சர்வதேச ஜூனியர் சாம்பியன்ஷிப்: முதல் நாளில் மூன்று பதக்கங்களை வென்று இந்தியா அசத்தல்

மூவம் இணைந்து 1700 புள்ளிகளை பெற்று பட்டியலில் முதலிடம் பிடித்தனர்.
சர்வதேச ஜூனியர் சாம்பியன்ஷிப்: முதல் நாளில் மூன்று பதக்கங்களை வென்று இந்தியா அசத்தல்
Andrea Caroppo
Published on

ஜெர்மனி நாட்டில் இன்று (வியாழக்கிழமை) தொடங்கிய ISSF ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் நாளில், இந்திய துப்பாக்கி சுடும் வீரர்கள் இரண்டு தங்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்று சிறப்பான தொடக்கத்தை அமைத்தனர்.

ஜூனியர் பெண்கள் பிரிவில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தனிநபர் போட்டியில் சேஜல் காம்ப்ளே தங்கப் பதக்கத்தை வென்றார். இதே பிரிவில் சக வீராங்கனை ஹிமான்ஷி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.

ஜூனியர் பெண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணி போட்டியிலும் இந்தியா தங்க பதக்கத்தை வென்றது. சேஜல் காம்ப்ளே, வன்ஷிகா சௌத்ரி மற்றும் நாவ்யா பிஷ்னோய் ஆகிய மூவரும் இணைந்து மொத்தம் 1700 புள்ளிகளை பெற்று பட்டியலில் முதலிடம் பிடித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com