பள்ளி மாணவி பலாத்காரம்- வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

திருச்செங்கோட்டில் ஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கைது
கைது
Published on

எலச்சிப்பாளையம்:

திருச்செங்கோடு சீத்தாராம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சூர்யா (வயது 18). இவர் ஸ்டிக்கர் ஒட்டும் கடையில் வேலை செய்து வந்தார். இவர் கருவேப்பம்பட்டி பகுதியை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. 

இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். இதையடுத்து அந்த மாணவியின் பெற்றோர், வாலிபர் சூர்யா மீது திருச்செங்கோடு அனைத்து மகளிர் போலீ்ஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் சூர்யா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com