பட்டாபிராம் அருகே வாலிபரை தாக்கியவர் கைது

பட்டாபிராம் அருகே வாலிபரை கத்தியால் தலையில் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
கைது
கைது
Published on

ஆவடி:

பட்டாபிராம் அடுத்த அண்ணம்பேடு பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கவுதம் (20). இவர் கடந்த 1-ந் தேதி பட்டாபிராம் தண்டுரை பகுதியில் உள்ள ஒரு கடையில் சூப் குடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த பட்டாபிராம் வள்ளலார் நகர் முதல் தெரு சேர்ந்த மகேஷ் குமார் மற்றும் அவரது நண்பர் பில்லா என்ற சுரேஷ் ஆகிய இருவரும் கவுதமிடம் தகராறில் ஈடுபட்டு அவரை கத்தியால் தலையில் வெட்டினர்.

இதில் படுகாயமடைந்த கவுதம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து பட்டாபிராம் போலீசார் வழக்கு பதிவு செய்து பில்லா என்ற சுரேசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மகேஷ்குமாரை பட்டாபிராம் போலீசார் நேற்று கைது செய்தனர். அவரை திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com