Oval Test: பிலிப்ஸ் அபார சதத்தால் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 391 ரன்னுக்கு ஆல் அவுட்

இங்கிலாந்து சார்பில் ஜேக்கப் பெத்தேல் 3 விக்கெட் வீழ்த்தினார்.
glenn philips
Published on

நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

லார்ட்சில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 391 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் கிளென் பிலிப்ஸ் சதமடித்து 100 ரன்னில் அவுட்டானார். டாம் பிளெண்டல் அரை சதம் கடந்து 51 ரன்னில் வெளியேறினார். டேரில் மிட்செல் 44 ரன்னும், கைல் ஜேமிசன் 41 ரன்னும் எடுத்தனர்.

இங்கிலாந்து சார்பில் ஜேக்கப் பெத்தேல் 3 விக்கெட்டும், ஜோப்ரா ஆர்ச்சர், மேத்யூ பிஷர், சோனி பேக்கர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கி விளையாடி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com