பாம்பன் பாலத்தில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து: 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

பாம்பன் பாலத்தில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துகுள்ளானதால் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
பாம்பன் பாலத்தில் கவிழ்ந்து கிடக்கும் சரக்கு லாரி
பாம்பன் பாலத்தில் கவிழ்ந்து கிடக்கும் சரக்கு லாரி
Published on

ராமேசுவரம்:

ராமேசுவரம் தீவையும், மண்டபத்தையும் இணைக்கும் வகையில் கடலில் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தை நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.

இந்த நிலையில் இன்று அதிகாலை கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து சரக்கு லாரி ராமேசுவரத்துக்கு சென்று கொண்டிருந்தது. பாம்பன் பாலத்தில் சரக்கு லாரி வேகமாக சென்றது.

அப்போது சாலையில் இருந்த வேகத்தடையை டிரைவர் கவனிக்கவில்லை. இதனால் வேகமாக வந்த அந்த லாரி வேகத்தடை மீது ஏறியபோது கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் கவிழ்ந்தது. இதில் லாரியில் வந்த டிரைவர் தினேஷ் உள்பட 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

விபத்து குறித்து தகவல் அறிந்த பாம்பன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் பாம்பன் பாலத்தில் கவிழ்ந்து கிடந்த லாரியை அப்புறப்படுத்த உடனடி நடவடிக்கை மேற்கொண்டனர்.

2 மணி நேரத்துக்கு பின் கிரேன் உதவி மூலம் சரக்கு லாரி அப்புறப்படுத்தப்பட்டது. இந்த விபத்தால் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் இருபுறமும் வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணி வகுத்து நின்றன. #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com