கேன் வில்லிம்யசனுக்குப் பதிலாக ஹென்றி நிக்கோல்ஸ்: நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம்

கேன் வில்லியம்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஹென்றி நிக்கோல்ஸ் களம் இறங்குவார் என டாம் லாதம் தெரிவித்துள்ளார்.
ஹென்றி நிக்கோல்ஸ்
ஹென்றி நிக்கோல்ஸ்ஹென்றி நிக்கோல்ஸ்
Published on

இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் முடிவடைந்த உடன் நியூசிலாந்தின் நட்சத்திர பேட்ஸ்மேன் கேன் வில்லியம்சன் சர்வதேச போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.

இதனால் அவருக்குப் பதிலாக வில் யங் அணியில் சேர்க்கப்பட்டார். நாளை தொடங்கும் 2-வது போட்டியில் வில் யங் ஆடும் லெவனில் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஹென்றி நிக்கோல்ஸ் அணியில் இடம் பிடிப்பார் என்று நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லாதம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டாம் லாதம் கூறியதாவது:-

ஹென்ரி நிக்கோல்ஸ் தனது விளையாட்டு வாழ்க்கையின் பெரும்பகுதி காலத்தில் அவர் 4 அல்லது 5-வது வரிசையில் பேட்டிங் செய்துள்ளார். ஆனால் கேன்டர்பரி அணிக்காக நீண்ட காலமாக விளையாடி வரும் அவர் 3 அல்லது 4-வது வரிசையிலும் பேட்டிங் செய்து வருகிறார். சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் திறன் ஹென்றியிடம் இருப்பது ஒரு சிறப்பான விஷயம் என்று நான் கருதுகிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிதாக ஒன்றைச் செய்வதற்கு இது அவருக்கு ஒரு மிகச் சிறந்த வாய்ப்பாகும்.

இவ்வாறு டாம் லாதம் தெரிவித்துள்ளார்.

வில் யங் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் நடைபெற்ற சமீப போட்டிகளில் சிறப்பாக விளையாடவில்லை. ஹென்றி நிக்கோல்ஸ் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடினார். இதனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் டாம் லாதம் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com