விளையாட்டு
புரோ கபடி லீக்: பெங்களூரு புல்சை வீழ்த்தியது தெலுங்கு டைட்டன்ஸ்
- பாட்னா அணி 42-37 என்ற புள்ளி கணக்கில் உ.பி. யோத்தாசை தோற்கடித்து 3-வது வெற்றியை சுவைத்தது.
- அதிகபட்சமாக பாட்னா அணியில் தேவாங்க் 11 புள்ளிகள் திரட்டினார்.
ஐதராபாத்:
12 அணிகள் இடையிலான 11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 29-வது லீக் ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான பாட்னா பைரட்ஸ்- உ.பி. யோத்தாஸ் அணிகள் மோதின.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பாட்னா அணி 42-37 என்ற புள்ளி கணக்கில் உ.பி. யோத்தாசை தோற்கடித்து 3-வது வெற்றியை சுவைத்தது.
அதிகபட்சமாக பாட்னா அணியில் தேவாங்க் 11 புள்ளிகள் திரட்டினார். உ.பி. அணி தரப்பில் ககன் கவுடா 9 புள்ளிகள் எடுத்தார். மற்றொரு ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் 38-35 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்சை வீழ்த்தி 3-வது வெற்றியை பதிவு செய்தது.