உக்ரைன் நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி
உக்ரைன் நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி

விமான விபத்து பற்றி வதந்தி பரப்ப வேண்டாம் - உக்ரைன் அதிபர்

விமான விபத்து பற்றி யூகங்களின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்படாத கருத்துகளை தெரிவிக்க வேண்டாம் என உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.
Published on

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் நேற்று புறப்பட்டு சென்ற உக்ரைன் நாட்டுக்கு சொந்தமான போயிஸ் ரக விமானம் சில நிமிடங்களில் லாஜ் அபத் என்ற பகுதியில் உள்ள விவசாய இடத்தில் விழுந்து நொறுங்கியது. விமானம் தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணம் செய்த 176 பேரும் பலியானார்கள்.

ஈரானியர்கள் 82 பேரும், கனடாவை சேர்ந்த 63 பேரும், உக்ரைனை சேர்ந்த 11 பேரும், சுவீடனை சேர்ந்த 10 பேரும், ஆப்கானிஸ்தானை சேர்ந்த 4 பேரும், ஜெர்மனி, இங்கிலாந்தை சேர்ந்த தலா 3 பேரும் உயிரிழந்தனர். இதில் 15 சிறுவர்கள் அடங்குவர்.

தொழில் நுட்ப கோளாறு காரணமாக விமான விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அமெரிக்கா- ஈரான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழ்நிலையில் விமானம் விழுந்து நொறுங்கி உள்ளதால் சுட்டு வீழ்த்தப்பட்டது என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com