் சென்று, அவர்களை திருமணம் செய்து அடிமையாக்கி, தவறான செயல்களுக்கு பயன்படுத்தும் கொடூர வில்லனாக தெரிகிறார்.

மோசடிப் பேர்வழிகளுக்கு உதவுகிறவராக காமெடி நடிகர் செந்தில் காட்டும் வில்லத்தனம் பரவாயில்லை.

இயக்கம்

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஒரே நபர் பலரை திருமணம் செய்கிற மோசடி விவகாரத்தை கிரைம் திரில்லர் படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் பகவதி பாலா. படத்தில் குறைகள் காணப்டுகிறது. திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

இசை

பாடல் வரிகளுக்கு இசை மெருகூட்டியிருக்கும் ஏ.சி ஜான்பீட்டரும், பின்னணி இசையை காட்சிகளுக்குப் போதுமானதாக கலந்திருக்கிறார் தேவா.

ஒளிப்பதிவு

ஒளிப்பதிவில்  கவனம் செலுத்தி இருக்கலாம்.

வீடியோக்கள்

Arivaan
நேர்மையான போலீஸ் இன்ஸ்பெக்டரான ஆனந்த் நாக், சர்ச்சை காரணமாக புதிய காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்படுகிறார். பொறுப்பேற்ற சில நாட்களிலேயே அப்பகுதியில் ஒரு சந்தேக மரணம், அதனைத் தொடர்ந்து கழுத்து அறுபட்ட நிலையில் ஒரு கொலை – இரண்டு சம்பவங்களிலும் ஒரே கார் தொடர்பு இருப்பது விசாரணையை தீவிரப்படுத்துகிறது.

இந்த வழியில் ஒரு பாலியல் தொழிலாளி முக்கிய இணைப்பாக மாறுகிறார். ஆனால், காவல் நிலையத்திலேயே அவர் கொலை செய்யப்படுவதால் வழக்கு மேலும் சிக்கலாகிறது. குற்றவியல் நிருபரான ஜனனியின் உதவியுடன், தொடர் கொலைகளின் பின்னணியையும் கொலையாளியையும் ஆனந்த் நாக் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

போலீஸ் வேடத்தில் ஆனந்த் நாக் தோற்றத்தில் பொருந்தினாலும், நடிப்பில் கம்பீரம் முழுமையாக வெளிப்படவில்லை. விசாரணையின் தீவிரத்தை விட இடைக்கிடை நகைச்சுவைத் தொனி மேலோங்குவது, கதையின் எடையை சற்றே குறைக்கிறது. நாயகி ஜனனி நிருபர் கதாபாத்திரம் முக்கியமாக அமையும் போல தோன்றினாலும், திரைக்கதையில் தொடர்ந்து வலுவாக பயன்படுத்தப்படவில்லை. குறைந்த பரப்பில் அவர் அளவான நடிப்பை வழங்குகிறார்.

பாய்ஸ் ராஜன், பிர்லா போஸ், கெளரி சங்கர், குருமூர்த்தி உள்ளிட்டவர்கள் தங்களுக்கு கிடைத்த இடத்தில் இயல்பாக தோன்றினாலும், கதையின் ஓட்டத்தில் பெரும் தாக்கம் ஏற்படுத்தவில்லை.

இயக்கம்

தொடர் கொலை – விசாரணை என்ற அடிப்படையில் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர். “எப்படி? எதற்காக? யார்?” என்ற மூன்று கேள்விகளை மையமாக வைத்து திரைக்கதை அமைத்துள்ள இயக்குநர் எஸ். அருண் பிரசாதின் முயற்சி கவனிக்கத்தக்கது. ஆரம்ப கட்டத்தில் பரபரப்பை உருவாக்கும் காட்சிகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன.

கொலையாளியின் அடையாளம் வெளிப்படும் பின்னர், சமூக பின்னணியுடன் நகரும் காட்சிகள் மற்றும் கிளைமாக்ஸுக்கு முந்தைய பகுதிகள் சுவாரஸ்யத்தை உயர்த்துகின்றன. அந்த கட்டத்தில் படம் எதிர்பார்த்த விறுவிறுப்பை தருகிறது. மொத்தத்தில், நல்ல கருவுடன் தொடங்கும் ‘அறிவான்’, நடிப்பு மற்றும் திரைக்கதை சீர்மையில் கூடுதல் கவனம் பெற்றிருந்தால் மேலும் தாக்கம் ஏற்படுத்தியிருக்கும். இறுதிக்கட்ட சஸ்பென்ஸ் மற்றும் பின்னணி கருத்து படத்திற்கு பலம் சேர்க்கின்றன.

ஒளிப்பதிவு

ஒளிப்பதிவாளர் யஷ்வந்த் பாலாஜியின் காட்சியமைப்புகள் தரமாக இருந்தாலும், நினைவில் நிற்கும் தனித்துவம் குறைவு.

இசை

கார்த்திக்.ஈ.ஆர்.ஏ இசை கதைக்கு ஏற்ற அளவில் அமைந்துள்ளது.

வீடியோக்கள்