காரமடை அருகே ஓடும் காரில் திடீர் தீ விபத்து

மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் பாலசுந்தரம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைப்பதற்கு முன்னரே கார் முற்றிலும் எரிந்து சேதமானது.
தீ விபத்து
தீ விபத்து
Published on

காரமடை:

கோவை மாவட்டம் காரமடை பகுதியைச் சேர்ந்தவர் சையத். இவர் காரமடை பகுதியில் கிரில் ஒர்க் ஷாப் வைத்துள்ளார்.

இவர் நேற்று வீட்டில் பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது காரை பெட்ரோல் போடுவதற்காக தென்திருப்பதி நால்ரோடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குக்கு தனது நண்பர்கள் 2 பேருடன் வந்து கொண்டிருந்தார். அப்போது பெள்ளாதி அருகே வி.வி. கார்டன் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது காரின் முன் பகுதியில் இருந்து கருகும் வாடை வந்துள்ளது.

இந்நிலையில் சையத் காரை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கி பார்த்துள்ளார். காரிலிருந்து கரும்புகையுடன் என்ஜினில் இருந்து தீப்பற்றி உள்ளது. பின்னர் மளமளவென முன்பகுதி தீப்பற்றி கார் எரியத் துவங்கியுள்ளது. இதையடுத்து உடனடியாக அவர் அருகிலிருந்த தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் பாலசுந்தரம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைப்பதற்கு முன்னரே கார் முற்றிலும் எரிந்து சேதமானது. இது குறித்து காரமடை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com