சுதிர்மன் கோப்பை பேட்மிண்டன்: இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி விலகல்

சுதிர்மன் கோப்பை பேட்மிண்டன் தொடர் சீனாவில் இன்று தொடங்குகிறது. பெண்கள் இரட்டையர் பிரிவில் காயத்ரி கோபிசந்த்-திரிசா ஜோடி காயம் காரணமாக விலகியது.
சுதிர்மன் கோப்பை பேட்மிண்டன்: இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி விலகல்
Published on

பீஜிங்:

பிரபல பேட்மிண்டன் தொடரான சுதிர்மன் கோப்பை தொடர் (கலப்பு அணிகள்) சீனாவில் இன்று தொடங்குகிறது. இதுவரை நடந்த 18 தொடரில் சீனா (13), தென் கொரியா (4), இந்தோனேஷியா (1) என 3 அணிகளே கோப்பை வென்றன.

இந்திய அணி ஒருமுறைகூட டாப் 3-ல் இடம்பிடித்தது இல்லை.

இந்த முறை 16 அணிகள் 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்திய அணி டி பிரிவில் டென்மார்க், இங்கிலாந்து, இந்தோனேஷியா என வலிமையான அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.

லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். ஆண்கள், பெண்கள் ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் என மொத்தம் 5 போட்டி நடக்கும். புள்ளிப்பட்டியலில் டாப் 2 அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.

இந்திய அணியில் சிந்து, லக்ஷயா சென், பிரனாய் என அனுபவ நட்சத்திரங்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவில் நட்சத்திர ஜோடியான சாத்விக்-சிராக் ஜோடி காயம் காரணமாக விலகியது.

இதேபோல், பெண்கள் இரட்டையர் பிரிவிலும் காயத்ரி கோபிசந்த்-திரிசா ஜோடி காயம் காரணமாக விலகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com