ஷாட்ஸ்
தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்து விடுங்கள்.. கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தலைநகர் டெல்லியில் இன்று நடைபெற்றது. அப்போது தமிழகத்திற்கு 9ம் தேதிவரை 37.9 டிஎம்சி தண்ணீர் கர்நாடக அரசு தரவேண்டும் என்றும், இந்த தண்ணீரை திறந்துவிட உத்தரவிடவேண்டும் என்றும் தமிழகம் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த கூட்டத்தின் முடிவில் தமிழகத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டது. தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிடும்படி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.