

ஆஸ்திரேலிய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி சட்டோகிராமில் நடைபெற்றது. டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய வங்கதேச அணி ஆஸ்திரேலிய அணியின் அபார பந்து வீச்சில் சிக்கியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.
அந்த அணியின் மெஹிதி ஹசன் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இறுதியில், வங்கதேச அணி 19 ஓவரில் 131 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஆஸ்திரேலியா சார்பில் ஆடம் ஜாம்பா, ஜோயல் டேவிஸ் தலா 3 விக்கெட்டும், மேட் ரென்ஷா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. கூப்பர் கனோலி அதிரடியாக ஆடி 27 பந்தில் 47 ரன்கள் குவித்தார். டிம் டேவிட் 20 ரன் எடுத்தார்.
இறுதியில், ஆஸ்திரேலியா 18.2 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன், டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.