நாமக்கல்லில் மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி நாமக்கல்லில் மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

நாமக்கல்:

மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அகதுல்லா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜா முகமது முன்னிலை வகித்தார். தலைமை கழக பிரதிநிதி சாதிக் பாஷா கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் மாவட்ட பொருளாளர் ஆபித், துணைத்தலைவர் ஜெகுபர் அலி, சமூகநீதி மாணவர் இயக்க செயலாளர் யாசின் மற்றும் நகர கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணை செயலாளர் ஜின்னா நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com