தேனி அருகே பிளாஸ்டிக் முட்டை விற்பனை?

வருசநாடு பகுதியில் பிளாஸ்டிக் முட்டை விற்கப்படுகிறதா என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
முட்டை
முட்டை
Published on

தேனி:

தேனி அருகே உள்ள வருசநாட்டை சேர்ந்தவர் செல்வம். இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள மளிகை கடை ஒன்றில் கோழி முட்டைகள் வாங்கினார். பின்னர் வாங்கிய முட்டைகளை வேகவைத்து செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் சாப்பிட்டனர். இந்தநிலையில் நேற்று காலை சாப்பிடாமல் மீதமிருந்த வேகவைக்கப்பட்ட 2 முட்டைகளை செல்வம் அப்புறப்படுத்த முயன்றார்.

அப்போது அந்த முட்டைகள் சற்று வித்தியாசமாக தெரிந்ததால், அதை உடைத்து பார்த்தார். அப்போது அவை வழக்கமான முட்டைகளை விட கடினமாக இருந்தது. மேலும் அந்த முட்டைகளில் எந்தவித வாசனையும் வெளிவரவில்லை. இதனால் அவை பிளாஸ்டிக் முட்டையாக இருக்கலாமோ? என்று சந்தேகம் அடைந்த செல்வம், முட்டைகளை உடைத்ததை வீடியோவாக எடுத்து வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். இந்த வீடியோவை பார்த்த ஏராளமானோர், தங்களது மற்ற நண்பர்களுக்கும் பகிர்ந்தனர்.

இதனால் அந்த வீடியோ வைரலாகி, வருசநாடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே வேளையில் பிளாஸ்டிக் முட்டை விற்கப்படுகிறதா என்ற அச்சமும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. எனவே இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com