நடராஜன் மறைவு: சசிகலாவுக்கு விஜயசாந்தி- அய்யாக்கண்ணு நேரில் ஆறுதல்

நடராஜன் மரணம் அடைந்ததையொட்டி, தஞ்சை அருளானந்தநகரில் உள்ள அவருடைய வீட்டிற்கு விஜயசாந்தி மற்றும் அய்யாக்கண்ணு ஆகியோர் நேரில் சென்று சசிகலாவை சந்தித்து ஆறுதல் கூறினர்.
சசிகலா வீட்டுக்கு விஜயசாந்தி மற்றும் அய்யாக்கண்ணு ஆகியோர் வந்த போது எடுத்த படம்.
சசிகலா வீட்டுக்கு விஜயசாந்தி மற்றும் அய்யாக்கண்ணு ஆகியோர் வந்த போது எடுத்த படம்.
Published on

தஞ்சாவூர்:

சசிகலாவின் கணவர் நடராஜன் கடந்த 20-ந் தேதி மரணம் அடைந்தார். இதையொட்டி பெங்களூர் சிறையில் இருந்து சசிகலாவுக்கு 15 நாள் பரோல் கிடைத்தது. பின்னர் நடராஜனின் இறுதி சடங்கில் சசிகலா கலந்து கொண்டார்.

சசிகலாவுக்கு வருகிற 30-ந் தேதியுடன் பரோல் முடிவடைகிறது. இதனால் அவர் தஞ்சை அருளானந்த நகரில் உள்ள வீட்டில் இருந்து வருகிறார்.

சசிகலாவை கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் என பலரும் சந்தித்து நடராஜன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகையும், முன்னாள் எம்.பி.யுமான விஜயசாந்தி நேற்று விமானம் மூலம் திருச்சி வந்து பின்னர் அங்கிருந்து காரில் தஞ்சை வந்தார்.

பின்னர் அவர் சசிகலாவின் கணவருமான நடராஜன் மரணம் அடைந்ததையொட்டி, தஞ்சை அருளானந்தநகரில் உள்ள அவருடைய வீட்டிற்கு சென்று சசிகலாவை சந்தித்து ஆறுதல் கூறினார்.

அவர் சுமார் 2 மணி நேரம் கழித்து வெளியே வந்தார். அதன் பின்னர் விஜயசாந்தி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

அவரைத்தொடர்ந்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு, சசிகலாவை சந்தித்து ஆறுதல் கூறினார். #Tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com