வேதாரண்யம் பகுதியில் விபத்தில் பள்ளி தலைமையாசிரியர் பலி

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் பள்ளி தலைமையாசிரியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து
விபத்து
Published on

வேதாரண்யம்:

வேதாரண்யம் அடுத்த வேட்டைக்காரனிருப்பு காவல் சரகம் விழுந்தமாவடி மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 50). இவர் சின்னதும்பூர் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர். சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் செல்லும் பொழுது கள்ளிமேடு கடைத்தெருவில் நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார்.

அவரை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். புகாரின்பேரில் வாய்மேடு இன்ஸ்பெக்டர் பொறுப்பு கன்னிகா, சப்-இன்ஸ்பெக்டர் பக்கிரிசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சண்முகத்திற்கு மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com