தொட்டியம் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்

தொட்டியம் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலிக் குடங்களுடன் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
தொட்டியம் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்
Published on

தொட்டியம்:

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள கிடாரம் கிராமத்தில் குடிநீர் சரிவர வழங்கப்படவில்லை. மேலும் புதியதாக குடிநீர் குழாய் பதித்து தருவதாக கூறி நீண்ட நாட்களாக குழாய் பதிக்கும் பணி தொடங்கவில்லை எனக்கூறி கிடாரம் பஸ் நிறுத்தம் அருகில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் காலிக் குடங்களுடன் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தொட்டியம் வட்டார வளர்ச்சி அலுவலர்(ஊராட்சிகள்) ரேவதி, போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் கிடைக்க நடவடிக்கை உரிய எடுக்கப்படும் என்றதும் பெண்களும் பொதுமக்களும் சாலை மறியலை கை விட்டனர்.

இந்த சாலை மறியல் காரணமாக கிடாரம்- மோகனூர் சாலையில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com