தவளக்குப்பம் அருகே தாய் இறந்த வேதனையில் வாலிபர் தற்கொலை

தவளக்குப்பம் அருகே தாய் இறந்த வேதனையில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

பாகூர்:

தவளக்குப்பம் அருகே தானம்பாளையம் குபேர் நகரை சேர்ந்தவர் பூமிநாதன். இவரது மகன் அப்பு என்ற பிரபாகரன் (வயது25), கட்டிட தொழிலாளி. இவருக்கு சரண்யா (27) என்ற அக்காவும், ஒரு தம்பியும் உள்ளனர்.

இதற்கிடையே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பிரபாகரனின் தாய் புற்றுநோய் காரணமாக இறந்து போனார். தாய் இறந்த சோகத்தில் பிரபாகரன் இருந்து வந்தார். மேலும் திருமணமாகாத தனது அக்காளுக்கு எப்படி திருமணம் செய்து வைக்க போகிறோம் என்ற கவலையுடன் இருந்து வந்தார். இதனால் யாருடனும் பிரபாகரன் சரியாக பேசுவது இல்லை.

இந்த நிைலியல் திடீரென தற்கொலை முடிவை கையில் எடுத்த பிரபாகரன் நேற்று இரவு வீட்டில் மின்விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவரது அக்காள் சரண்யா கொடுத்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com