5000 எம்ஏஎச் பேட்டரி கொண்ட மலிவு விலை ஸ்மார்ட்போன்: மைக்ரோமேக்ஸ் அறிமுகம்

5.0 இன்ச் டிஸ்ப்ளே, 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்ட மைக்ரோமேக்ஸ் பாரத் 5 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.
Published on

இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பாரத் 5 ஸ்மார்ட்போனினை மைக்ரோமேக்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. சமீபத்திய பாரத் சீரிஸ் ஸ்மார்ட்போனில் 5.2 இன்ச் எச்டி டிஸ்ப்ளே, 1 ஜிபி ரேம் மற்றும் 5000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் கொண்ட பாரத் 5 ஸ்மார்ட்போனில் 5 எம்பி பிரைமரி மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் வோடபோன் நிறுவனத்துடன் இணைந்து புதிய மற்றும் ஏற்கனவே வோடபோன் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையை வழங்குகிறது.

மைக்ரோமேக்ஸ் பாரத் 5 ஸ்மார்ட்போன் மற்றும் 1 ஜிபி டேட்டா சலுகையை வாங்குவோருக்கு ஒவ்வொரு மாதமும் 10 ஜிபி அளவு கூடுதல் டேட்டா 5 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது.
 

மைக்ரோமேக்ஸ் பாரத் 5 சிறப்பம்சங்கள்:

- 5.2 இன்ச் 1280x720 பிக்சல் எச்டி டிஸ்ப்ளே
- 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
- 1 ஜிபி ரேம்
- 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட்
- டூயல் சிம் ஸ்லாட்
- 5 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
- 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 5000 எம்ஏஎச் பேட்டரி

X

Maalai Malar
www.maalaimalar.com