தொட்டியம் அருகே விபத்தில் தள்ளுவண்டி கடைக்காரர் பலி

தொட்டியம் அருகே வேன் மீது மொபட் மோதிய விபத்தில் தள்ளுவண்டி கடைக்காரர் பரிதாபமாக இறந்தார்.
முருகேசன்
முருகேசன்
Published on

தொட்டியம்:

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள காமலாபுரம் புதூரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 48). இவர் நாமக்கல் மாவட்டம் செவந்திபட்டியில் தள்ளுவண்டி கடை வைத்து நடத்தி வந்தார். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்து தனது மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்குள்ள பஸ்நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த வேனின் பின்னால் மொபட் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்த புகாரின் பேரில் தொட்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com