ஆட்டோ டிப்ஸ்
null

இந்தியாவில் ஆட்டோ ஓட்டிய பில் கேட்ஸ் - ஏன் தெரியுமா?

Update: 2023-03-06 12:22 GMT
  • மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
  • இந்திய பயணத்தின் போது தன்னுடன் பல்கலைக்கழகத்தில் பயின்ற ஆனந்த் மஹிந்திராவை பில் கேட்ஸ் சந்தித்தார்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் உலக பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் மஹிந்திரா ட்ரியோ எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனத்தை ஓட்டும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. கடந்த வாரம் இந்தியா வந்திருந்த பில் கேட்ஸ் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தன்னுடன் பயின்ற ஆனந்த் மஹிந்திராவை பில் கேட்ஸ் சந்தித்தார்.

இருவரின் சந்திப்பின் போது குழுக்களும் உடனிருந்தனர். ஐடி மற்றும் வியாபாரம் கடந்து இருவரும் சமூக தாக்கத்தை ஏற்படுத்தும் பல்வேறு விஷயங்களை பற்றி பேசியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பில் கேட்ஸ் இந்திய பயணத்தின் போது எடுத்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். வீடியோவில் பில் கேட்ஸ் மஹிந்திரா ட்ரியோ எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனத்தை ஓட்டும் காட்சிகள் உள்ளன.

 

இன்ஸ்டாகிராம் பதிவில், "புதுமைகளை படைப்பதில் இந்தியாவின் ஆசை எப்போதும் ஆச்சரியப்படுத்தாமல் இருந்தது இல்லை. நான் ஒரு எலெக்ட்ரிக் ரிக்ஷாவை ஓட்டினேன், அது 131 கிமீ (சுமார் 81 மைல்கள்) ரேன்ஜ் கொண்டிருப்பதோடு, அதிகபட்சம் நான்கு பேருடன் பயணம் செய்ய உகந்தது. போக்குவரத்து துறையில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மஹிந்திரா போன்ற நிறுவனங்களை பார்ப்பது ஊக்கமளிக்கும் விஷயமாக இருக்கிறது. " என குறிப்பிட்டுள்ளார்.

இதே போன்று இருவரின் சந்திப்பு குறித்து ஆனந்த் மஹிந்திராவும் டுவிட்டரில் கருத்து தெரிவித்து இருந்தார். அதில், "பில் கேட்ஸ்-ஐ மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. மேலும், வரவேற்கும் வகையில் எங்களது குழுக்கள் இணைந்து பேசிய விவகாரங்களில் ஐடி மட்டுமின்றி எந்த வியாபாரத்திலும் எப்படி ஒருங்கிணைந்து சமூக மாற்றத்தை ஏற்படுத்துவது என்பதை சார்ந்தே இருந்தது. (தனிப்பட்ட முறையில் எனக்கு இந்த சந்திப்பு லாபகரமாக இருந்தது, எனக்கு அவர் கையொப்பம் இட்ட புத்தகம் இலவசமாக கிடைத்தது)," என்று குறிப்பிட்டுள்ளார்.

Full View

Tags:    

Similar News