டிஎன்பிஎல் - பரபரப்பான ஆட்டத்தில் கோவை கிங்சை வீழ்த்தியது காஞ்சி வீரன்ஸ்

தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் நேற்று நடைபெற்ற போட்டியில் கோவை கிங்ஸ் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது காஞ்சி வீரன்ஸ். #TNPL2018 #VKVvLKK
டிஎன்பிஎல் - பரபரப்பான ஆட்டத்தில் கோவை கிங்சை வீழ்த்தியது காஞ்சி வீரன்ஸ்
Published on

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 20-வது லீக் ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில் கோவை கிங்ஸ் அணியும், காஞ்சி வீரன்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற காஞ்சி வீரன்ஸ் அணியினர் பேட்டிங் தேர்வு செய்தனர். அந்த அணியின் பாபா அபராஜித் 41 ரன்களும், அருண் 29 ரன்களும், தீபன் லிங்கேஷ் 16 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்க எண்ணில் அவுட்டாகினர்.

இறுதியில், காஞ்சி வீரன்ஸ் அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்துள்ளனர்.

கோவை கிங்ஸ் சார்பில் அஜித் ராம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் கோவை கிங்ஸ் களமிறங்கியது. காஞ்சி வீரன்ஸ் அணியினரின் பந்து வீச்சில் சிக்கி திணறினர்.

கோவை கிங்ஸ் சார்பில் அஷ்வின் வெங்கட்ராமன் 35 ரன்களும், பிரசாந்த் ராஜேஷ் 21 ரன்களும் ரவிகுமார் ரோஹித் 18 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் விரைவில் அவுட்டாகினர்.

இறுதியில், கோவை கிங்ஸ் அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 102 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால் காஞ்சி வீரன்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

காஞ்சி வீரன்ஸ் சார்பில் ஆஷிக் ஸ்ரீனிவாஸ் 3 விக்கெட்டுகளும், திவாகர் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். சிறப்பாக பந்து வீசிய ஆஷிக் ஸ்ரீனிவாஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். #TNPL2018 #VKVvLKK

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com