இந்தியா வெற்றிபெற 273 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான்

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 272 ரன்களை எடுத்தது.
இந்தியா வெற்றிபெற 273 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான்
Published on

புதுடெல்லி:

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, ஆப்கானிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. ஹஷ்மதுல்லா ஷஹிதி, அஸ்மதுல்லா ஒமர்ஜாய் ஆகியோர் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர்.

ஹஷ்மதுல்லா ஷஹிதி 80 ரன்னும், அஸ்மதுல்லா ஒமர்ஜாய் 62 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில், ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 272 ரன்களை எடுத்துள்ளது.

இந்திய அணி சார்பில் பும்ரா 4 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டும், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்குர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 273 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com