ஆழ்வார்திருநகரி தூய அன்னம்மாள் ஆலய சப்பர பவனி

ஆழ்வார்திருநகரி தூய அன்னம்மாள் ஆலய சப்பர பவனி நடந்தது. இதில் பலர் கலந்து கொண்டனர்.
ஆழ்வார்திருநகரி தூய அன்னம்மாள் ஆலய திருவிழா சப்பர பவனி நடந்த போது எடுத்த படம்.
ஆழ்வார்திருநகரி தூய அன்னம்மாள் ஆலய திருவிழா சப்பர பவனி நடந்த போது எடுத்த படம்.
Published on

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் உள்ள தூய அன்னம்மாள் ஆலய திருவிழா கடந்த மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா 10 நாட்கள் நடந்தது. கடந்த 5-ந் தேதி நற்கருணை பவனி நடந்தது. நேற்று முன்தினம் இரவில் குரும்பூரை சேர்ந்த அமல் தலைமையில் மாலை ஆராதனை நடந்தது. இதில் பலர் கலந்து கொண்டனர்.

நேற்று காலை 7.30 மணிக்கு திருவிழா திருப்பலி நடந்தது. திருப்பலிக்கு லூசியா மையத்தை சேர்ந்த கிராசிஸ் மைக்கேல் தலைமை தாங்கினார். அதனை தொடர்ந்து மதியம் 12 மணிக்கு சப்பர பவனி நடந்தது. சப்பர பவனியானது ஆழ்வார்திருநகரி பஜார் பகுதி வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. மாலை 5 மணிக்கு ஆலய திருவிழா கொடி இறக்கத்துடன் நற்கருணை ஆசீர் நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com