வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படும் விநாயகர்கள்

ஒவ்வொரு இடத்திலும் எழுந்தரும் விநாயகர்கள் ஒவ்வொரு பெயரில் அழைக்கப்படுகிறார்கள். எந்த ஊரில் என்ன பெயரில் அழைக்கப்படுகிறார் என்று பார்க்கலாம்.
வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படும் விநாயகர்கள்
Published on

* நாமக்கல் கோட்டை பகுதியில் எழுந்தருளியிருக்கிறார் அரசமரத்தடி பிள்ளையார். நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலுக்குச் செல்லும் வழியில் இந்த விநாயகர் கோவில் கொண்டுள்ளார். இவரை வணங்கினால் தடைகள் அகலும்.

* சின்னக் காஞ்சியில் வரதராஜப் பெருமாள் கோவிலின் கீழ் பிரகாரத்தில் மேடை மீதுள்ள அறையில் ஒரு விநாயகர் வீற்றிருக்கிறார். இவரது உடல் முழுவதும் விபூதி நிறைந்திருக்கும். இவரை ‘விபூதி விநாயகர்’ என்று அழைக்கிறார்கள்.

* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் சன்னிதியில், கோபுர வாசலுக்கு மேல் இடது பக்கமாக வலம்புரி விநாயகர் விற்றிருந்து அருள்கிறார். இவரது திருமேனியில் வெண்ணெய் சாத்தப்படுகிறது.

* புனேயில் இருந்து 65 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது மோர்கான் என்னும் கிராமம். இங்கு மயூரேஷ்வர் என்ற பெயரில் விநாயகர் அருள்பாலிக்கிறார். ஆதிசங்கரர் பூஜித்த இந்த விநாயகருக்கு, வைரத்தில் கண்கள் பதிக்கப்பட்டுள்ளன. இந்த விநாயகருக்கு குங்குமத்தால் இடைவிடாமல் அர்ச்சனை செய்யப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com