TIME இதழின் டாப் 100 பட்டியலில் இடம்பிடித்த ஸ்மிருதி மந்தனா

ஸ்மிருதி மந்தனா ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் துணை கேப்டனாக பதவி வகித்தார்.
mandana
Published on: 

ஒவ்வொரு ஆண்டும் டைம் இதழ் உலக அளவில் புகழ்பெற்ற பணக்காரர்கள், ஆளுமைமிக்க தலைவர்கள் உள்ளிட்ட பட்டியலை வெளியிட்டு வருகிறது.

அரசியல், கலை, அறிவியல், சமூக சேவை மற்றும் விளையாட்டு போன்ற துறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் இந்தப் பட்டியலில் இடம்பிடிப்பது வழக்கம்.

இந்நிலையில், டைம் இதழின் 2026-ம் ஆண்டுக்கான டாப் 100 செல்வாக்கு மிக்க விளையாட்டு ஆளுமைகள் பட்டியலில் இந்தியாவின் துணை கேப்டனான ஸ்மிருதி மந்தனா இடம்பிடித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை வென்ற இந்திய மகளிர் அணி துணை கேப்டனாக பதவி வகித்தார்.

கூடைப்பந்து ஜாம்பவான் லெப்ரான் ஜேம்ஸ், கால்பந்து ஜாம்பவான்களான லியோனல் மெஸ்சி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, டென்னிஸ் வீரர் கார்லோஸ் அல்காரஸ், தென் ஆப்பிரிக்காவின் பவுமா உள்ளிட்ட உலக நட்சத்திரங்களுடன் மந்தனாவும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com