வில்லாபுரம் பகுதியில் 21-ந்தேதி மின் நிறுத்தம்

வில்லாபுரம் பகுதிகளில் வருகிற 21-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மின் சப்ளை நிறுத்தப்படுகிறது.
வில்லாபுரம் பகுதியில் 21-ந்தேதி மின் நிறுத்தம்
Published on

மதுரை:

மதுரை மேற்கு மின் வினியோக செயற்பொறியாளர் ராஜா காந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வில்லாபுரம் துணை மின் நிலையத்தில் வருகிற 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

எனவே அந்த நேரத்தில் வில்லாபுரம் ஹவுசிங் போர்டு, சின்ன கண்மாயின் மேற்கு பகுதிகள் எப்.எப்.ரோடு, வில்லாபுரம் கிழக்கு பகுதிகள், மணிகண்டன் நகர், அரவிந்த் தியேட்டர் பகுதிகள், ஜெய்ஹிந்த்புரம் மற்றும் 2-வது மெயின் வீதி, பாரதியார் ரோடு, ஜீவாநகர் 1 மற்றும் 2-வது தெரு, மீனாம்பிகை நகர், தென்றல் நகர், சோலையழகுபுரம் 1-வது மற்றும் 3-வது தெரு, அருணாசலம் பள்ளி பகுதிகள், முருகன் தியேட்டர் பகுதிகள், எம்.கே.புரம், சுப்பிரமணியபுரம், வெங்கடாசலபுரம், மதுரை கல்லூரி, தமிழ்நாடு பாலிடெக்னிக் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மின் வினியோகம் தடைபடும்.

மேற்கண்டவாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com