கிரக தோஷங்கள் விலக அனுமன் ஸ்லோகம்

அனுமனுக்கு உகந்த சனிக்கிழமைகளில் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வந்தால் அனுமன் அருள் கிட்டும். கிரக தோஷங்கள் விலகும்.
கிரக தோஷங்கள் விலக அனுமன் ஸ்லோகம்
Published on

அதுலித பலதாமம் ஸ்வர்ண

சைலாபதேஹம்தநுஜவன க்ருசாநும்

ஞானினாமக்ரகண்யம்

ஸகல குண நிதானம் வானராணாமதீசம்

ரகுபதிவரதூதம் வாதஜாதம் நமாமி

- ஹனுமத் ஸ்லோகம்

பொதுப்பொருள் :

நிகரில்லாத பலம் கொண்டவரே, ஸ்வர்ண பர்வதம் போன்ற ஒளி மிகுந்த தேகம் கொண்டவரே, வனம்போல் மிகுந்த ராட்சஸ குலத்தை பொசுக்கும் தீ போன்றவரே, ஞானிகளின் தலைவரே, ஸகல ஸத்குண நிலையமாக உடையவரே, குரங்கு குணத்தையே மாற்றும் புத்தி திறமை உள்ளவரே, ராமனுக்கு தூதனாக சென்றவரே, வாதத் திறமை கொண்டவரே, தங்களை வணங்குகிறேன். இத்துதியை ஹனுமத் ஜெயந்தி அன்று ஆரம்பித்து பின் தொடரும் சனிக்கிழமைகளில் பாராயணம் செய்து வந்தால் அனுமன் அருள் கிட்டும். கிரக தோஷங்கள் விலகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com