மாருதி நிறுவனத்தின் செலரியோ X மாடல் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செலரியோ ஹேட்ச்பேக் மாடலை தழுவி வடிவமைக்கப்பட்டுள்ள புதிய செலரியோ X அதிகப்படியான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், ரக்டு மற்றும் ஸ்போர்ட் தோற்றம் கொண்டுள்ளது.
புதிய செலரியோ X முன்பக்க பம்ப்பர் X வடிவில் உள்ளது. பின்புற பம்ப்பர் புதிதாகவும், கிளாடிங் மற்றும் சில்வர் ஃபினிஷ் செய்யப்பட்ட ஃபௌக்ஸ் ஸ்கிட் பிளேட் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் பாடி முழுக்க கிளாடிங் செய்யப்பட்டுள்ளதோடு, ரூஃப் டெயில்கள், புதிய கிரில் மற்றும் புதிய டெயில் லேம்ப் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.
காரின் லோவர் வேரியண்ட் வீல்களில் பிளாக்டு அவுட் அலாய் வீல் மற்றும் வீல் கேப்கள் கருப்பு நிறத்தில் பெயின்ட் செய்யப்பட்டுள்ளன. அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து செலரியோ X கார் புதிய தோற்றம் பெற்று முந்தைய மாடலை விட வித்தியாசமாக காட்சியளிக்கிறது.
இன்டீரியர் அம்சங்களும் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களை கொண்டிருப்பதோடு ஸ்போர்ட் மற்றும் பிளஷர் அனுபவத்தை வழங்குகிறது. இந்த அம்சங்கள் தவிர இன்ஜின் அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் செலரியோ X 1.0 லிட்டர் K-சீரிஸ் 3-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் 67 பி.எச்.பி. பவர் மற்றும் 90 என்.எம். டார்கியூ கொண்டுள்ளது. இத்துடன் மாருதி CNG பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்குகிறது. முந்தைய மாடல் போன்றே புதிய மாடலிலும் டீசல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படவில்லை. இந்த கார் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 5-ஸ்பீடு AMT வழங்கப்படுகிறது.
அனைத்து மாடல்களிலும் டிரைவ்-சைடு ஏர்பேக் வழங்கப்படுகிறது. இதன் உயர் ரக மாடல்களில் டிரைவர் சீட் பெல்ட் ரிமைன்டர் வழங்கப்படுகிறது. இத்துடன் பேசென்ஜர் சைடு ஏர்பேக் மற்றும் ABS உள்ளிட்ட அம்சங்கள் கூடுதல் ஆப்ஷன்களாக வழங்கப்படுகிறது.