திருவாரூர் அருகே சேலையில் தீப்பிடித்து பெண் பலி

திருவாரூர் அருகே சேலையில் தீப்பிடித்து பெண் பலி

திருவாரூர் அருகே சமையல் செய்த போது சேலையில் தீப்பிடித்ததில் பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
Published on

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள அபிவிருத்தீஸ்வரத்தை சேர்ந்தவர் செல்வம். இவர் திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பெயர் மேனகா (வயது 35). இவர் அபிவிருத்தீஸ்வரத்தில் விவசாய வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு திருமணம் ஆகி 15 வருடம் ஆகிறது. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

இந்தநிலையில் மேனகா கடந்த 1- ந்தேதி தனது வீட்டில் சமையல் செய்தார். அப்போது அவரது சேலையில் தீப்பிடித்துள்ளது. தீ மளமளவென உடல் முழுவதும் பரவியதால் கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைத்து மேனகாவை திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த மேனகா பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து மேனகாவின் தாயார் சாவித்திரி கொரடாச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் கொரடாச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com