வெண்ணந்தூர் அருகே எலக்ட்ரீசியன் விஷம் குடித்து தற்கொலை

வெண்ணந்தூர் அருகே எலக்ட்ரீசியன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

வெண்ணந்தூர்:

வெண்ணந்தூர் அடுத்த மின்னக்கல் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மகன் மேகநாதன் (வயது 28). எலக்ட்ரீசியன். இவர் கடந்த 8-ந் தேதி அன்று குடும்பத்தகராறு காரணமாக மனமுடைந்த நிலையில காணப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதையடுத்து அன்று வேதனையில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் மேகநாதனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவருடைய மனைவி அபிராமி வெண்ணந்தூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் கோமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com