கிரிக்கெட் (Cricket)

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2வது டி20 போட்டியில் அர்ஷ்தீப் சிங் படைத்த மோசமான சாதனை

Published On 2025-12-11 21:41 IST   |   Update On 2025-12-11 21:41:00 IST
  • அர்ஷ்தீப் சிங் ஒரே ஓவரில் 7 வைடு பந்துகளை வீசினார்.
  • 4 ஓவர்கள் பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் 54 ரன்கள் விட்டுக்கொடுத்தார்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

இன்று பஞ்சாப் மாநிலம் முல்லன்பூரில் 2 ஆவது டி20 போட்டி நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.

அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டீ காக் 90 ரன்கள் அடித்து அவுட்டானார். இந்திய அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டும் அக்சர் படேல் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்.

இந்த போட்டியில் இந்திய பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ஒரே ஓவரில் 7 வைடு பந்துகளை வீசி மோசமான சாதனை படைத்தார்.

அதாவது டி20 போட்டிகளில் ஒரே ஓவரில் அதிக வைடு வீசிய இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை அர்ஷ்தீப் சிங் படைத்தார். இதற்கு முன்பு கலீல் அகமது 6 வைடு பந்துகளை வீசியதே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News