வில்லாபுரம் அருகே பெண்ணிடம் நகை பறிப்பு

வீடு புகுந்து கத்தி முனையில் பெண்ணை மிரட்டி 3 பவுன் நகையை 2 பேர் பறித்துச் சென்றனர்.
வில்லாபுரம் அருகே பெண்ணிடம் நகை பறிப்பு
Published on

மதுரை:

வில்லாபுரம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவர் உமா மகேஸ்வரி. இவர் வீட்டில் தனியாக இருந்தபோது 2 வாலிபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் கத்தியை காட்டி உமா மகேஸ்வரியை மிரட்டி அவர் அணிந்திருந்த தங்க வளையல்களை கேட்டனர்.

ஆனால் அவர் தர மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம மனிதர்கள் கத்தியால் உமா மகேஸ்வரி முகத்தில் கீறினர்.

இதில் காயமடைந்த அவர் உயிருக்கு பயந்து கைகளில் அணிந்திருந்த 3 பவுன் வளையல்களை கழற்றிக் கொடுத்துவிட்டார்.

இது குறித்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com