

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் (66). இவர் 1983-ம் ஆண்டு லியுத்மிலா புதினா என்பவரை திருமணம் செய்தார். அப்போது அவர் விமான பணிப்பெண்ணாக இருந்தார்.
இவர்களுக்கு மரியா (32). கத்ரீனா (35) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் திருமணம் முடிந்து 31 ஆண்டுகளுக்கு பிறகு புதின் கடந்த 2014-ம் ஆண்டு தனது மனைவி லியுத்மிலாவை விவாகரத்து செய்தார்.
இதற்கிடையே புதினுக்கும், ரஷிய முன்னாள் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அலினா கபேவா (34) என்பவருக்கும் இடையே தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதை புதின் மறுத்தார்.
அலினா 3 வயதில் இருந்தே ஜிம்னாஸ்டிக் பயிற்சி பெற்றவர் ஒலிம்பிக் போட்டிகளில் 8 தங்க பதக்கங்களை வென்று இருக்கிறார். 2 தடவை உலக சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.