உலகக் கோப்பை கால்பந்து: உஸ்பெகிஸ்தானை 3-1 என பந்தாடியது கொலம்பியா

ஆட்டத்தின் முதல் பாதியில் 1-0 என கொலம்பியா அணி முன்னிலை பெற்றது.
FIFA
Published on

உலகக் கோப்பை கால்பந்து தொடர் கடந்த 11-ம் தேதி தொடங்கியது. மெக்சிகோ, கனடா, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடைபெறுகிறது. 12 பிரிவுகளில் தலா 4 அணிகள் வீதம் மொத்தம் 48 அணிகள் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்கின்றன.

இந்நிலையில், குரூப் கே பிரிவில் இன்று நடைபெற்ற லீக் சுற்றில் கொலம்பியா, உஸ்பெகிஸ்தான் அணிகள் மோதின.

ஆட்டத்தின் 40-வது நிமிடத்தில் கொலம்பியாவின் டேனியல் ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் 1-0 என கொலம்பியா அணி முன்னிலை பெற்றது.

தொடர்ந்து, ஆட்டத்தின் 2வது பாதியின் 60வது நிமிடத்தில் உஸ்பெகிஸ்தான் அணியின் அப்பொஸ்பெக் பைசுல்லா ஒரு கோல் அடித்து 1-1 என சமனிலைப்படுத்தினார்.

ஆனால் கொலம்பியாவின் லூயிஸ் டயாஸ் 65வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து 2-1 என முன்னிலைப்படுத்தினார்.

கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் 99வது நிமிடத்தில் கொலம்பியாவின் ஜாமிண்டன் காம்பஸ் ஒரு கோல் அடித்தார்.

இறுதியில் கொலம்பியா அணி 3-1 என உஸ்பெகிஸ்தானை பந்தாடியது.

X

Maalai Malar
www.maalaimalar.com