ஐ.பி.எல். தொடர் முழுவதும் இந்தியாவில் மட்டுமே நடக்கும்: பிசிசிஐ தகவல்

ஐ.பி.எல். தொடரின் முதல் கட்ட அட்டவணையை பிசிசிஐ கடந்த மாதம் வெளியிட்டது.தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
ஐ.பி.எல். தொடர் முழுவதும் இந்தியாவில் மட்டுமே நடக்கும்: பிசிசிஐ தகவல்
Published on

புதுடெல்லி:

17-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டிக்கான முதல்கட்ட அட்டவணையை பிசிசிஐ கடந்த மாதம் வெளியிட்டது. வரும் 22-ம் தேதி முதல் ஏப்ரல் 7-ம் தேதி வரை என 17 நாட்களுக்கான 21 போட்டிகள் விவரம் வெளியானது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 22-ம் தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. ஏப்ரல் 7-ம் தேதி லக்னோவில் நடைபெறும் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. பாராளுமன்ற தேர்தல் காரணமாக முதல் கட்ட அட்டவணை வெளியிடப்பட்டது.

இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தல் காரணமாக ஐ.பி.எல். 2-வது கட்ட போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய்க்கு மாற்ற கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டாலும் ஐபிஎல் தொடரின் அனைத்துப் போட்டிகளும் இந்தியாவில் மட்டுமே நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com