வெண்ணந்தூர் அருகே கார் மோதி முதியவர் பலி

வெண்ணந்தூர் அருகே கார் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

வெண்ணந்தூர்:

வெண்ணந்தூரை அடுத்த கோம்பைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி (வயது 65), விவசாயி. இவர் தேங்கல்பாளையம் பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்துக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பினார். அப்போது தேங்கல்பாளையம் பிரிவு அருகே சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது நாமக்கல் பகுதியில் இருந்து சேலம் நோக்கி அதிவேகமாக வந்த கார் துரைசாமி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வெண்ணந்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து துரைசாமியின் மகன் கோவிந்தராஜ் (40) வெண்ணந்தூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்துக்குள்ளான கார் டிரைவர் சம்பவ இடத்திலேயே காரை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com