கீரிப்பாறை அருகே பெண்ணை செக்சுக்கு அழைத்த வாலிபர் கைது

கீரிப்பாறை அருகே இரவு நேரத்தில் பெண்ணை செக்சுக்கு அழைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

நாகர்கோவில்:

கீரிப்பாறை பகுதியை சேர்ந்த 34 வயது இளம்பெண் ஒருவர் தனது குழந்தைகளுடன் அந்த பகுதியில் வசித்து வருகிறார். இவரது கணவர் கேரளாவில் தங்கி மர வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் இளம்பெண் சம்பவத்தன்று வீட்டில் தனது குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது இரவு தனது வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டு எழுந்து பார்த்தார். அங்கு வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர் இளம்பெண்ணை செக்சுக்கு அழைத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் வாலிபரை கண்டித்து பேசினார். இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர் அந்த பெண்ணை ஆபாசமாக பேசி அங்கிருந்து தப்பி சென்றார்.

இதுகுறித்து இளம்பெண் கீரிப்பாறை போலீசில் புகார் செய்தார். சப்- இன்ஸ்பெக்டர் சுந்தரலிங்கம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாராயண பிள்ளை மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில் இளம்பெண்ணை செக்சுக்கு அழைத்தது அதே பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com