தவளக்குப்பம் அருகே மூதாட்டி தூக்கு போட்டு தற்கொலை

தவளக்குப்பம் அருகே நோய் கொடுமையால் மூதாட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

புதுச்சேரி:

தவளக்குப்பம் அருகே அபிஷேகப்பாக்கம் புது நகரை சேர்ந்தவர் முனு சாமி. இவரது மனைவி கோணம்மாள் (வயது 76). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முனுசாமி இறந்து விட்டதால் கோணம்மாள் தனது மகன் முத்துகிருஷ்ணன் பராமரிப்பில் இருந்து வந்தார்.

இதற்கிடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கோணம்மாளுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. அதற்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீட்டில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் கோணம்மாளுக்கு நோய் கொடுமை அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சமையல் அறையில் சிமெண்டு ஜன்னலில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com