திருக்கோவிலூர் அருகே விபத்தில் முதியவர் பலி

திருக்கோவிலூர் அருகே விபத்தில் முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருக்கோவிலூர்:

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா மேல்பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சீனுவாசன்(53). சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் மணலூர்பேட்டை-திருவண்ணாமலை சாலையில் சென்று கொண்டிருந்தார். முருக்கம்பாடி அருகே வந்த போது அவ்வழியே சைக்கிள் ஓட்டிவந்த அதே கிராமத்தை சேர்ந்த மாசிலாமணி மீது மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது. 

இதில் படுகாயம் அடைந்த சீனுவாசன், மாசிலாமணி ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து சீனிவாசனை மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து மணலூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com