Macau Open பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறிய அஷ்மிதா சலிஹா

மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
chaliha
Published on

மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த காலிறுதி சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் அஷ்மிதா சலிஹா, தென் கொரியாவின் எவா லீ உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய அஷ்மிதா சலிஹா 21-16, 21-18 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் இந்திய வீராங்கனை அன்மோல் கர்ப் 21-14, 15-21, 13-21 என்ற செட் கணக்கில் சீனாவின் ஹான் குயின்சியிடம் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com