புறா பிடிக்க சென்றவர் கிணற்றில் தவறி விழுந்து பலி - போலீசார் விசாரணை

தாந்தோன்றிமலை அருகே புறா பிடிக்க சென்றவர் கிணற்றில் தவறி விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

கரூர்:

சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதிக்குட்பட்ட வெடிக்காரனூர் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன்(வயது 23). இவர் கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலை அருகே உள்ள காளியப்பனூர் பகுதியில் தங்கியிருந்து கொத்தனராக பணியாற்றி வந்தார். வேல்முருகனுடன் அவரது உறவினர் ராஜா (23) என்பவரும் தங்கியிருந்து வேலைபார்த்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் வேல்முருகன், ராஜா ஆகிய 2 பேரும் தாந்தோன்றிமலை அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு புறா பிடிக்க சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு கிணற்றினுள் புறா ஒன்று இருந்தது. இதையடுத்து கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி வேல்முருகன் புறாவை பிடிக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக மண் சரிந்து வேல்முருகன் கிணற்றுக்குள் தவறி விழுந்து படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதைக்கண்ட ராஜா அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தாந்தோன்றிமலை போலீசாருக்கு சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் கிணற்றில் தவறி விழுந்து இறந்த வேல்முருகனை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ராஜா தாந்தோன்றிமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வருகின்றனர். புறா பிடிக்க சென்றவர் கிணற்றில் தவறி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com