இங்கிலாந்து பிரதமர் தெரசா மே மந்திரிசபை மாற்றம் - இந்தியாவை சேர்ந்த 2 எம்.பி.களுக்கு துணை மந்திரி பதவி

இங்கிலாந்து பிரதமர் தெரசா மே தனது மந்திரிசபையை மாற்றி அமைத்து உள்ளார். அதில் இந்தியாவை சேர்ந்த 2 எம்.பி.களுக்கு துணை மந்திரி பதவி கிடைத்து உள்ளது.
இங்கிலாந்து பிரதமர் தெரசா மே மந்திரிசபை மாற்றம் - இந்தியாவை சேர்ந்த 2 எம்.பி.களுக்கு துணை மந்திரி பதவி
Published on

லண்டன்:

இங்கிலாந்து பிரதமர் தெரசா மே தனது மந்திரிசபையை மாற்றி அமைத்து உள்ளார். அதில் இந்தியாவை சேர்ந்த  2 எம்.பி.களுக்கு துணை மந்திரி பதவி கிடைத்து உள்ளது.

2 பேரில் ஒருவர், ரிஷி சுனக். மற்றொருவர் சுயல்லா பெர்னாண்டஸ்.

37 வயதான ரிஷி சுனக் இங்கிலாந்தில் பிறந்தவர். ‘இன்போசிஸ்’ நிறுவனத்தின் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகன். நாராயண மூர்த்தியின் மகள் அக்‌ஷதாவை திருமணம் செய்து கொண்டு உள்ளார். இவர் ரிச்மாண்ட் தொகுதி எம்.பி. ஆவார். இவருக்கு வீட்டு வசதித்துறை, உள்ளாட்சித்துறை வழங்கப்பட்டு உள்ளது.

37 வயதான சுயல்லா பெர்னாண்டசும் இங்கிலாந்தில் பிறந்தவர்தான். கோவாவை பூர்வீகமாக கொண்ட பெண் தலைவரான இவர் பார்ஹாம் தொகுதி எம்.பி. ஆவார். இவருக்கு ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவது தொடர்பான துறை ஒதுக்கப்பட்டு உள்ளது.

இவர்கள் இருவரும் ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது தொடர்பாக நடந்த பொதுவாக்கெடுப்பின்போது, அதற்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்தவர்கள் ஆவார்கள்.  #tamilnews 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com