வில்லாபுரம் பகுதியில் 10-ந் தேதி மின்சாரம் நிறுத்தம்

வில்லாபுரம் பகுதியில் 10-ந் தேதி மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மின்சாரம் நிறுத்தம்
மின்சாரம் நிறுத்தம்
Published on

மதுரை:

மதுரை வில்லாபுரம் துணை மின்நிலையத்தில் வருகிற 10-ந் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வில்லாபுரம் ஹவுசிங்போர்டு, சின்ன கண்மாயின் மேற்கு பகுதிகள், எப்.எப்.ரோடு, வில்லாபுரம் கிழக்கு பகுதிகள், மணிகண்டன் நகர், அரவிந்த் தியேட்டர், ஜெய்ஹிந்த்புரம் 1,2-வது மெயின்வீதி, பாரதியார் ரோடு, ஜீவாநகர் 1, 2-வது தெரு, மீனாம்பிகை நகர், தென்றல் நகர், சோலையழகுபுரம் 1-வது முதல் 3-வது தெரு, அருணாசலம் பள்ளி பகுதிகள், முருகன் தியேட்டர் பகுதிகள், எம்.கே.புரம், சுப்ரமணியபுரம் பகுதிகள், சுந்தர்ராஜபுரம், மதுரை கல்லூரி தமிழ்நாடு பாலிடெக்னிக் பகுதிகள், டி.வி.எஸ். நகர், வெங்கடாசலபுரம், கிருஷ்ணாரோடு, மீனாட்சிநகர், ராஜம்ரோடு, சத்தியசாய் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் ராஜாகாந்தி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com