பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் இளம்பெண் தீக்குளிப்பு- கட்டிட தொழிலாளி கைது

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் இளம் பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இதுதொடர்பாக கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

வையம்பட்டி:

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் இளம் பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இந்த சம்பவம் குறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

திருச்சி மாவட்டம் வையம்பட்டியை அடுத்த பேச்சக்காம்பட்டியை சேர்ந்தவர் அருண் பாண்டியன்(வயது 28). கட்டிட தொழிலாளியான இருவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இவர் பஸ்சில் வேலைக்கு சென்று வந்த போது, வையம்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண் அறிமுகம் ஆனார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த அந்த இளம்பெண் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்தார்.

அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை பெற்றுவரும் அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், கடந்த 12-ந்தேதி வீட்டில் தனியாக இருந்த தன்னை அருண்பாண்டியன் பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து அந்த பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் வையம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் வழக்குப்பதிவு செய்து அருண்பாண்டியனை கைது செய்தார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com